Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு book back question and answer
Tamilnadu state board 8th tamil unit 2 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.2 கோணக்காத்துப் பாட்டு
கற்பவை கற்றபின்
Question 1.
மக்களைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றி எழுதுக.
Answer:
நில நடுக்கங்கள் :
- நில நடுக்கங்கள் ஏற்படும் பொழுது மக்களையோ அல்லது விலங்குகளையோ அது பாதிப்பதில்லை. நில நடுக்கத்தின் காரணமாக, இரண்டாம் பட்ச நிகழ்வுகளான கட்டிடங்கள் பாழடைந்து சரிதல், சுனாமி உருவாகுதல், எரிமலை வெடித்தல் போன்ற நிகழ்வுகளின் பின்னணியில் மக்களுக்குப் பேரழிவுகளுடன் பேரிழப்பும் ஏற்படுகிறது.
எரிமலை வெடித்துச் சிதறுதல் :
- ஒரு எரிமலை, வெடித்துப் பேரழிவாக சிதறும் போது ‘லார்வா’ தீக்குழம்பு வெளிப்படும். அதில் மிகையான வெப்பத்துடன் கூடிய உள்ளிருக்கும் பாறைகள் இருக்கும். அதனுள் பல்வேறு வேறுபட்ட வடிவங்கள் மென்மைத் துகளாகவும், பிசு பிசுப்பாகவும் இருக்கும். இது எரிமலையில் இருந்து சிதறும் போது எதிரில் காணும் கட்டடங்கள் மற்றும் தாவரங்கள் எல்லாவற்றையும் பொசுக்கி அழித்துவிடும்.
வெள்ளப் பெருக்கு :
- நீரோட்டத்தின் வலிமையானது மிகவும் அதிகரிக்கின்ற போது ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும். அது ஆற்றின் பாதையைத் தாண்டி பெருக்கெடுத்து ஓடி கரையோரம் ஒட்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குச் சேதம் உண்டாக்குகிறது.
சுனாமி :
- சுனாமி என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் மிகுதியாகப் பெருமளவு நீர் இடம் பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம், மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூல காரணிகளாகும். இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும்.
சூறாவளி, புயல் :
- இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சூறாவளியின் போது உருவாகும் மழை மேகங்கள் குறுகிய காலகட்டத்தில் அதிக அளவு மழையையும் பலத்த காற்றையும் கொண்டு வரும். இதனால் பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் அதிகமாக ஏற்படும்.
காட்டுத் தீ:
- காட்டுத் தீ என்பது, எரியக் கூடிய தாவரங்களைக் கொண்ட காட்டுப் பகுதிகளில் அல்லது நாட்டுப்புறப் பகுதிகளில் கட்டுக்கு அடங்காமல் எரியும் தீயைக் குறிக்கும். இதன் பெரிய அளவு தொடங்கிய இடத்திலிருந்து பரவிச் செல்லும் வேகம் எதிர்பாராமல் திசை மாறக்கூடிய தன்மை; சாலைகள், ஆறுகள் போன்ற இடைவெளிகளைக் கடந்து செல்லும் திறன் என்பவை காட்டுத்தீயைப் பிற தீ வகைகளில் இருந்து வேறுபடுத்துகின்றன. இதனால் பல உயிர்கள் எரிந்து சாம்பலாகின்றன. கடந்த ஆண்டு குரங்கனி காட்டுத்தீ பாதிப்பு நாம் அறிந்ததே.
Question 2.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய புகைப்படங்களை நாளேடுகளிலிருந்து திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வானில் கரு …………………. தோன்றினால் மழை பொழியும் என்பர்.
அ) முகில்
ஆ) துகில்
இ) வெயில்
ஈ) கயல்
Answer:
அ) முகில்
Question 2.
முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் …………….. யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை
ஆ) காலனை
இ) ஆற்றலை
ஈ) நலத்தை
Answer:
ஆ) காலனை
Question 3.
‘விழுந்ததங்கே’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) விழுந்த + அங்கே
ஆ) விழுந்த + ஆங்கே
இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது + ஆங்கே
Answer:
இ) விழுந்தது + அங்கே
Question 4.
‘செத்திறந்த’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) செ + திறந்த
ஆ) செத்து + திறந்த
இ) செ + இறந்த
ஈ) செத்து + இறந்த
Answer:
ஈ) செத்து + இறந்த
Question 5.
பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) பருத்தி எல்லாம்
ஆ) பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம்
ஈ) பருத்திதெல்லாம்
Answer:
ஆ) பருத்தியெல்லாம்
குறுவினா
Question 1.
கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?
Answer:
- எமனைப் போல வந்த பெருமழையும், சூழல் காற்றும் கப்பல் கவிழ்ந்ததன் காரணமாகும்.
Question 2.
புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
Answer:
- தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாகப் புயல்காற்றால் ஒடிந்து விழுந்தன.
Question 3.
கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
Answer:
- சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது.
சிறுவினா
Question 1.
புயல் காற்றினால் மரங்களுக்கு ஏற்பட்ட நிலைகளாகப் பாடல் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
Answer:
- வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின. தொண்டைமான் நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.
Question 2.
கோணக்காற்றால் வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவை?
Answer:
- திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன. அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.
சிந்தனை வினா
Question 1.
இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?
Answer:
- வெள்ளப் பெருக்குக் காலங்களில் ஆற்றோரமோ, நீர்நிலைகள் அருகிலோ வசிப்போர்கள் மேட்டுப் பகுதிக்குச் சென்று தங்குதல் வேண்டும்.
