Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு
Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 2.4 திருமலை முருகன் பள்ளு
குறுவினா
Question 1.
வளருங் காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும் – அடிக்கோடிட்ட தொடர் குறிப்பிடுவது என்ன?
Answer:
- ‘சோலையில் மேகக்கூட்டம் ஏறும்’ என்பது பொருள். அதாவது, தென்கரை நாட்டின் மரங்கள் உயர்ந்து வளர்ந்த சோலைகளில், மேகக்கூட்டம் தங்கிச் செல்லும் என்பதாகும்.
- மரங்கள் நிறைந்த இடத்தில் மழை பொழியும் என்னும் குறிப்பை, இதன்மூலம் அறியமுடிகிறது.
சிறுவினா
Question 1.
“சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
Answer:
இடம் :
- திருமலை முருகன் பள்ளுவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, ‘சலச வாவியில் செங்கால் பாயும்’ என்று, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.
பொருள் :
- நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.
விளக்கம் :
- வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
நெடுவினா
Question 1.
‘திருமலை முருகன் பள்ளு’ கூறும் வடகரை, தென்கரை நாட்டுப் பாடல்கள்வழி இயற்கை வளங்களை விவரிக்க.
Answer:
திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை நாட்டுவளம் :
- வடகரை நாட்டில் மலரில் மொய்க்கும் வண்டுகள், ‘இந்தளம்’ என்ற பண்ணை ரீங்காரமிட்டுப் பாடும். வண்டின் இசைகேட்டு வாய்க்காலில் மதகுகளிடையே கட்டப்பட்ட சங்கிலியில், மீனைப் பிடித்து உண்பதற்காக வந்த உள்ளான் பறவை, வாலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருக்கும்.
- தாமரைத் தடாகத்தில் மீன்கள் துள்ளிப் பாய்ந்து விளையாடும், முத்துகளை ஈன்ற வெண்மையான சங்குகள் பரவிக் காணப்படும். மின்னலையொத்த பெண்கள், பெய் என்றால் மழை பெய்யும். உள்ளங்கை ஏந்தி இரந்து உண்ணும் இயல்புடைய முனிவர்கள் கூறும் வார்த்தைகள் மெய்யாகும். இத்தன்மை கொண்ட திருமலையில், புலவர்கள் போற்றுகின்ற திருமலைச் சேவகன் வீற்றிருக்கின்றார்.
திருமலை முருகன் பள்ளு கூறும் தென்கரை நாட்டுவளம் :
- தென்கரை நாட்டின் நீண்டு வளர்ந்த சோலையில், மேகக் கூட்டங்கள் தங்கி செல்லும். இந்நாட்டில் உள்ள பொன்னாலான மாடமாளிகைகளில், அகில்புகையின் நறுமணம் பாடிக்கொண்டே இருக்கும். இம்மாளிகைகளை மயில்களும் கார்கால மேகங்களும் சூழ்ந்து காக்கும். செங்கோலைக் கொண்ட மன்னர், தென்கரை நாட்டை நீதி தவறாமல் காவல் காப்பர். இளைய பெண்கள், பொன்னாலான அரங்கில் நடித்து விளையாடி மகிழ்ந்திருப்பர்.
- இங்குள்ள குளங்களின் அலைகள், முத்துகளை ஏந்தி வரும்; பலவலைகள், கரைகளில் மோதும்பொழுது முத்துகள் சிதறி வெடிக்கும். இத்தன்மை கொண்ட குற்றாலத்தில் வண்டுகள் மொய்க்கும் கொன்றைமலரைச் சூடிய தென்னாடுடைய சிவபெருமானாகிய குற்றாலநாதர் வீற்றிருக்கின்றார்.
கூடுதல் வினா
Question 2.
‘பள்ளு’ – குறிப்பு வரைக.
Answer:
- ‘உழத்திப் பாட்டு’ என அழைக்கப்படும் பள்ளு, தொண்ணூற்றாறு வகைச் சிற்றில் குதியங்களுள் ஒன்று.
- கலிப்பா, கலித்துறை, சிந்து ஆகிய பா வகைகளால் பாடப்படுகிறது.
- உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை, எளியநடையில் நயம்படக் கூறுகிறது.
Question 3.
‘புலன்’ எனத் தொல்காப்பியம் எதனைக் கூறுகிறது?
Answer:
- பாமர மக்களுக்கு முதன்மை அளித்து உருவாக்கப்பட்ட இலக்கிய வகைகளான குறவஞ்சி, பள்ளு முதலானவற்றைத் தொல்காப்பியம் ‘புலன்’ எனக் குறிப்பிடுகிறது.
Question 4.
இளைய பள்ளி ‘காக்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளவை எவை?
Answer:
- தென்கரை நாட்டை முருகன் கைவேலும், ஊர்தியான மயிலும் காக்கும்.
