ஏப்ரல் 8 முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் உத்திர பிரதேச மாநிலம் லக்னோ, கான்பூர், வாரணாசி ஆகிய மாநிலங்களில் இன்று (08-04-2021) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இரவுநேர ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் ஏற்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் பல்வேறு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏற்படும் புதிய பாதிப்பில் உத்திர பிரதேச மாநிலம் 7ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா அதிகம் பாதித்த மஹாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ, கான்பூர், வாரணாசி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் லக்னோ மாவட்டத்தில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 8ம் தேதி முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல வாரணாசி மற்றும் கான்பூர் பகுதிகளிலும் இரவு நேர ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பழங்கள், காய்கறிகள், பால், பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லக்னோ மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஏப்ரல் 15 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உத்திரபிரதேச மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு காணப்பட்டால் அந்தந்த மாநிலங்களில் ஊரடங்குடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment