> Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 5.4 பிம்பம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 5.4 பிம்பம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 5.4 பிம்பம்

நெடுவினா

Question 1.

‘பிம்பம்’ கதையின் வாய்வாகப் பிரபஞ்சன் தெளிவுபடுத்தும் மனித முகங்களைப் பற்றி விவரிக்க.

Answer:

முகமூடி அணிதல் மனித இயல்பு :

  • மனிதன் ஒருவன், மற்றவர் இயல்புக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொள்ளும்போது, அவன் அவனாக இருப்பதில்லை. (அவ்வேளைகளில் அவரவருக்கு ஏற்ப வெவ்வேறு முகமூடியை அணிந்துகொள்கிறான். சில சமயங்களில் மனிதன், இப்படி அடிக்கடி முகமூடியை மாற்றி மாற்றி வாழ்வதால், அவனது உண்மைத் தன்மையை, உண்மை முகத்தையே இழந்துவிடுகிறான். அதனால் சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் போய்விடுகிறான்.

வேண்டாத விருந்தினர் :

  • பம்பம் கதையைப் பிரபஞ்சன், தம்மையே முன்னிலைப்படுத்திக்கொண்டு எழுதுகிறார். காரணம் ஏதுமின்றி எந்த நேரத்திலும் அது வெளிவருகிறது. தன் கட்டளைக்கு உடன்படாமல், வீட்டில் உரையாடி மகிழ்வதற்கு என்றில்லாமல், விரும்பும்போது இம்சிக்க வருவதுபோல் இருக்கிறது. அது வேண்டாத விருந்தாளியாகத் தன் விருப்பம்போல் சுற்றி அலைந்து, எதையும் துருவித்துருவிக் கேட்கிறது.

கேள்விகளால் துளைத்தால் :

  • மனிதன் தன்னையும் தன் மனச்சாட்சியையும் ஏமாற்றுவதை வெளிப்படச் செய்கிறது. நிதானமாக எண்ணிப்பார்த்தால், ஒரு மனிதன் எத்தனை வண்ணங்களில், வெவ்வேறு அளவுகளில், பல்வேறு கோணங்களில், பல முகங்களோடு வாழ்வது வெளிப்படும். எதிரில் உள்ளவர் தாயானாலும், அவர் காட்டும் முகபாவத்திற்கு ஏற்பத் தன் முகபாவத்தை மாற்றிக் கொள்ளும் மனிதர்கள்தாம் உள்ளனர்.

முகங்களின் குவியல் :

ஒவ்வொருவர் காலடியிலும் பல முகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் தேவையானதைத் தேவையானபோது பயன்படுத்திக் கொள்வதே சகஜம். இத்துணை நிகழ்வுகளுக்கும் விவாதங்களுக்கும் பிறகு வந்த பிம்பம் விடைபெறுவதோடு பிரபஞ்சன், பிம்பம் கதையை முடித்துள்ளார். விடைபெறும் பிம்பத்தால், சொந்த முகம் என்று எதுவும் மனிதனிடம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது.


மனச்சாட்சி :

ஒவ்வொரு மனிதனிடமும் விருப்பு வெறுப்புகள் உள்ளன. எனினும், பிறருடன் உறவு பாராட்டும்போது, அவரவர் இயல்புக்கு ஏற்பத் தன்னை மறைத்து, மாற்றிக் கொள்கிறான். எனினும், அவனவன் மனச்சாட்சி என்பது, உண்மையை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இவ்வகையில் மனிதன் வாழ்க்கையில் இப்படி முகம் மாற்றி முகம் மாற்றித் தன் உண்மை முகத்தை இழந்து, அடையாளமற்ற தன்மையில் காட்சியளிக்கிறான்.

Share:

0 Comments:

Post a Comment