> தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு.. ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு..

 தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இன்று முதல் தொடர் விடுமுறை – செய்முறை தேர்வுகள் நிறைவு..

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்றுடன் அந்த தேர்வுகள் முடிவுறும் நிலையில் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

செய்முறை தேர்வுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர்களுக்கான வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வழியாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளிலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 5 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது உள்ள கொரோனா சூழல் காரணமாக இந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பொதுத்தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அதன்படி ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் துவங்கிய செய்முறை தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்த தேர்வுகளில் 7000 பள்ளிகளை சேர்ந்த 2 லட்சம் மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த செய்முறை தேர்வுகளுக்கு பின்னாக மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கையில், ‘செய்முறை தேர்வுகளுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வர வேண்டாம். ஹால் டிக்கெட் பெற்ற பிறகு பொதுத்தேர்வுக்கு மட்டுமே வந்தால் போதும். அதுவரை உள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் தேர்வுக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என கூறியுள்ளது

Share:

0 Comments:

Post a Comment