- நாட்டை மன்னனின் செங்கோல் ஆட்சி பாதிகாக்கும் என, இளைய பள்ளி குறிப்பிட்டுள்ளாள்.
கூடுதல் வினா- சிறுவினா
Question 2.
திருமலை முருகன் பள்ளு’ – குறிப்பு எழுதுக.
Answer:
பண்புளிப்பட்டணம், திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்திற்கு அருகிலுள்ள ஊர். இதனைப் ‘பண்பை ‘ எனவும், ‘பண்பொழில்’ எனவும் அழைப்பர். இவ்வூரிலுள்ள சிறுகுன்று திருமலைக் குன்று.
இத்திருமலைக் குன்றில் எழுந்தருளியுள்ள முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பெரியவன் கவிராயர் என்பவரால் பாடப்பட்டது, ‘திருமலை முருகன் பள்ளு’.
கலித்துறை, கலிப்பா, சிந்து முதலான பாவகைகளால் பாடப்பட்ட இந்நூல், பள்ளிசை’ எனவும், ‘திருமலை அதிபர் பள்ளு’ எனவும் வழங்கப்படுகிறது.
இலக்கணக்குறிப்பு
- செங்கயல், வெண்சங்கு – பண்புத்தொகைகள்.
- அகில்புகை, முகில்தொகை – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்.
- கொன்றை சூடு – இரண்டாம் வேற்று மத்தொகை.
- இந்துளம் பாடும், வந்துளம் ஆடும், கயல் பாயும், சங்கயல் மேயும், பெய்யெனப் பெய்யும், செய்யெனச் செய்யும், முகில்தொகை ஏறும், புகை நாறும், கொண்டலும் காக்கும், மண்டலங் காக்கும், அரங்கில் நடிக்கும், தரங்கம் வெடிக்கும் – ‘செய்யும் என்னும் வாய்ப்பாட்டு வினைமுற்றுகள்.
- போற்றும் திருமலை. ஒளருங்காவில், சூடும் ஐயன் – பெயரெச்சங்கள்.
- மஞ்சையும் கொண்டலும் – எண்ணும்மை.
- ஏற்பவர் – வினையாலணையும் பெயர்.
- மடை இடங்கணி, வாவித்தரங்கம் – ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைகள்.
- ஈன்ற சங்கு – பெயரெச்சம்.
- எந்தி வெடிக்கும் – வினையெச்சம்.
உறுப்பிலக்கணம்
1. ஈன்ற – ஈன் + ற் + அ
- ஈன் – பகுதி,
- ற் – இறந்தகால இடைநிலை,
- அ – பெயரெச்ச விகுதி.
2. அலர்ந்து – அலர் + த் (ந்) + த் + உ
- அலர் – பகுதி,
- த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்
- , த் – இறந்தகால இடைநிலை,
- உ – வினையெச்ச விகுதி.
3. ஆடுகம் – ஆடு + க் + அம்
- ஆடு – பகுதி,
- க் – சந்தி,
- அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.
4. விரைந்து – விரை + த் (ந்) + த் + உ
- விரை – பகுதி,
- த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
- த் – இறந்தகால இடைநிலை,
- உ – வினையெச்ச விகுதி.
5. ஆடும் – ஆடு + உம்
- ஆடு – பகுதி,
- உம் – பெயரெச்ச விகுதி.
6. பெய்யும் – பெய் + ய் + உம்
- பெய் – பகுதி,
- ய் – சந்தி,
- உம் – பெயரெச்ச விகுதி.
7. போற்றும் – போற்று + உம்
- போற்று – பகுதி,
- உம் – பெயரெச்ச விகுதி.
8. நடிக்கும் – நடி + க் + க் + உம்
- நடி – பகுதி,
- க் – சந்தி,
- க் – எதிர்கால இடைநிலை,
- உம் – பெயரெச்ச விகுதி.
9. காக்கும் – கா + க் + க் + உம்
கா – பகுதி, க் – சந்தி, க் – எதிர்கால இடைநிலை, உம் – பெயரெச்ச விகுதி
10. வெடிக்கும் – வெடி + க் + க் + உம்
- வெடி – பகுதி,
- க் – சந்தி,
- க் – எதிர்கால இடைநிலை,
- உம் – பெயரெச விகுதி.
11. ஏந்தி – ஏந்து + இ
- ஏந்து – பகுதி,
- இ – வினையெச்ச விகுதி.
