Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.6 திருக்குறள் book back question and answer
Tamilnadu state board 8th tamil unit 2 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.6 திருக்குறள்
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
புகழாலும் பழியாலும் அறியப்படுவது ………………………….
அ) அடக்கமுடைமை
ஆ) நாணுடைமை
இ) நடுவுநிலைமை
ஈ) பொருளுடைமை
Answer:
இ) நடுவுநிலைமை
Question 2.
பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள் …………………….
அ) வலிமையற்றவர்
ஆ) கல்லாதவர்
இ) ஒழுக்கமற்றவர்
ஈ) அன்பில்லாதவர்
Answer:
ஆ) கல்லாதவர்
Question 3.
‘வல்லுருவம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) வல் + உருவம்
ஆ) வன்மை + உருவம்
இ) வல்ல + உருவம்
ஈ) வ + உருவம்
Answer:
ஆ) வன்மை + உருவம்
Question 4.
நெடுமை + தேர் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………..
அ) நெடுதேர்
ஆ) நெடுத்தேர்
இ) நெடுந்தேர்
ஈ) நெடுமைதேர்
Answer:
இ) நெடுந்தேர்
Question 5.
‘வருமுன்னர்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………………
அ) தற்குறிப்பேற்ற அணி
ஆ) எடுத்துக்காட்டு உவமை அணி
இ) உவமை அணி
ஈ) உருவக அணி
Answer:
இ) உவமை அணி
குறுவினா
Question 1.
சான்றோர்க்கு அழகாவது எது?
Answer:
- துலாக்கோல் போல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
Question 2.
பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
- தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது.
Question 3.
‘புலித்தோல் போர்த்திய பசு’ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?
Answer:
- மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது.
திருக்குறளைச் சீர் பிரித்து எழுதுக.
1. தக்கார் தகவிலரென்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.
2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்ட பின் அல்லது.
சீர்பிரித்தது
1. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
2. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ……………………….
புலியின்தோல் ……………………. மேய்ந் தற்று.
2. விலங்கொடு ………………….. அனையர் ……………………….
கற்றாரோடு ஏனை யவர்.
Answer:
1. பெற்றம், போர்த்து
2. மக்கள், இலங்குநூல்
சீர்களை முறைப்படுத்தி எழுதுக.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது
வினைபடு பாலால் செவ்விதுஆங்கு.
முறைப்படுத்தியது
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்.
படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.
1. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.
2. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல் ……………………
அ) பரிபாடல்
ஆ) குறுந்தொகை
இ) திருக்குறள்
ஈ) நற்றிணை
Answer:
இ) திருக்குறள்
Question 2.
திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் …………………..
அ) ஆத்திசூடி
ஆ) புறநானூறு
இ) கலித்தொகை
ஈ) திருவள்ளுவமாலை
Answer:
ஈ) திருவள்ளுவமாலை
Question 3.
நடுவுநிலைமையுடன் செயல்படுவதே ………………. அழகாகும்.
அ) கயவர்க்கு
ஆ) சான்றோர்க்கு
இ) கல்லாதார்க்கு
ஈ) மூடர்க்கு
Answer:
ஆ) சான்றோர்க்கு
Question 4.
‘வலியில்’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ……………………
அ) உவமையணி
ஆ) எடுத்துக்காட்டு உவமையணி
இ) உருவக அணி
ஈ) இல்பொருள் உவமை அணி
Answer:
ஈ) இல்பொருள் உவமை அணி
Question 5.
மக்களின் பண்புகளை அவரவர் தோற்றத்தால் அல்லாமல் …………………………… வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அ) அன்பு
ஆ) செயல்
இ) நட்பு
ஈ) பாசம்
Answer:
ஆ) செயல்
Question 6.
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே உள்ள வேறுபாடு மக்களுக்கும் ……………………… இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
அ) பறவைகளுக்கும்
ஆ) கயவர்களுக்கும்
இ) விலங்குகளுக்கும்
ஈ) மரங்களுக்கும்
Answer:
இ) விலங்குகளுக்கும்
Question 7.
……………. வருமுன்னே சிந்தித்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
அ) வலி
ஆ) பழி
இ) சளி
ஈ) உளி
Answer:
ஆ) பழி
Question 8.
பழிவருமுன்னே காக்காதவர் வாழ்க்கை, நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட …………………….. போல அழிந்துவிடும்.
அ) வைக்கோல்போர்
ஆ) பஞ்சு
இ) தாள்
ஈ) மரம்
Answer:
அ) வைக்கோல்போர்
Question 9.
‘கடல் ஓடா’ எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ………………………..
அ) பிறிதுமொழிதல் அணி
ஆ) தற்குறிப்பேற்ற அணி
இ) உருவக அணி
ஈ) உவமையணி
Answer:
அ) பிறிது மொழிதல் அணி
Question 10.
முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் ……………………
அ) நக்கீரர்
ஆ) கம்ப ர்
இ) வள்ளுவர்
ஈ) கபிலர்
Answer:
இ) வள்ளுவர்
Question 11.
திருவள்ளுவர் ……………………… ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
அ) 1000
ஆ) 500
இ) 1500
ஈ) 2000
Answer:
ஈ) 2000
Question 12.
………………………. உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும்.
அ) பெரிய புராணம்
ஆ) திருக்குறள்
இ) தேவாரம்
ஈ) நற்றிணை
Answer:
ஆ) திருக்குறள்
Question 13.
