> 12th Exam - 11 கட்சிகள் ஆதரவாம்? ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

12th Exam - 11 கட்சிகள் ஆதரவாம்?

12th Exam - 11 கட்சிகள் ஆதரவாம்?

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள், கல்வியாளா்களின் கருத்துக்கள் பெறப்பட்ட நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் கல்வி அலுவலா்கள், கல்வியாளா்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் நேற்று  ஆலோசனை நடத்தினாா்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ் தற்போது சட்டசபை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம்ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த கூட்டத்தில் தேர்வு நடத்தப்பட்டால், செய்யப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Share:

1 Comments: