> Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.1 ஒன்றே குலம் ~ Kalvikavi - Educational Website - Question Paper

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.1 ஒன்றே குலம்

Samacheer Kalvi 8th Tamil book Solution Chapter 8.1 ஒன்றே குலம் book back question and answer

Tamilnadu state board 8th Tamil unit 8 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 8.1 ஒன்றே குலம்


    கற்பவை கற்றபின்

    Question 1.

    பிறர் துன்பம் கண்டு வருந்தி அவர்களுக்குத் தொண்டு செய்த சான்றோர்களின் பெயர்களைத் திரட்டுக.

    Answer:

    1. வள்ளலார்

    2. புத்தர்

    3. விவேகானந்தர்

    4. அன்னை தெரசா

    5. திரு.வி.க.

    6. பண்டித ரமாபாய்

    7. நாராயண குரு

    8. ரமணமகரிஷி

    9. குருநானக்

    மதிப்பீடு

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    Question 1.

    அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ……………… க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

    அ) புலனை

    ஆ) அறனை

    இ) நமனை

    ஈ) பலனை

    Answer:

    இ) நமனை

    Question 2.

    ஒன்றே ……………. என்று கருதி வாழ்வதே மனிதப்பண்பாகும்.

    அ) குலம்

    ஆ) குளம்

    இ) குணம்

    ஈ) குடம்

    Answer:

    அ) குலம்

    Question 3.

    ‘நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………

    அ) நம் + இல்லை

    ஆ) நமது + இல்லை

    இ) நமன் + நில்லை

    ஈ) நமன் + இல்லை

    Answer:

    ஈ) நமன் + இல்லை

    Question 4.

    நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

    அ) நம்பரங்கு

    ஆ) நம்மார்க்கு

    இ) நம்பர்க்கங்கு

    ஈ) நம்பங்கு

    Answer:

    இ) நம்பர்க்கங்கு

    குறுவினா

    Question 1.

    யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

    Answer:

    • மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை .

    Question 2.

    மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்யவேண்டியது யாது?

    Answer:

    • உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின், “மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர், “உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே” என்ற இக்கருத்துகளை மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைவிட வேறு நல்வழி இல்லை என்று நினைத்து ஈடேற வேண்டும்.

    சிறுவினா

    Question 1.

    மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

    Answer:

    மக்களுக்குச் செய்யவேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவன :

    • படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

    சிந்தனை வினா

    Question 1.

    அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளைச் செய்யலாம்?

    Answer:

    அன்றாட வாழ்வில் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் :

    • மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது மாபெரும் வரம். பிறருக்கு உதவி செய்யும் போது பயனை எதிர்பார்க்காமல் உதவி செய்ய வேண்டும். நாம் வெளியில் செல்லும் போது நம் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதாவது தேவையா என்று கேட்டு அவர்களின் தேவையை நிறைவேற்றலாம்.
    • வீட்டில் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் அவர்கள் கூறும் சிறு வேலைகளைச் செய்து அவர்களின் வேலைச் சுமையைக் குறைக்கலாம். பள்ளியில் உடன் பயிலும் மாணவர்களுக்குப் புத்தகம், குறிப்பேடு, எழுதுகோல் போன்றவை தேவையேற்படின் கொடுத்து உதவலாம். பள்ளிக் கட்டணம் கட்ட இயலாத மாணவர்கள் இருந்தால் பெற்றோரிடம் கேட்டு பணம் கட்டலாம்.
    • படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு படிப்பதற்கு உதவி செய்யலாம். சாலைகளில் நடந்து செல்லும்போது, மாற்றுத் திறனாளிகளைக் கண்டால், அவர்களுக்கு உதவலாம். இவ்வாறு நம்மைச் சுற்றியுள்ளவர்களின் சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றலாம்.

    கூடுதல் வினாக்கள்

    நரப்புக :

    1. மனிதர்களிடையே பிறப்பால் ………………… பாராட்டுவது தவறானது.

    2. திருமந்திரத்தை இயற்றியவர் ……………….

    3. திருமந்திரம் …………………. என்றும் அழைக்கப்படும்.

    4. பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறை ………………..

    5. நமன் என்னும் சொல்லின் பொருள் …………….

    6. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் ………………….. சேரும்.

    Answer:

    1. உயர்வுதாழ்வு

    2. திருமூலர்

    3. தமிழ் மூவாயிரம்

    4. திருமந்திரம்

    5. எமன்

    6. இறைவனுக்குச்

    விடையளி :

    Question 1.

    திருமூலர் குறிப்பு எழுதுக.

    Answer:

    • (i) திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும் பதினெண் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர்.
    • (ii) இவர் திருமந்திரத்தை இயற்றியுள்ளார்.

    Question 2.

    திருமந்திரம் – நூல் குறிப்பு எழுதுக.

    Answer:

    • (i) திருமந்திரம் நூலை இயற்றியவர் திருமூலர்.
    • (ii) இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. எனவே, தமிழ் மூவாயிரம் எனப்படுகிறது.
    • (iii) இது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

    பாடல்

    ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

    நன்றே நினைமின் நமனில்லை நாணாமே

    சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து

    நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே


    படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

    நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா

    நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

    படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே. – திருமூலர்

    பொருள் தருக

    1. நமன் – எமன்

    2. சித்தம் – உள்ள ம்

    3. நம்பர் – அடியார்

    4. படமாடக் கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

    5. நாணாமே – கூசாமல்

    6. உய்ம்மின் – ஈடேறுங்கள்

    7. ஈயில் – வழங்கினால்

    பாடலின் பொருள்

    • மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

    • படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

    நூற்குறிப்பு

    • திருமந்திரம் என்ற நூலைத் தமிழ் மூவாயிரம் என்பர். இது பன்னிரு திருமறைகளுள் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது. திருமந்திரம் என்னும் நூலிலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.

    ஆசிரியர் குறிப்பு


    • அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதினெண்  சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் திருமூலர். இவர் இயற்றிய திருமந்திரம் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது.
    Share:

    0 Comments:

    Post a Comment

    Popular Posts