> நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை - Naan Virumbum kavingar katturai - 8th tamil ~ Kalvikavi - Educational Website - Question Paper

நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை - Naan Virumbum kavingar katturai - 8th tamil

நான் விரும்பும் கவிஞர் - கட்டுரை 

8th tamil unit 1 Tamil essay - Naan virumbum kavingar - katturai also Read 8th tamil  All units Book back Question and answers 

நான் விரும்பும் கவிஞர் – பாவேந்தர் பாரதிதாசன்

முன்னுரை :

  • எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!’ என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு – மூலமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். இவரே நான் விரும்பும் கவிஞர் ஆவார்.

பிறப்பும் இளமையும் :

  • கனகசுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதிதாசனார் 29.04.1891-இல் கனகசபை – இலக்குமி அம்மையாருக்கு மகனாய்ப் புதுச்சேரியில் பிறந்தார். இளமையில் தமிழாசிரியராய் அமர்ந்தார். மகாகவி பாரதியாரிடம் கொண்ட அன்பால் தம் பெயரைப் பாரதிதாசன் என வைத்துக் கொண்டார்.

தமிழ்ப்பற்று :

‘தமிழுக்கும் அழுதென்று பேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’

  • போன்ற கவிதை வரிகள் பாரதிதாசனின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துவன. தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என முழங்கினார். தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை ‘ என வருந்தினார்.

கவிச்சுவை :

  • இயற்கையில் ஈடுபாடு மிக்க பாவேந்தரின் கவிதைகள் கருத்தாழமும் கற்பனைச் சுவையும் கொண்டு கற்போரைக் களிப்புறச் செய்பவை. ‘நீலவான் ஆடைக்குள் உடல் மறைந்து நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை’ எத்தனை அழகான கற்பனை!. இது இவரின் கவிச்சுவைக்குச் சான்று.

சமுதாயப் பார்வை:

  • ‘சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’ எனச் சாதி வெறியைச் சாடினார்.

‘எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான

இடம் நோக்கி நடக்கின்ற திந்த வையம்’

  • என்ற பொதுவுடைமைக் கருத்துக்குச் சொந்தக்காரர் பாவேந்தர்.

முடிவுரை :

  • உடல்வளமும் , உளத்திடமும், உண்மை உரைக்கும் பண்பும், நேர்மையும், மொழிப்பற்றும், இனப்பற்றும் கொண்ட பாவேந்தரின் கனவுகளை நனவாக்குவதே நமது கடமை.

Share:

3 Comments:

Popular Posts