தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு – ஏப்ரல் 16ம் தேதி துவக்கம்...
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வுகள் துவங்கவுள்ளது.
செய்முறைத்தேர்வுகள் துவக்கம்
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டது. முன்னதாக கொரோனா பரவல் காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு பிற்பாடு 12ம் வகுப்பிற்கு மே மாதம் 3ஆம் தேதி துவங்கி 21ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.
அதன்படி பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். எனவே ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேர்தல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்கு பின்பாக தேர்வுகள் நடத்தப்படும்.
0 Comments:
Post a Comment