> 12th Tamil தெய்வமணிமாலை 6 Mark ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Tamil தெய்வமணிமாலை 6 Mark

12th Tamil தெய்வமணிமாலை 6 Mark

இராமலிங்க அடிகள் கந்தவேளிடம் வேண்டுவன யாவை?

முன்னுரை:

ஆன்மீக ஒருமைப்பாட்டையும் சமய ஒருமைப்பாட்டையும் ஒளி வழிப்பாட்டையும்முன் வைத்த சீர்திருத்தசஉருவான இடம் சென்னை. இவ்வுண்மை நெறியை உருவாக்கி வளர்த்த வள்ளலார் கந்தவேளிடம்வேண்டுவன.

கந்தவேலனைபோற்றுதல் :

சென்னை கந்தகோட்டத்துத் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் கந்தவேளே! குளிர்ந்த முகத்தையுடைய தூய்மையான மாணிக்க மணியே! அருள் நிறைந்த சைவமணியே! என ஒருமனதுடன் அழைத்தார்.

கந்தவேலனிடம் வேண்டுதல்:

(ii) எனக்கு ஒரு நெறிப்பட்ட மனதுடன் உன் மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும். உள்ளத்தில் ஒன்றும், புறத்தில் ஒன்றும் பேசும் வஞ்சகர் உறவு என்னைப் பற்றாதவாறு காக்க வேண்டும்.

(iii) சிறந்த வாழ்வியல் நெறிகளைப் பின்பற்ற எனக்கு அருள்புரிய வேண்டும். மதமான பேய் என்னை அணுகாதிருக்க வேண்டும். பெண்ணாசையை என் மனம் துறக்க வேண்டும். என்றும் உன்னை மறவாதிருக்க வேண்டும்.

(iv) நின் கருணையாகிய நிதி, நோயற்ற வாழ்வு உடையவனாக இருக்க வேண்டும். 

முடிவுரை:

 ஆறுமுகங்களை உடையதெய்வமாகியகந்தவேலனிடம் இத்தகையசிறப்புகளை எனக்கு அருள்வாயாக என வேண்டினார் ராமலிங்க அடிகளார்.

Share:

0 Comments:

Post a Comment