> Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 3 வரும் முன் காப்போம் book back question and answer ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 3 வரும் முன் காப்போம் book back question and answer

Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 3.2 வரும் முன் காப்போம் book back question and answer

Tamilnadu state board 8th tamil unit 3 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil book Solutions Chapter 3.2 வரும் முன் காப்போம்

கற்பவை கற்றபின்

Question 1.
‘தன் சுத்தம்’ என்னும் தலைப்பில் படத்தொகுப்பு ஒன்று உருவாக்குக.

Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 2.
சுகாதாரம் பற்றிய பழமொழிகளைத் தொகுத்து எழுதுக.
எ.கா: சுத்தம் சோறு போடும்.
Answer:

நோய்க்கிடங் கொடேல்.
கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
காற்றுக்கு எதிரே துப்பினால் முகத்தில் விழும்.
காயம்படுமுன் கதறி அழாதே.
சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டான்.
ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான மனம் இருக்கும்.
ஆள்பாதி ஆடை பாதி.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
தீங்குகளின் உறைவிடம் சோம்பல்.
வருமுன் காப்பதே நலம்.
கூழானாலும் குளித்துக் குடி.
வீட்டின் சுத்தமே! நாட்டின் சுத்தம்!
சுத்தமிருந்தால் சுகம் உண்டு.
சுத்தமான காற்று சுகாதாரமான காற்று.

பாடநூல் வினாக்கள்


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


Question 1.
காந்தியடிகள் …………………… போற்ற வாழ்ந்தார்.
அ) நிலம்
ஆ) வையம்
இ) கனம்
ஈ) வானம்
Answer:
ஆ) வையம்

Question 2.
‘நலமெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………………..
அ) நலம் + எல்லாம்
ஆ) நலன் + எல்லாம்
இ) நலம் + எலாம்
ஈ) நலன் + எலாம்
Answer:
அ) நலம் + எல்லாம்


Question 3.
இடம் + எங்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …………………..
அ) இடவெங்கும்
ஆ) இடம் எங்கும்
இ) இடமெங்கும்
ஈ) இடம்மெங்கும்
Answer:
இ) இடமெங்கும்

வருமுன்காப்போம் – இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.

குறுவினா


Question 1.
நம்மை நோய் அணுகாமல் காப்பவை யாவை?
Answer:
  • நடைப்பயிற்சியும், நல்ல காற்றும் நம்மை நோய் அணுகாமல் காப்பவை ஆகும்.

Question 2.
அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

Answer:
  • அதிகமாக உண்பதால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டு பாயில் விழுவீர்கள் என கவிமணி குறிப்பிடுகிறார்.


சிறுவினா


Question 1.
உடல் நலத்துடன் வாழக் கவிமணி கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

Answer:

  • (i) உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார். உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது. சுத்தம் நிறைந்துள்ள எல்லா இடங்களிலும் சுகம் உண்டு. நாள்தோறும் நீங்கள் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.
  • (ii) காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய் அணுகாது. அவர் உயிரைக் கவர எமனும் அணுகமாட்டான். எனவே, நீங்கள் கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடித்தல் வேண்டும்! நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும். 
  • (iii) அளவாக உண்ணாமல் அதிகமாக உண்டால் செரிமானம் தடுமாறி நாள்தோறும் நோய்வாய்ப்பட்டுப் பாயில் விழுவீர்கள். தூய்மையான காற்றும், நல்ல குடிநீரும், நன்கு பசித்த பிறகு உண்பதும் நம்மை நோய் அணுகாமல் காப்பாற்றும்! நூறாண்டு வாழவைக்கும். அரிய நம் உடல் நலமோடு இருப்பதற்கான வழிகள் இவை என்பதை அறிவீர்களாக! ஆகவே நோய் வருமுன் காப்போம்! உலகம் புகழ வாழ்வோம்!


