> தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அனுமதி ~ Kalvikavi - Educational Website - Question Paper

தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அனுமதி

 தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அனுமதி..

தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக மூடப்பட்டு உள்ள பள்ளிகளை வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மீண்டும் திறந்து Plus 2 வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அனுமதி..

தமிழகத்தில் ஏப்ரல் 8 முதல் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை அனுமதி..

ள்ளிகள் திறப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருட மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் நோய் பரவல் குறைந்த காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகத்திலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிற வகுப்புகளுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.

தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை...

கடந்த 2 வாரங்களாக மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதன் மூலம் வைரஸ் 2வது அலை பரவி வருவது உறுதியாகி உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மீண்டும் மறுஉத்தரவு வரும் வரை காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே 3ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், அவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

இந்நிலையில் நாளை (ஏப்ரல் 6) 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனால் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்பட்டு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. எனவே 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்தல் நிறைவடையும் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. ஆயத்த பயிற்சி தேர்வுகள், செய்முறை தேர்வுகள் ஆகியவற்றின் காரணமாக 12ம் வகுப்புகளுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை விரைந்து தொடங்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதனால் வருகின்ற ஏப்ரல் 8ம் தேதி முதல் பள்ளிகளை திறந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share:

1 Comments:

Popular Posts