> Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை ~ Kalvikavi - Educational Website - Question Paper

Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை

Bridge course மற்றும் work book காணொலிகள் தயாரித்து கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் மற்றும் ஒளிபரப்பு அட்டவணை

Bridge Course என்றால் என்ன?

  • இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் (Bridge Course) மற்றும் பயிற்சி புத்தகம் (Work Book) - காணொலிகள் தயாரித்து கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதல் சார்ந்த குறிப்பு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு கனிவுடன் அனுப்பப்படுகிறது.
  • COVID 19 பெருந்தொற்றுக் காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்டகற்றல் இடைவெளியை சரிசெய்யும் பொருட்டு 11 முதல் 1X வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி கட்டகமும், 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இணைப்புப் பாடப்பயிற்சி புத்தகம் (Bridge Course) II முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தொகுதி 1ல் தமிழ் ஆங்கிலம், பாடங்களும் தொகுதி II ல் அறிவியல், சமூக அறிவியல் பாடங்களும் கணிதப்பாடமானது இரு பிரிவுகயாகப் பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும் இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • பயிற்சி புத்தகம் (Work Book) ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் 1 முதல் IX வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை. பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் (Bridge Course) பயிற்சி புத்தகம் (Work Book) மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டவும், தாமாகவே பயிற்சி (Practice) செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும்.
  • தற்போது பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி, மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்கட்டமாக இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகமும் (Bridge Course) இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் (Worle Boolc) காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
  • முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் 22.042021 முதல் 10.05.2021 வரை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையின் படி ஒளிபரப்பப்படவுள்ளது. ஒரு வகுப்பிற்கு தினசரி இரண்டு காணொலிகள் வீதம் (ஒரு காணொலி 30 நிமிடங்கள்: 11 முதல் IX வகுப்புகளுக்கு ஒரிபரப்பு செய்யப்படும்.
  • இணைப்பு பாடப்பயிற்சி கட்டக ஒளிபரப்பு 10.05.2021 அன்று முடிந்தவுடன், அதனைத் தொடர்ந்து பயிற்சி புத்தகத்திற்கான காணொலிகளும் 11.05.2021 முதல் ஒளிபரப்பு செய்யப்படும். பயிற்சி புத்தகத்திற்கான காலஅட்டவணை பின்னர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 
  • முதல் கட்டமாக இணைப்பு பாடப்பயிற்சி சட்டகம் சார்ட்டை காணொலிகள் ஒளிபரப்பப்படும் போது அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வலகயில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கீழ்காண் வழிமுறைகளை உறுதி செய்ய உரிய அறிவுரை வழங்குமாறு பள்ளிக் கல்வி இயக்குநருக்கும் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநருக்கும். கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

TN Bridge Course Schedule 2021 - Kalvi Tv Official

Download Here

  1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பயிற்சி புத்தகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். 
  2.  இணைப்புப் பாடப்பயிற்சி கட்டகம் சார்பான ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் சென்று அடைந்ததை உறுதி செய்ய வேண்டும். 
  3. காணொலி ஒளிபரப்பின் போது அனைத்து மாணவர்களும் இணைப்பு பாடப்பயிற்சி சட்டகத்துடன் காணொலியைக் காண அறிவுறுத்த வேண்டும்.
  4.  ஒவ்வொரு நாளின் முடிவிலும் இணைப்பு பாடப்பயிற்சி கட்டகத்தில் (Bridge Course) உள்ள மதிப்பீட்டு பகுதியை மாணவர்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட விலையில்லா நோட்டுப் புத்தகத்தில் தவறாமல் செய்ய அறிவுறுத்தல் வேண்டும்.
  5. கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் காணொலிகளை மாணவர்கள் பார்த்து பயன்பெறுவதை உறுதி செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இணைப்பு:

கல்வி தொலைக்காட்சியில் இணைப்பு பாடப்பயிற்சி கட்டக ஒளிபரப்பு கால அட்டவணை,

Bridge Course KalviTv Schedule

Bridge course work book Kalvi TV program - PDF Download

Bridge course Other Channels list 

Bridge course channels list - pdf Download
Bridge course Other Channels list

6th to 9th Bridge course Syllabus - PDF Download

6th to 12 Textbooks PDF Download




Share:

1 Comments:

Popular Posts