சிந்தனை வினா


Question 1.
நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

Answer:

  • (i) உடலின் வலிமைக்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமானது. உடற்பயிற்சியால் இரத்தவோட்டம் சீராகும்.
  • (ii) உடலின் கழிவுப் பொருள்கள் வெளியேறும். துணிவும், தெம்பும், சுறுசுறுப்பும் ஏற்படும், அதனால் விளையாட்டு, தண்டால், நீச்சல், உலாவுதல் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல் வேண்டும்.
  • (iii) நாம் வாழும் வீடும், சுற்றுப்புறமும் தூய்மையாய் இருக்க வேண்டும். காற்றும் கதிரொளியும் தாராளமாக உள்ளே புகும் வகையில் வீடும், உறங்கும் இடமும் அமைய வேண்டும்.
  • (iv) உணவே மருந்து மருந்தே உணவு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். ஒருவர் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, மாச்சத்து, கனிமங்கள், நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்ததே சமச்சீர் உணவு. எனவே, அளவறிந்து உண்ண வேண்டியது அவசியமாகும்.


கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Question 1.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது ……………………….
அ) புதுமொழி
ஆ) பழமொழி
இ) சிறுமொழி
ஈ) அறிவுமொழி
Answer:
ஆ) பழமொழி

Question 2.
நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே ……………………..
அ) பொதுவுடைமை
ஆ) தன்னுடைமை
இ) அறிவுடைமை
ஈ) அன்புடைமை
Answer:
இ) அறிவுடைமை


Question 3.
நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே ………………………. நலத்திற்கு அடிப்படை.
அ) நல்ல உடல்
ஆ) அறிவு உடல்
இ) அன்புடல்
ஈ) துன்ப உடல்
Answer:
அ) நல்ல உடல்

Question 3.
‘வருமுன் காப்போம்’ பாடலைப் பாடியவர் ………………….
அ) பாரதியார்
ஆ) திருமூலர்
இ) ஔவையார்
ஈ) கவிமணி
Answer:
ஈ) கவிமணி

 
Question 5.
உடலில் உறுதி கொண்டவரே, உலகில் …………………… உடையவராவார்.
அ) அன்பு
ஆ) வீரம்
இ) பரிவு
ஈ) மகிழ்ச்சி
Answer:
ஈ) மகிழ்ச்சி

Question 6.
நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோர் உயிரைக் கவர …………………….. அணுகமாட்டான்.
அ) வீரன்
ஆ) எமன்
இ) கள்வன்
ஈ) வேலன்
Answer:
ஆ) எமன்


Question 7.
கவிமணி எனப் போற்றப்படுபவர் ………………….
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) தேசிக விநாயகனார்
ஈ) கம்பர்
Answer:
இ) தேசிக விநாயகனார்

Question 8.
கவிமணி பிறந்த ஊர் …………………
அ) நெல்லை
ஆ) செங்கை
இ) திருவாரூர்
ஈ) தேரூர்
Answer:
ஈ) தேரூர்
 
Question 9.
கவிமணி ……………………. ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அ) 36
ஆ) 35
இ) 34
ஈ) 26
Answer:
அ) 36

Question 10.
ஆசியஜோதி நூலின் ஆசிரியர் ………………..
அ) கம்பர்
ஆ) பாரதியார்
இ) அறிவழகன்
ஈ) கவிமணி
Answer:
ஈ) கவிமணி


Question 11.
கதர் பிறந்த கதையின் ஆசிரியர் ………………………
அ) கவிமணி
ஆ) காந்தி
இ) நேரு
ஈ) பகத்சிங்
Answer:
அ) கவிமணி

Question 12.
கவிமணி மொழிபெயர்ப்பு செய்த நூல் …………………….
அ) ஆசியஜோதி
ஆ) மலரும் மாலையும்
இ) உமர்கய்யாம் பாடல்கள்
ஈ) கதர் பிறந்த கதை
Answer:
இ) உமர்கய்யாம் பாடல்கள்


 
Question 13.
மலரும் மாலையும் நூலின் ஆசிரியர் ………………………
அ) சுரதா
ஆ) கவிமணி
இ) வாணிதாசன்
ஈ) பாரதியார்
Answer:
ஆ) கவிமணி

Question 14.
‘உடையவராம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………….
அ) உடை + யவராம்
ஆ) உடையவர் + ராம்
இ) உடையவர் + யாம்
ஈ) உடையவர் + ஆம்
Answer:
ஈ) உடையவர் + ஆம்

Question 15.
‘சுத்தமுள்ள’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………..
அ) சுத்தம் + உள்ள
ஆ) சத்தம் + அள்ள
இ) சுத்த + முள்ள
ஈ) சுத்தம் + இள்ள
Answer:
அ) சுத்தம் + உள்ள

