தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் – மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வினை ரத்து செய்யலாமா என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது பிளஸ் 2 மாணவர்க்ளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 2) தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
+2 பொதுத்தேர்வு நடத்தலாமா ? ரத்து செய்யலாமா ? கருத்து கேட்பு? - Gov toll free & mail I'd - Click here
தற்போது மதிமுக பொதுச்செயலாளரான வைகோ அவர்கள் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் கட்டாயமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை கல்லூரிகளின் உயர்கல்வி படிப்பிற்கு பிளஸ் 2 மதிப்பெண்கள் வைத்தே சேர்க்கை நடைபெற்று வருகிறார். ஆனால் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அவர்கள் புதிய கல்விக்கொள்கையை முன்னிறுத்தி அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஜூன் 7க்கு பிறகு அறிவிப்பு!
புதிய கல்விக்கொள்கை படி தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்கே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்றும் நீட் தேர்வு குறித்த எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளிவரவில்லை என்றும் தெரிவித்தார். நீட் தேர்வு கூடாது என்பதுதான் தமிழ்நாட்டின் கருத்து ஆகும். எனவே கொரோனா தொற்றின் வேகம் குறைந்த பின்பு ஒருமாத முன் அறிவிப்போடு, மேனிலைப் பள்ளி தேர்வுகளை நடத்த வேண்டும் என்றும் இதற்காக மாணவர்கள் தற்போதே தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
Please cancel the public exam because of corona and whole TAMIL
ReplyDeleteNADU students of health