9th Tamil worksheet 3 - answer - Bridge course Workbook
unit 1 -கவிதைப்பேழை - தமிழ்விடு தூது
1. 'வாயில் இலக்கியம்' எனவும் 'சந்து இலக்கியம்' எனவும் வழங்கப்படும்
சிற்றிலக்கியத்தைத் தெரிவுசெய்க.
அ) பள்ளு
ஆ)தூது
இ) குறவஞ்சி
ஈ) பிள்ளைத்தமிழ்
விடை: ஆ)தூது
2. பின்வரும் தொடர்களுக்குப் பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுத்து (சுவைகள், வண்ணங்கள், வனப்புகள், குணங்கள்)
அ) சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய மூன்று --------------
ஆ) வெண்மை, செம்மை, பொன்மை; போன்ற ஐந்து--------------
இ) அம்மை, அழகு. தொன்மை போன்ற எட்டு--------------
ஈ) வீரம், அச்சம், வியப்பு போன்ற ஒன்பது--------------
விடைகள்:
அ.குணங்கள்
ஆ.வண்ணங்கள்
இ.சுவைகள்
ஈ.வனப்புகள்
௩.பாடலில் இடம்பெற்றுள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.
"உண்ணப்படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள்
நிரப்புக.
3.பாடலைப்படித்து 4 முதல் 6வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.
"இனிமைத் தமிழ்மொழி எமது - எமக்
கின்பந் தரும்படி வாய்த்தநல் அமுது!
கனியைப் பிழிந்திட்ட சாறு - எங்கள்
கதியில் உயர்ந்திட யாம்பெற்ற பேறு!
தனிமைச் சுவையுள்ள சொல்லை - எங்கள்
தமிழினும் வேறெங்கும் யாங்கண்டதில்லை!
நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்"
4. பாடலில் கனியைப் பிழிந்திட்ட சாறு எனவும் அமுது எனவும் குறிப்பிடப்படுவது எது?
விடை : தமிழ்மொழி
5. பாடலில் இடம்பெற்றுள்ள அடுக்குத்தொடரை எழுதுக.
விடை : நனியுண்டு நனியுண்டு
6.வேறெங்கும் யாம் கண்டதில்லை எனக் கவிஞர் எதைக் குறிப்பிடுகிறார்?
விடை : தமிழ்போல் தனிமைச் சுவையுள்ள சொல்லை
7. மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக.
"யாமரிந்த மொழிகலிலே தமிள்மொழிபோல்
இனிதாவது எங்கும் கானோம்"
விடை "
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
8. "முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார் நீ" - இவ்வடியில் உள்ள 'பெற்றார்' என்னும் சொல்லை வினையெச்சமாக்கித் தொடரமைக்க.
விடை : வினையெச்சம் : பெற்று
தொடர் : பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
9. பின்வரும் செய்யுளடிகளில் இடம்பெற்றுள்ள இரட்டைக் காப்பியங்களைக் கண்டறிந்து எழுதுக.
"காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின் மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்ப"
விடை : இரட்டைக் காப்பியங்கள் : சிலப்பதிகாரம்,மணிமேகலை
10. பொருள் விளக்கத்திற்கேற்ற பாடலடியைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பொருள் விளக்கம்:
இனிக்கும் தெளிந்த அமுதமாய் அந்த அமிழ்தினும் மேலான விடுதலை தரும் கனியே! இயல், இசை,நாடகம் என மூன்றாய்ச் சிறந்து விளங்கும் என் தமிழே!
பாடல் அடிகள்
"தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன்
முத்தமிழே"
"வந்துஎன்றும் சிந்தாமணியாய் இருந்த உனைச் சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே"
விடை : "தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன்
முத்தமிழே"
11.தூது இலக்கியத்தின் விளக்கத்தைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் தன் அன்பைப் புலப்படுத்தி, தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக 'மாலையை வாங்கி வருமாறு' அன்னம்முதல் வண்டு ஈறாகப் பத்தையும் தூதுவிடுவதாகக் கலிவெண்பாவால் இயற்றப்படுவது தூது இலக்கியம் ஆகும்.. அந்தவகையில் மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல்கொண்ட பெண்ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூது அனுப்பியதால் இது தமிழ்விடுதூது என்று பெயர் பெற்றது.
அ) தமிழைத் தூதாக அனுப்புவதால் ______________________எனப்
பெயர் பெற்றுள்ளது.
விடை : தமிழ்விடுதூது
ஆ) அன்னத்தைத் தூதாக அனுப்பினால் அத்தூது இலக்கியம்___________ என்ன பெயர் பெறும்?
விடை : அன்னம் விடுதூது
0 Comments:
Post a Comment