- எரிமலை வெடிக்கும் சூழலில், மலைக்கு அருகில் வசிப்போர், பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்குதல் வேண்டும்.
- காட்டுத் தீ ஏற்படும் சூழலில், காட்டிற்கு அருகில் வசிப்போர் நகர்ப்புறத்தில் வந்து தங்குதல் வேண்டும்.
- சுனாமி ஏற்படும் போது கடற்கரையில் வசிப்போர், கடலை விட்டு பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சென்று தங்குதல் வேண்டும்.
- நிலநடுக்கம் ஏற்படும் சூழலில், கட்டடத்தை விட்டு வெளியேறி வெட்ட வெளியில் தங்குதல் வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
இயற்கை ………………………. கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.
அ) ஆசை
ஆ) அன்பு
இ) சீற்றம்
ஈ) நாற்றம்
Answer:
இ) சீற்றம்
Question 2.
……………………. அடிக்கடி புயலால் பாதிக்கப்படும் பகுதி ஆகும்.
அ) டெல்லி
ஆ) பஞ்சாப்
இ) அஸ்ஸாம்
ஈ) தமிழ்நாடு
Answer:
ஈ) தமிழ்நாடு
Question 3.
திரண்டு எழுந்த …………………….. ஆல் உருவான காற்று வேகமாக அடித்தது.
அ) மேகங்கள்
ஆ) காற்றுகள்
இ) கூட்டங்கள்
ஈ) ஓசைகள்
Answer:
அ) மேகங்கள்
Question 4.
……………………. என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
அ) தொண்டை நாட்டில்
ஆ) ஆர்க்காடு
இ) மைசூர்
ஈ) வாங்கல்
Answer:
ஈ) வாங்கல்
Question 5.
பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்த நாடு ……………………
அ) தொண்டைமான் நாடு
ஆ) ஆர்க்காடு
இ) காங்கேய நாடு
ஈ) தெத்துக்காடு
Answer:
இ) காங்கேய நாடு
Question 6.
கோணக்காத்துப் பாட்டு பாடலில் கவிஞர் வேண்டும் தெய்வம் …………………….
அ) சிவன்
ஆ) திருமால்
இ) முருகன்
ஈ) பெருமாள்
Answer:
இ) முருகன்
Question 7.
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் ……………………….. பாடல்களாகப் பாடினர்.
அ) ஒப்பாரி
ஆ) கும்மி
இ) வள்ளை
ஈ) சடங்கு
Answer:
ஆ) கும்மி
Question 8.
புலவர் ……………………… தொகுத்தது பஞ்சக் கும்மிகள் என்னும் நூல்.
அ) மீரா
ஆ) வீரா
இ) முரசு
ஈ) செ. இராசு
Answer:
ஈ) செ. இராசு
Question 9.
…………………… இயற்றிய காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் பாடமாக அமைந்துள்ளது.
அ) அரங்கநாதன்
ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்
இ) கோதை நாயகி
ஈ) சி.சு. செல்லப்பா
Answer:
ஆ) வெங்கம்பூர் சாமிநாதன்
Question 10.
‘மார்க்கம் + ஆன’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) மார்க்கம் ஆன
ஆ) மார்க்கமென
இ) மார்க்கமான
ஈ) மார்க்கம்மேன
Answer:
இ) மார்க்கமான
Question 11.
‘வேகம் + உடன்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) வேகவுடன்
ஆ) வேகம்உடன்
இ) வேகம்வூடன்
ஈ) வேகமுடன்
Answer:
ஈ) வேகமுடன்
குறுவினா
Question 1.
இயற்கை எவ்வாறு அழிவை ஏற்படுத்தும்?
Answer:
- இயற்கைச் சீற்றம் கொண்டு பொங்கி எழுந்தால் பெரும் அழிவை ஏற்படுத்திவிடும்.
Question 2.
புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதி எது?
Answer:
- தமிழ்நாடு புயலால் அடிக்கடி தாக்கப்படும் பகுதியாகும்.
Question 3.
வீடுகளின் கூரைகள் ஏன் சரிந்தன?
Answer:
- திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.
Question 4.
எந்த ஊரில் தென்னை மரங்கள் வீணாயின?
Answer:
- வாங்கல் என்னும் ஊரில் அழகாக வைக்கப்பட்ட தென்னம்பிள்ளைகள் எல்லாம் வீணாயின.
Question 5.
எந்த நாட்டில் பருத்திச் செடிகள் சிதைந்தன?
Answer:
- அழிவில்லாத காங்கேய நாட்டின் மேட்டுப் பகுதிகளில் வளர்ந்திருந்த பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவு அடைந்து வெறும் குச்சிகளாக மாறின.
Question 6.
மாடி வீடுகள் எப்படி விழுந்தன?
மாடி வீடுகள் எப்படி விழுந்தன?
Answer:
- அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.
Question 7.
யாரெல்லாம் எப்படி அலறியபடி ஓடினர்?
Answer:
- ஆடவர்கள் மனைவி பிள்ளைகளுடன் கூ கூ’ என்று அலறியபடி ஓடினர்.
சொல்லும் பொருளும்
1. முகில் – மேகம்
2. கெடிகலங்கி – மிக வருந்தி
3. சம்பிரமுடன் – முறையாக
4. சேகரம் – கூட்டம்
5. காங்கேய நாடு – கொங்கு மண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
6. வின்னம் – சேதம்
7. வாகு – சரியாக
8. காலன் – எமன்
9. மெத்த – மிகவும்
0 Comments:
Post a Comment