Question 16.
‘குடியப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) குடி + யப்பா
ஆ) குடி + அப்பா
இ) குடி + உப்பா
ஈ) குடிய + ப்பா
Answer:
ஆ) குடி + அப்பா

 
Question 17.
‘உறங்கப்பா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….
அ) உறங் + கப்பா
ஆ) உற + அப்பா
இ) உறங்கு + அப்பா
ஈ) உ + அறங்கப்பா
Answer:
இ) உறங்கு + அப்பா

Question 18.
‘நன்மை + நீர்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………………
அ) நன்மைநீர்
ஆ) நல்ல நீர்
இ) நன்நீர்
ஈ) நன்னீர்
Answer:
ஈ) நன்னீர்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 3.2 வருமுன் காப்போம்

Question 19.
‘தினம் + உம்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………….
அ) தினம் உம்
ஆ) தின்ன ம்
இ) தினமும்
ஈ) தின்ன மும்
Answer:
இ) தினமும்

குறுவினா


Question 1.
எது அறிவுடைமை?
Answer:
  • நோய் வந்த பின் தீர்க்க முயல்வதை விட வருமுன் காப்பதே அறிவுடைமை.

Question 2.
நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள் யாவை?
Answer:
  • நல்ல உணவு, உடல் தூய்மை, உடற்பயிற்சி ஆகியவையே நல்ல உடல் நலத்திற்கு அடிப்படைகள்
 
Question 3.
உலகில் மகிழ்ச்சி உடையவர் யார்?
Answer:
  • உடலில் உறுதி கொண்டவரே, உலகில் மகிழ்ச்சி உடையவராவார்.
Question 4.
எவை இனிய வாழ்வு தராது?
Answer:
  • உடல் உறுதியற்ற நோயாளர்க்கு வாழும் இடமும் செல்வமும் இனிய வாழ்வு தராது.

Question 5.
நீடித்த வாழ்நாளை எவ்வாறு பெறலாம்?
Answer:
  • நாள்தோறும் தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம்.

Question 6.
எமன் யாரை அணுக மாட்டான்?
Answer:
  • காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை எமனும் அணுகமாட்டான்.

Question 7.
கூழை எவ்வாறு குடித்தல் வேண்டும்?
Answer:
  • கூழைக் குடித்தாலும் குளித்த பிறகே குடித்தல் வேண்டும்.

Question 8.
எப்பொழுது நன்றாக உறங்குதல் வேண்டும்?
Answer:
  • வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும்.


Question 9.
கவிமணி இயற்றிய நூல்கள் யாவை?
Answer:
  • ஆசியஜோதி, மருமக்கள் வழி மான்மியம், கதர் பிறந்த கதை, மலரும் மாலையும், மொழிபெயர்ப்பு நூலான உமர்கய்யாம் பாடல்கள் போன்றவை கவிமணி இயற்றிய நூல்கள் ஆகும்.

சிறுவினா


Question 1.
கவிமணி குறிப்பு எழுதுக.
Answer:
  1. பெயர் : தேசிக விநாயகம்
  2. ஊர் : குமரிமாவட்டம் தேரூர்
  3. பெற்றோர் : சிவதாணு பிள்ளை – ஆதிலட்சுமி
  4. பிறப்பு : 27.08.1876
  5. பணி : பள்ளி ஆசிரியர், கல்லூரிப் பேராசிரியர், எழுத்துப்பணி.
  6. இயற்றியவை : மலரும் மாலையும், ஆசிய ஜோதி, மருமக்கள் வழி மான்மியம், காந்தளூர் சாலை, தேவியின் கீர்த்தனைகள், உமர்கய்யாம் பாடல்கள், கதர் பிறந்த கதை.
  7. சிறப்பு : 1940இல் ‘கவிமணி’ பட்டம் பெற்றார்.
  8. இறப்பு : 26.09.1954 (78 வயது)

சொல்லும் பொருளும் 

  1. நித்தம் நித்தம் – நாள்தோறும்
  2. மட்டு – அளவு
  3. சுண்ட – நன்கு
  4. வையம் – உலகம்
  5. பேணுவையேல் – பாதுகாத்தால்
  6. திட்டுமுட்டு – தடுமாற்றம்

Share:

0 Comments:

Post a Comment