> 10th tamil letter - உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைகூடுதமாகவும் இருந்தது" குறித்து கடிதம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th tamil letter - உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைகூடுதமாகவும் இருந்தது" குறித்து கடிதம்

"உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலைகூடுதமாகவும் இருந்தது" குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் "கடிதம்" எழுதுக. 

அனுப்புநர்

                    ந.சிவசாமி,

                   1/25, தெற்குத்தெரு,

                   நாகமலை, மதுரை,

பெறுநர்:

                 ஆணையர்அவர்கள்,

                உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம், 

                 திருச்சி,

பொருள் : திருச்சி அருகே - விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை. கூடுதலாகவும் இருந்தது குறித்து புகார் தெரிவித்தல் சம்பந்தமாக....

              ஐயா, நான் கடந்த வாரம் என் குடும்பத்தினருடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திருச்சி சென்றபோது, இடையில் மதிய உணவுக்காக சாலையோரத்தில் உள்ள உளாவு விடுதியில் பேருந்தை நிறுத்தினார்கள். பயனாம் செய்த அனைவரும் சாப்பிடுவதற்காக உளவு விடுதிக்குள் ஆர்வமாகச் சென்றோம். நாங்கள் உணவுக்கு பணம் கொடுத்து இரசீதும் பெற்றுக் கொண்டோம். மதிய உளவின் விலை மிகவும் கூடுதலாக இருந்தது. அவர்கள் எங்களுக்குக்கொடுத்த உணவு தரமற்றதாகவும், சுவை குறைந்த-தாகவும் உண்பதற்கு தகுதி இல்லாமலும் இருந்தது. ஒரு கைப்பிடி உணவு கூட உண்ணாமல் அதை அப்படியேவைத்துவிட்டு எழுந்து வந்துவிட்டோம். நாங்கள், உணவக மேலாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்றபோது அவர் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. எங்களை தரக்குறைவாகப் பேசினார். மேலும் இவை அனைத்தும் அந்த உணவு விடுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கும் என்பதை தங்களின் மேலான சுவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். இருக்கும் இது போன்றசம்பவங்கள் இனியும் நடக்காமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

 நன்றி

இப்படிக்கு உண்மையுள்ள 

ந.சிவசாமி

இணைப்பு

1. உணவுக்காக பெற்றாசீது,

2. உணவு விடுதியில் நடைபெற்ற சம்பவத்தை எங்களுடைய செல்போனில் பதிவு செய்த காட்சியை உங்களது அலைபேசிக்கு அனுப்பிய விபரம்.

உறைமேல் முகவரி

பெறுநர்

ஆணையாளர் அவர்கள், 

உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலகம்,

 திருச்சி,

Share:

0 Comments:

Post a Comment