> Tamil ilakkanam வினைமுற்று (vinaimutru) ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Tamil ilakkanam வினைமுற்று (vinaimutru)

 தமிழ் இலக்கணம் வினைமுற்று (vinaimutru)

சிறுவினா


Question 1.

  • வினைச்சொல் என்றால் என்ன?

Answer:
  • ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இது முற்றுவினை, எச்சவினை என்று இரு வகைப்படும்.

Question 2.

  • வினைமுற்றுகள் எத்தனை வகைப்படும்?

Answer:
  • தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என வினைமுற்று இருவகைப்படும்.

Question 3.

  • தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் முதன்மையானவை ஆகும். இவை ஆறும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும். எ.கா: உழுதான்.

Question 4.

  • குறிப்பு வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும். எ.கா: ஆதிரையான்.

Question 5.

  • ஏவல் வினைமுற்று என்றால் என்ன?

Answer:
  • தன்முன் உள்ள ஒருவரை ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, ஏவல் வினைமுற்று எனப்படும். ஏவல் வினைமுற்று ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும்.

Question 6.

  • வியங்கோள் வினைமுற்று என்றால் என்ன?

Answer:

  • வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.
  • இவ்வினைமுற்று இரு திணைகளையும், ஐந்து பால்களையும், மூன்று இடங்களையும் காட்டும்.
  • இதன் விகுதிகள் க, இய, இயர், அல் என வரும். எ.கா: வாழ்க.
Question 7.

  • பால் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer:

  • பால் ஐந்து வகைப்படும்.
அவை, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின் பால் ஆகும்.

Share:

0 Comments:

Post a Comment