புணர்ச்சி விதி
1. செங்கயல் – செம்மை + கயல்
- ஈறுபோதல்” (செம் + கயல்),
- “முன்நின்ற மெய் தந்தல்” – (செங்கயல்)
2. அளியுலாம் – அளி + உலாம்
- “இஈ ஐவழி யவ்வும்” (அளி + ய் + உலாம் )
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” – (அளியுலாம்)
3. வெண்சங்கு – வெண்மை + சங்கு
- “ஈறுபோதல்” (வெண்சங்கு)
4. திருமலைச்சேவகன் – திருமலை) + சேவகன்
- “இயல்பினும் விதியினும் என்ற உயிர்முன் கசதப மிகும்” (திருமலைச்சேவகன் )
5. மண்டலங்காக்கும் – மண்டலம் + காக்கும்
- “மவ்வீறு ஒற்று நாமைக்கு இனமாத் திரியும்” (மண்டலங்காக்கும்)
பலவுள் தெரிக (கூடுதல் வினாக்கள்)
Question 1.
‘தரளம் என்ற சொல்லின் பொருள் ………….
அ முத்து
ஆ) பவளம்
இ) மாணிக்கம்
ஈ) வைடூரியம்
Answer:
அ) முத்து
Question 2.
சாளு’ என்ற இலக்கிய வடிவத்தின் வேறுபெயர்………………..
அ) கவிப் பாட்டு
ஆ) இயற்கைப் பாட்டு
இ) உழத்திப் பாட்டு
ஈ) வயல் பாட்டு
Answer:
இ) உழத்திப் பாட்டு
Question 3.
‘திருமலை முருகன் பள்ளு’ நூலை இயற்றியவர்………………..
அ) அழகிய பெரியவன்
ஆ) பெரியவன் கவிராயர்
இ) வில்வரத்தினம்
ஈ) திரிகூடராசப்பர்
Answer:
அ) அழகிய பெரியவன்
Question 4.
திருமலை முருகன் பள்ளுக்கு வழங்கும் வேறு பெயர்கள்……………………
அ) பள்ளிசை குறவஞ்சி
ஆ) திருமலை அதிபர் பள்ளு குறத்திப்பாட்டு
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
ஈ) முக்கூடற்பள்ளு, பள்ளிசை
Answer:
இ) திருமலை முருகன் பள்ளு, பள்ளிசை
Question 5.
‘வட ஆரியநாடு’ என வழங்கப் பெறுவது…………..
அ) குற்றாலம்
ஆ) பண்பை
இ) பண்புளிப்பட்டணம்
ஈ) திருமலை
Answer:
ஈ) திருமலை
Question 6.
‘தென் ஆரியநாடு’ என வழங்கப்பட்டது…………….
அ) திருமலை
ஆ) பண்பொழில்
இ) பேரணாம்பட்டு
ஈ) குற்றாலம்
Answer:
ஈ) குற்றாலம்
Question 7.
‘திருமலை முருகன் பள்ளு’வில் ‘திருமலை’ எனக் குறிப்பிடப்படுவது………………
அ) குற்றாலம்
ஆ) தென் ஆரியநாடு
இ) வட ஆரியநாடு
ஈ) திருநெல்வேலி
Answer:
இ) வட ஆரியநாடு
Question 8.
பொருத்துக
i) இந்துளம் – 1. மயில்
ii) இடங்கணி – 2. ஒருவகைப் பண்
iii) தரளம் – 3. சங்கிலி
iv) மஞ்ஞை – 4. முத்து
அ) 2, 3, 4, 1
ஆ) 3, 4, 2, 1
இ) 4, 3, 2, 1
ஈ) 2, 1, 4, 3
Answer:
அ) 2, 3, 4, 1
Question 9.
வளருங்காவில் முகில்தொகை ஏறும் – பொன்
மாடம் எங்கும் அகிற்புகை நாறும்
குளிரும் மஞ்ஞையும் தொடைலும் காக்கும்
கோல்முறை மன்னர் மண்டலங் காக்கும் – இயைபுத் தொடையைத் தெரிவு செய்க.
அ) வளரும் காவில்ல – முகில்தொகை
ஆ) மாடம் எங்கு – அகில்புகை
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்
ஈ) குளிரும் மஞ்ஞையும் – கொண்டலும் மண்டலம்
Answer:
இ) ஏறும் நாறும் – காக்கும் காக்கும்
Question 10.
முஞ்ஞை ‘ என்பது …………….. குறிக்கும்.
அ) வண்டை
ஆ) சேவலை
இ) மயிலை
ஈ) உள்ளான் பறவையை
Answer:
இ) மயிலை
Question 11.
‘இந்தளம்’ என்பது……………..
அ) ஒருவகைப் பண்
ஆ) வண்டு
இ) மயில்
ஈ) உள்ளான் பறவை
Answer:
அ) ஒருவகைப் பண்
Question 12.
‘அளி’ என்பது …………… குறிக்கும்.
அ) முத்தை
ஆ) வண்டை
இ) சோலையை
ஈ) உள்ளானை
Answer:
ஆ) வண்டை
0 Comments:
Post a Comment