தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை ஆலோசனை!
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடர் விடுமுறை – கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு வரை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிந்த பின்பு அவர்களுக்கும் தொடர் விடுமுறை அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 வகுப்பு:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் 2வது அலை வீசி வருகிறது. இதன் காரணமாக அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக பள்ளி மாணாக்கர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 1 வகுப்பு வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
ஆனால் பொதுத்தேர்வு காரணமாக பிளஸ் 2 வகுப்பிற்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் முதல் தேதி பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் 16ம் தேதி முதல் 23ம் தேதி வரை செய்முறை தேர்வுகளும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் முடிந்த பின்பு பிளஸ் 2 வகுப்பு மாணாக்கர்களுக்கு பள்ளிகள் மீண்டும் வழக்கம் போல் இயங்கவுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் 23ம் தேதி முடிந்த பின்பு அடுத்து நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வு (மே 3) வரை 10 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்க தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
0 Comments:
Post a Comment