> 9th Tamil worksheet 4 - answer - Bridge course Workbook ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Tamil worksheet 4 - answer - Bridge course Workbook

9th Tamil worksheet 4 - answer - Bridge course Workbook

unit 1

பயிற்சித்தாள் - 4
கற்கண்டு - தொடர் இலக்கணம்

சரியான விடையைத் தெரிவுசெய்க.

1. கந்தன் தண்ணீர் ஊற்றினான்- இத்தொடரில் தண்ணீர் என்பது
அ) செயப்படுபொருள்
ஆ) வினைப்பயனிலை
இ) பயனிலை
ஈ) எழுவாய்

விடை;அ) செயப்படுபொருள்

2. பகுபத உறுப்புகளில் பெரும்பான்மையாக இடம்பெறும் அடிப்படை உறுப்புகளைத் தெரிவுசெய்க.

அ) பகுதி, விகுதி
ஆ) பகுதி, சந்தி, சாரியை
இ) விகுதி, இடைநிலை, விகாரம்
ஈ) சாரியை, சந்தி, பகுதி

விடை:அ) பகுதி, விகுதி


3. ஆடினான் - இச்சொல்லின் பகுதியைத் தெரிவுசெய்க.
அ) ஆடி
ஆ) அடி.
இ) ஆடு
ஈ) ஆட்டு

விடை:இ) ஆடு

4. எடுத்துக்காட்டுடன் பொருந்தாத தொடரைத் தெரிவுசெய்க.

அ) நாள்தோறும் உடற்பயிற்சி செய்! - கட்டளைத் தொடர் 

ஆ) 'பாண்டியன் பரிசு' பாவேந்தரால் இயற்றப்பட்டது-செயப்பாட்டுவினைத்தொடர்

இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

ஈ) இராமன் நாளை வாரான் -  எதிர்மறைவினைத் தொடர்.

விடை: 
இ) வேலன் பாடம் படித்தான் - பிறவினைத் தொடர்

5. வினைமரபைத் தெரிவுசெய்து வினைமுற்றாக மாற்றுக.

அ) முருகன் பால்___________(குடி/பருகு)

ஆ) யாழிசை, மாத்திரைகளை________(தின்/விழுங்கு)

இ) வேடன் பறவையை நோக்கி அம்பு ._________.(எய்/விடு)

ஈ) மலர்விழி பூ________(பறி/கொய்)

விடை : 

அ. பருகினான்

ஆ. விழுங்கினாள்

இ. எய்தான்

ஈ. கொய்தாள்

6. பொருத்தமான எழுவாய், பயனிலை, செயப்படுபொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(படித்தான்,பூ, சென்றனர், வரைந்தாள்)

அ) பொற்சுவை ஓவியம்_______

ஆ. ______கொய்து வந்தார்.

இ) பரிதி கவிதையைப்_______

ஈ)ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்குச்________

விடைகள்: 

அ.வரைந்தாள்

ஆ.பூ

இ.படித்தான்

ஈ.சென்றனர்

7. தன்வினைத் தொடருக்கு ஏற்ற வினையைப் பொருத்தி எழுதுக

இணைய வகுப்பில் ஆசிரியர், பாடங்களைக் கணினி வாயிலாகக்_-________(காட்டு / காட்டுவி)

விடை : காட்டுவித்தார்

8. விளக்கத்தைப் படித்துப் புரிந்துகொண்டு பெயரடை, வினையடை அமைந்த இரண்டு தொடரை உருவாக்குக

விளக்கம்

நல்ல பாடல் ஒன்று கேட்டேன் - என்னும் தொடரில் பாடல் என்பது பெயர். இதன் அடைமொழியாகிய நல்ல என்பது பெயரடை.

பள்ளி வாகனம் மெதுவாகச் சென்றது என்னும் தொடரில் சென்றது என்பது வினை. இதன் அடைமொழியாகிய மெதுவாக என்பது வினையடை

விடைகள்: 

பெயரடை : பழுத்த பழம் வாங்கினேன்

வினையடை: கொக்கு வயலின் மெதுவாக நடந்தது.

9. செய்தித் தொடரை வினாத்தொடராக மாற்றுக.

நாளை பள்ளி விடுமுறை.

விடை : நாளை பள்ளி விடுமுறையா?

10. வேர்ச்சொற்களைக் கொண்டு பிறவினைத் தொடர்கள் இரண்டு உருவாக்குக.

வேர்ச்சொற்கள் - கல், உண், செய், சிரி.

விடைகள் 

1. கற்சிலை செய்தான்.

2. உணவு உண்டவன் சிரித்தான்.

11. பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக.

கடந்த

விடை :

 கட + த் (ந்) + த்+அ

கட = பகுதி

த் = சந்தி - ந் ஆனது விகாரம்

த் = இறந்தகால இடைநிலை

அ = பெயரெச்ச விகுதி

12. விடுபட்ட கட்டங்களில் பொருத்தமான பகுபத உறுப்புகளை இட்டு நிரப்புக.

(வரைந்தான்,கண்ட, விரித்த, கொடுப்பாய், பார்த்தனன்)


13. குறிப்புகளைப் பயன்படுத்திப் புதிரை விடுவிக்க.

இது ஓர் ஐந்தெழுத்துச் சொல்.

• முதல் இரண்டு எழுத்துகள் நேரத்தைக் குறிக்கும்.

• இறுதி மூன்று எழுத்துகள் ஓர் அணிகலன். • 

.முதல் எழுத்தையும இறுதி எழுத்தையும் இணைத்தால், குறிஞ்சியின் நிலம். அது என்ன?

விடை : மணிமேகலை

14. ஒவ்வொரு தொடர் வகைக்கும் ஓர் எடுத்துக்காட்டு எழுதுக.

அ)கட்டளைத்தொடர் - பூக்களை பறிக்காதீர்!

ஆ)வினாத்தொடர்  - நாளை பள்ளிக்கு போக வேண்டுமா?

இ)உணர்ச்சித்தொடர் - எவ்வளவு உயரமான மரம்!

ஈ) செய்தித்தொடர் - நாளை என் நண்பன்  பள்ளிக்கு வருவான்.

உ)உடன்பாட்டுத்தொடர் - குமரன் மலையில் நனைந்தான்.

15. உரையாடலில் பயின்றுவரும் தொடர்வகைகளைக் கண்டறிந்து எழுதுக.

அம்மா: அமுதா. என்ன செய்து கொண்டிருக்கிறாய்? (1)

அமுதா: பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அம்மா (2)

அம்மா:அகிலன் எங்கே? விளையாடச் சென்று விட்டானா? (3)

அமுதா: இல்லை அம்மா! அகிலனையும் நான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். (4)

அம்மா:(அகிலனிடம்) வீட்டில் எண்ணெய் இல்லை. (5)

உடனே கடைக்கு விரைந்து சென்று எண்ணெய்  வாங்கி வா.வாங்கி வா (6)

விடைகள்: 

1. வினாத்தொடர்

2. செய்தி தொடர்

3. வினாத்தொடர்

4.உணர்ச்சித் தொடர்

5.எதிர்மறை வினைத் தொடர்

6.கட்டளைத் தொடர்

Share:

0 Comments:

Post a Comment