Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.3 நீலம் பொது book back question and answer
Tamilnadu state board 8th tamil unit 2 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download
Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 2.3 நீலம் பொது
கற்பவை கற்றபின்
பாடநூல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
தொடரில் அமைத்து எழுதுக.
குறுவினா
- இந்தப் பூமிக்கு அணுக்கமாக உள்ள வானம், காற்றின் தூய்மை, நீரின் உயர்வு யாருக்கும் சொந்தமானவை அல்ல.
- அப்படி இருக்கையில், அவற்றை எவ்வாறு விலைகொடுத்து வாங்க முடியும் என்று சியாட்டல் கூறுகின்றார்.
- இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் செவ்விந்தியர்களுக்குப் புனிதமாகும்.
- இந்தப் பூமியை எப்பொழுதும் செவ்விந்தியர்கள் மறப்பதேயில்லை. ஏனெனில் பூமியே அவர்களுக்குத் தாயாகும்.
- அவர்கள் அந்த மண்ணுக்கு உரியவர்கள்; அந்த மண்ணும் அவர்களுக்குரியதாகும்.
- செவ்விந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ள எருமைகள் கொல்லப்படுவதையும்,
- எங்குப் பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பதையும்,
- தொன்மையான மலைகளை மறைத்துத் தொலைபேசிக் கம்பிகள் பெருகி வருவதையும்
- தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்.
சிறுவினா
- ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.
- இந்த நீரின் முணுமுணுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.
- இந்த ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள். இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.
- எம்மக்களின் தோணிகளையும் இவர்களே சுமந்து செல்கின்றனர் குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர்.
- இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும் என நீர்நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளார்.
- இங்குள்ள நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது சகோதரிகள்.
- மான்கள், குதிரைகள், கழுகுகள் போன்ற அனைத்தும் எமது சகோதரர்கள்.
- மலை முகடுகள், பசும்புல்வெளிகளின் பனித்துளிகள், மட்டக் குதிரைகளின் உடல்சூட்டின் இதமான கதகதப்பு போன்றவையும
- இங்குள்ள மனிதர்கள் எல்லாமும் ஒரே குடும்பம் என்று சியாட்டல் கூறுகிறார்.
நெடுவினா
(i) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். எமது மக்கள், இந்தப் பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும்.
(ii) நாங்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள் இந்த மண்ணும் எமக்குரியதாகும். இந்நிலமானது எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க சம்மதிப்பது என்பது மிகவும் இயலாத ஒன்றாகும்.
(iii) நாங்கள் பூமியைத் தாயாகவும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். எங்கள் கால்களைத் தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால் ஆனதாகும்.
(iv) நீங்கள் இதனை உங்கள் குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லித்தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் இந்நிலத்தை மதிப்பார்கள்.
(v) இந்நிலமே எங்கள் தாயாகும்; எமது உறவுமுறையாரின் வளமான வாழ்வால் ஆனதே இந்நிலமாகும். இதனை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போல் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் சொல்லிக் கொடுங்கள்.
(vi) இப்பூமியின் மீது வந்து விழுந்தாலும் அவையெல்லாம் பூமித்தாயின் மீது வந்து விழுவனவே யாகும். மேலும், இப்பூமியின் மீது மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும்.
(vii) இந்நிலமானது கடவுளும் மதிக்கக்கூடிய ஒன்றாகும். ஆகவே, இதற்குக் கெடுதல் செய்வதென்பது அதனைப் படைத்த இறைவனை அவமதிக்கும் செயலாகிவிடும்.
(viii) நீங்கள் மற்றப் பழங்குடியினரைக் காட்டிலும் முன்கூட்டியே இந்நிலத்தை விட்டுச் செல்லக்கூடும்.
(ix) நீங்கள் படுத்துறங்கிய இடத்தை நீங்களே அசுத்தப்படுத்தினால் ஒருநாள் இரவு நீங்கள் உங்கள் குப்பைகளுக்குள்ளேயே மூச்சு முட்டி இறந்து போகக்கூடும்.
(x) நாங்கள் எங்கள் நிலத்தை விற்பதாக இருந்தால் எங்கள் நிலத்தை நாங்கள் நேசிப்பது போலவே நீங்களும் நேசியுங்கள்.
(xi) நாங்கள் எப்படிக் காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். முழுமையான விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள்.
(xii) நிலத்தை நேசியுங்கள். இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார்.
சிந்தனை வினா
- (i) துணிகள், நெகிழி, மரத்துண்டுகள், கண்ணாடி, பேப்பர், போன்ற வீடு மற்றும் நகர்ப்புறக் கழிவுகள் நேரடியாக நிலத்தில் கொட்டப்படுகின்றன. இவற்றில் சில மக்கும் தன்மை உடையவை; பல மக்காத தன்மை உடையவை.
- (ii) மட்காதப் பொருட்கள் குழிதோண்டி நிலத்தில் புதைக்கப்படுகின்றன. இந்நிகழ்வு நிலச் சீர்க்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனைத் தடுத்து நிறுத்தல்.
- (iii) நாளும் பெருகி வரும் தொழிற்சாலைகளால் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வேதியியல் கழிவுகள், உலோகக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை எளிதில் மக்காதவை. இவை நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது. அதனால் அவைகளை நிலத்தில் கலக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- (iv) கழிவுநீரினைச் சுத்திகரிக்கும் போது திடக்கழிவுகள் அதிகளவு ஏற்படுகின்றன. இவை நிலத்தில் புதைக்கப்படுகின்றன. அல்லது எரிக்கப்படுகின்றன. புதைக்கப்படும்போது அவை நிலமாசுபாட்டினை ஏற்படுத்துகின்றன. அவைகளை முறையாகச் செயல்படுத்தினால் நிலவளத்தைக் காப்பாற்றலாம்.
0 Comments:
Post a Comment