9th Tamil worksheet 2 - answer - Bridge course Workbook
unit 1 - கவிதைப் பேழை - தமிழோவியம்
1. கருத்தைப் படித்து ஆசிரியரின் பெயரைத் தெரிவுசெய்க,
'வணக்கம் வள்ளுவ' நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு எனப் புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர்.
அ)கவிஞர் தமிழ்ஒளி
ஆ) வைரமுத்து
இ) ஈரோடு தமிழன்பன்
ஈ)பாரதிதாசன்
விடை: இ) ஈரோடு தமிழன்பன்
2. பாடலிலுள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக.
"காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!"
மோனை : காலம் - காலமும்
எதுகை : காலம் - காலமும் , பிறக்கும் - பிறந்தது
3. "மானிடமேன்மையைச் சாதித்திடக்-குறள்
மட்டுமே போதுமே ஓதி, நட "
-என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்?
Answer : திருக்குறளை ஓதி ; திருக்குறளின் கருத்துக்களை பின்பற்ற வேண்டுமென கவிஞர் குறிப்பிடுகிறார்
4. பின்வரும் புதுக்கவிதையில் நிலா எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?
"நள்ளிரவில்
மௌனமான கப்பல் தளத்திற்கு மேலே
கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா
தூரத்தில் காணும் அது
விளையாடிய குழந்தை மறந்துவிட்ட பலூன் தான்"
Anwser : பலூன்
5. பாடலடிகளிலுள்ள அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தந்து. அச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
"எத்தனை எத்தனை சமயங்கள் தமிழ்
ஏந்தி வளர்த்தது
Answer :
இலக்கணகுறிப்பு : அடுக்குத்தொடர்
தொடர் : எத்தனை எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ் ஓங்கி வளர்ந்து கொண்டேதான் இருக்கும்
6. ஹைக்கூ கவிதைகள் தரும் பொருளை உரைநடை வடிவில் எழுதுக.
அ) உலகம் முழுமைக்கும்
உணவளிக்கும் வயல்
சோற்றுக்கிண்ணம்!
ஆ) உலகம் இயங்க
இதயம் ஆனவன்
விவசாயி!
விடை:
அ. உலகம் முழுமைக்கும் வயல் வெளிதான் இந்த மானுடற்கு சோற்றுக்கின்னம்.
ஆ. இந்த உலகம் இயங்க உலகத்தின் இதயம் ஆனவன் விவசாயி
7. பின்வரும் இயைபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
அ) கேட்டு வரும்
ஆ)பாட்டு வரும்
(எ.கா.) "ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் - நீதி
ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்."
விடை : இயைபு சொற்கள் :
அ. உதவி கேட்டு வரும் போது உதவி செய் .
ஆ. என்னவளை நினைத்தாலே எனக்கு பாட்டு வரும்.
8. கவிதையை நீட்டித்து ஆறுவரிகள் எழுதுக.
"சங்கம் வளர்த்த மொழி
சான்றோர் போற்றும் மொழி
விடை:
சங்கம் வளர்த்த மொழி
சான்றோர் போற்றும் மொழி
கலப்பு இல்லா மொழி
என்றும் கலங்கம் இல்லா மொழி
தொன்மையான மொழி
எங்கள் அழகு தமிழ் மொழி.
9. பாடலடியைப் படித்துத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றன் பெயரையும் தமிழ் இலக்கண நூல் ஒன்றன் பெயரையும் எழுதுக.
"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை
அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"
விடை: தமிழ் இலக்கிய நூல் : பரிபாடல்
தமிழ் இலக்கண நூல் : தொல்காப்பியம்
10. படங்கள் இரண்டுடன் உங்கள் எண்ணங்களை இணைத்துக் கவிதை வடிவில் எழுதுக.
குறுக்குச் சந்துகளில் கூட
வாகன நெரிசலினால்பறித்து விட்டோமே,
சக்கரம் ஓட்டி விளையாடும்
சிறு பிள்ளையின் சுதந்திரத்தை!
0 Comments:
Post a Comment