> தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை!!



தமிழகத்தில் 11 ஆம் வகுப்பில் அரியர் வைத்த மாணவர்களுக்கான மறுதேர்வு நடத்தப்படாததால் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

11 ஆம் வகுப்பு தேர்வுகள்:

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முறை 2018 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது. புதிய பாடத்திட்ட மாற்றத்தின் படி 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை கல்லூரிகள் போல 12 ஆம் வகுப்பில் சேர்த்து எழுதும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போது அதில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு - கல்வித்துறை அனுமதி

அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்ற நம்பிக்கையில் தேர்வுக்கு தயாராகி வந்தனர். ஆனால் இந்த ஆண்டும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்ச்சி பெறாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களில் சிலர் 11 ஆம் வகுப்பு உடனடி பொதுத்தேர்வுகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

எனவே 11 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் உள்ள அரியர் மாணவர்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்ததும் அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும், என கோரிக்கை வைத்துள்ளனர்.


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts