தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை...
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்வது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் இன்று பிற்பகல் பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு ரத்து:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனை சரி செய்ய அரசு தரப்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மினி ஊரடங்கு போல் அமல்படுத்த உள்ள இந்த அறிவிப்பை ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு 9,10,11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. மேலும் அந்த மாணவர்களுக்கு இரண்டாம் பருவ தேர்வு இன்று முதல் நடைபெற்று வருகிறது. 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தினால் ஆன்லைன் மூலமாக மட்டுமே பெரும்பாலான பாடங்கள் நடத்தப்பட்டன. எனவே மாணவர்களுக்கு பாடங்களை கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 8 முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – அரசு அறிவிப்பு
எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது 1 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து ஏப்ரல் 5 ஆம் தேதி ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால் அதன் முடிவில் கட்டாயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது நேற்று ஒரே நாளில் 3986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்வது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இன்று மாலை 3 மணி வரை ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment