10th Tamil Worksheet 1 - ansswer key - Bridge course
அன்னை மொழியே, இரட்டுற மொழிதல்
(கவிதைப் பேழை)
பயிற்சித் தாள் - 1
மொத்தமதிப்பெண்கள் 18
I. பலவுள் தெரிக.
1. வானத்திற்கும் வையத்திற்கும் இடைப்பட்ட யாவற்றையும் கவிதையாகக் கொண்டவள்.
(அ) வளர்ப்பத்தாய்
(ஆ) நற்றாய்
இ)மாற்றான் தாய்
ஈ)தமிழ்த்தாய்
விடை:ஈ)தமிழ்த்தாய்
2. "சாகும் போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும் என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்று கூறியவர்___________ஆவார்.
(அ) சச்சிதானந்தன்
ஆ) அறிவானந்தன்
(இ) விவேகானந்தன்
(ஈ) கமலாளந்தன்
விடை:.(அ) சச்சிதானந்தன்
3. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்_____________________ஆகும்.
(அ) துரை. வேலவன்
(ஆ) துரை. மாதவன்
(இ) துரை மாணிக்கம்
(ஈ)துரை: மயில்வன்
விடை:(இ) துரை மாணிக்கம்
4. தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த திருக்குறள் மெய்ப்பொருளுரை நூலின் ஆசிரியர் __________ஆவார்.
(அ) பெருஞ்சித்திரனார்
ஆ) கருமேகனார்
(இ) கொடுங்கையார்
(ஈ) மோசிக் சீரனார்
விடை:(அ) பெருஞ்சித்திரனார்
5. சந்தக் கவிமணி எனப்படுபவர்.
(அ) தமிழழகனார்
(ஆ) பெருஞ்சித்திரனார்
(இ) வெள்ளிவீதியார்
(ஈ) அம்முவனார்.
விடை:(அ) தமிழழகனார்
6. `மெத்த வணிகலன்' என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
(அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
(ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
(இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
(ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
விடை:(அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
7. சலஞ்சலம், பாஞ்சசன்யம் என்பன __________ இன் வகைகளாகும்.
அ) சங்கு
(ஆ) கிளிஞ்சல்
(இ) பவளம்
ஈ)முத்து
விடை:அ) சங்கு
8. சந்தக்கவிமணி தமிழழகனார்க்கு அன்னாரின் பெற்றோர் சூட்டிய பெயர்__________ஆகும்.
(அ) சர்வர் சுந்தரம்
(ஆ) சண்முக சிகாமணி
(இ) சண்முக சுந்தரம்
ஈ)சுந்திர சாமன்
விடை:(இ) சண்முக சுந்தரம்
9.சொற்கள் தொடர்களில் இரு பொருள்பட வருவதனை இரட்டுற மொழிதல் என்றும் ____________என்றும் கூறுவர் .
அ)மடக்கு
ஆ)மோனை
இ) தற்குறிப்பு
ஈ)சிலேடை
விடை.:ஈ)சிலேடை
10.தமிழையும் கடலையும் ஒப்பிட்டுக் கவி பாடியவர் .
அ)இரட்டைப் புலவர்கள்
ஆ)சந்தக்கவிமணி தமிழழகனார்
இ)பாரதியார்
ஈ)தேவநேயப் பாவாணர்
விடை:ஆ)சந்தக்கவிமணி தமிழழகனார்
11.அன்னை மொழியே கவிதை இடம்பெற்ற நூல் _________.
அ)கனிச்சாறு
ஆ)நூறாசிரியம்
இ)எண்சுவை
ஈ)பாவியக்கொத்து
விடை:அ)கனிச்சாறு
12."எந்தமிழ்நா" என்பதனை பிரித்தால் இவ்வாறு வரும் .
அ)எந்+தமிழ்+நா
ஆ)எந்த+தமிழ்+நா
இ)எம்+தமிழ்+நா
ஈ)எந்தம்+தமிழ்+நா
விடை:இ)எம்+தமிழ்+நா
13.இரட்டுறமொழிதல் அணியின் வேறு பெயர் ._________
அ)சிலேடையணி
ஆ)உவமையணி
இ)வஞ்சப்புகழ்ச்சி அணி
ஈ)பிறிது மொழிதல் அணி
விடை:அ)சிலேடையணி
ii. கீழ்காணும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே'
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!''
1.இப்பாடலின் ஆசிரியர்.
அ)பாரதிதாசன்
ஆ)பாவலரேறு
இ) நப்பூதனார்
ஈ)வீரமாமுனிவர்
விடை:ஆ)பாவலரேறு
2.தேனைக் குடித்து சிறகடித்து பாடுவது ________.
அ)வண்டு
ஆ))காகம்
இ)மைனா
ஈ)பட்டாம்பூச்சி
விடை:அ)வண்டு
3."வாழ்த்துவமே" என்பதன் இலக்கணக் குறிப்பு________
அ)வினையெச்சம்
ஆ)பெயரெச்சம்
இ) தன்மை பன்மை வினைமுற்று
ஈ)வினைத் தொகை
விடை:இ) தன்மை பன்மை வினைமுற்று
4.தமிழ்____________ மன்னனின் மகள் என்று கவிஞர் கூறுகிறார்.
அ) பாண்டிய
ஆ)சேர
இ)நாயக்க
ஈ)சோழ
விடை:அ) பாண்டிய
5.இப்பாடலுக்கு ஏற்ற தலைப்பை எழுதுக
அ)அகநானூறு
ஆ)சிலப்பதிகாரம்
இ)தமிழ்ச்சுவை
ஈ)பதிற்றுப்பத்து
விடை:இ)தமிழ்ச்சுவை
0 Comments:
Post a Comment