> 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துதல் சார்பாக இணையவழி கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மே மாதத்தில் நடத்தப்பட இருந்தது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது . 

+2 பொதுத்தேர்வு நடத்தலாமா ? ரத்து செய்யலாமா ? கருத்து கேட்பு? - Gov toll free & mail I'd - Click here

மேலும் , தற்போது 07.06.21 - ம் தேதி முடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது . இச்சூழ்நிலையில் மாணவர்களுக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள் , பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை இணையவழியாக 03.06.2021 அன்று தொடர்பு கொண்டு கேட்டறிந்து அதன் அறிக்கையினை இவ்இயக்ககத்திற்கு அனுப்பிடத் தக்க வகையில் தயார் நிலையில் வைத்திருக்குமாறு முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஜூன் 7க்கு பிறகு அறிவிப்பு!

மேலும் தலைமையாசிரியர்கள் மூலமாக அவர்களது பள்ளிகளைச்சார்ந்த மாணவர்கள் , பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் விவரத்தை தொகுத்து முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அளித்திட தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

0 Comments:

Post a Comment