திருக்குறள் ……………….. பகுப்புக் கொண்டது.
அ) ஐம்பால்
ஆ) எண்பால்
இ) முப்பால்
ஈ) ஒன்பால்
Answer:
இ) முப்பால்
Question 14.
அறத்துப்பால் ……………………….. இயல்களைக் கொண்டது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு
Question 15.
பொருட்பால் ………………. இயல்களைக் கொண்டது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
ஆ) மூன்று
Question 16.
இன்பத்துப்பால் ………………………. இயல்களைக் கொண்டது.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
அ) இரண்டு
Question 17.
‘அவரவர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) அவர + வர்
ஆ) அவர + அவர்
இ) அ + அவர்
ஈ) அவர் + அவர்
Answer:
ஈ) அவர் + அவர்
Question 18.
‘தகவிலர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) தக + விலர்
ஆ) தக + இலர்
இ) தகவு + இலர்
ஈ) தகவு + பலர்
Answer:
இ) தகவு + இலர்
Question 19.
‘நிலைமையான்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) நிலை + யான்
ஆ) நிலைமை + ஆன்
இ) நிலைமை + யான்
ஈ) நிலைமை + ஏன்
Answer:
ஆ) நிலைமை + ஆன்
Question 20.
‘மேய்ந்தற்று’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) மேய் + அற்று
ஆ) மேய்ந் + தற்று
இ) மேயும் + அற்று
ஈ) மேய்ந்து + அற்று
Answer:
ஈ) மேய்ந்து+அற்று
Question 21.
‘பாலால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) பா + ஆல்
ஆ) பால் + ஆல்
இ) பாலு + ஆல்
ஈ) பா + லால்
Answer:
ஆ) பால் + ஆல்
Question 22.
‘கல்லாதவர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………..
அ) க + அவர்
ஆ) கல் + லாதவர்
இ) கல்லாது + அவர்
ஈ) கல்லா + அவர்
Answer:
இ) கல்லாது + அவர்
Question 23.
‘விலங்கொடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) விலங் + கொடு
ஆ) விலங்கு + ஒடு
இ) விலங்க + கொடு
ஈ) விலங்கு + ஓடு
Answer:
ஆ) விலங்கு + ஒடு
Question 24.
‘கற்றாரோடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) கற்றார் + ஓடு
ஆ) கற்றார் + ஒடு
இ) கற்றா + ரோடு
ஈ) கற் + றாரோடு
Answer:
அ) கற்றார் + ஓடு
Question 25.
‘வைத்து + ஊறு’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) வைத்து ஊறு
ஆ) வைத்தாறு
இ) வைத்தூறு
ஈ) வைத்துறு
Answer:
இ) வைத்தூறு
Question 26.
‘இடம் + கண்ட’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) இடம்கண்ட
ஆ) இடகண்ட
இ) இடத்தைக்கண்ட
ஈ) இடங்கண்ட
Answer:
ஈ) இடங்கண்ட
Question 27.
‘நாவாய் + உம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………
அ) நாவாய்உம்
ஆ) நாவாயும்
இ) நாவாஉம்
ஈ) நாவாஊம்
Answer:
ஆ) நாவாயும்
அணிகள்
1. இல்பொருள் உவமை அணி
அணி விளக்கம் :
- உலகத்தில் இல்லாத பொருளை உவமையாக்கிக் கூறுவது இல்பொருள் உவமை அணி ஆகும்.
எ.கா:
‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.’
அணிப்பொருத்தம் :
- பசுவானது புலியின்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்ந்தல் உலகில் இல்லாத செயலாகும். எனவே அதனை உவமையாக்கிக் கூறியுள்ளமையால், இது இல்பொருள் உவமை அணி ஆயிற்று.
2. உவமை அணி :
அணி விளக்கம் :
- உவமை, பொருள், உவம உருபு ஆகியவை வெளிப்படையாக தோன்றுமாறு அமைவது உவமை அணி ஆகும்.
எ.கா – 1:
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி.
அணிப்பொருத்தம் :
- இப்பாடலில் துலாக்கோலை உவமையாகக் கூறி, சான்றோர்களின் நடுவுநிலைமையை உவமிக்கப்படும் பொருளாக்கி, போல என்ற உவம உருபு வெளிப்படையாகத் தோன்றுமாறு அமைக்கப்பட்டுள்ளதால் அது உவமை அணி ஆயிற்று.
எ.கா – 2:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
அணிப்பொருத்தம் :
- நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல் போரை உவமையாகக் கூறி, பழிவருமுன்னே சிந்தித்து செயல்படுபவன் வாழ்க்கை என்பதை உவமிக்கப்படும் பொருளாக்கி, போல என்ற உவம உருபு பெற்று, வெளிப்படையாய் அமைந்துள்ளதால் இது உவமை அணி ஆயிற்று.
3. பிறிது மொழிதல் அணி :
அணி விளக்கம் :
- உவமையை மட்டும் கூறிப் பொருளினைப் பெற வைப்பது பிறிது மொழிதல் அணி.
எ.கா:
கடல் ஓடா கால்வல் நெடுந்தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
அணிப்பொருத்தம் :
- அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதே புலவர் கூற விரும்பிய கருத்து. ஆனால் அதனைக் கூறாமல் பெரிய தேர் கடலில் ஓடாது. கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓடாது என உவமையாக வேறொன்றைக் கூறியுள்ளார். ஆகவே இது பிறிது மொழிதல் அணி ஆயிற்று.
0 Comments:
Post a Comment