> Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 1.3 நன்னூல் பாயிரம் Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 1.3 நன்னூல் பாயிரம்

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 1.3 நன்னூல் பாயிரம்

பலவுள் தெரிக

Question 1.

பாயிரம் இல்லது ……………. அன்றே

அ) காவியம்

ஆ) பனுவல்

இ) பாடல்

ஈ) கவிதை

Answer:

ஆ) பனுவல்

குறுவினா

Question 1.

பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

Answer:

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

சிறுவினா

Question 1.

நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

Answer:

  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
  • பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

நெடுவினா

Question 1.

நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

Answer:

பாயிரம் :

நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் 

(1) பொதுப்பாயிரம், 

(2)சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் :

எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை

மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் :

தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.

நூல் சிரியரின் பெயர்

நூல் பின்பற்றிய வழி

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;

நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;

நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;

இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;

இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.

பவணந்தி முனிவர் – குறிப்புத் தருக.

Answer:

  • * ‘நன்னூல்’ என்னும் தமிழ் இலக்கண நூலை இயற்றியவர் பவணந்தி முனிவர்.
  • * தம்மை ஆதரித்த சிற்றரசன் சீயகங்கனின் வேண்டுதலால், இந்நூலைப் பாடியதாகப் பாயிரம் கூறுகிறது.

Question 3.

பாயிரம் எதற்கு உதவுகிறது?

Answer:

  • நூலைப்பற்றித் தெரிந்துகொள்வதற்கும், நூலைப் புரிந்துகொள்வதற்கும், நூலின் சிறப்பை உணர்ந்து விருப்பத்துடன் கற்பதற்கும் பாயிரம் உதவுகிறது.

Question 4.

பாயிரத்தின் வேறு பெயர்கள் யாவை?

Answer:

  • முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புணர்ந்துரை என்பன, பாயிரத்தின் வேறு பெயர்கள்.

Question 5.

நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகள் யாவை?

Answer:

  • எழுத்தியல், பதவியல், உயிரீற்றுப் புணரியல், மெய்யீற்றுப் புணரியல், உருபுப் புணரியல் என்னும் ஐந்தும், நன்னூல் எழுத்ததிகாரப் பகுதிகளாகும்.

Question 6.

நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகள் எவை?

Answer:

  • பெயரியல், வினையியல், பொதுவியல், இடையியல், உரியியல் என்னும் ஐந்தும், நன்னூல் சொல்லதிகாரம் உணர்த்தும் பகுதிகளாகும்.

Question 7.

எது சிறந்த நூலாக மதிக்கப்படாது?

Answer:

  • ஆயிரம் முகத்தைப் பெற்றிருந்தாலும், பல்வேறு துறைசார்ந்த செய்திகளை விரிவாகப் பெற்றிருந்தாலும், அந்த நூலுக்குப் பாயிரம் இல்லை என்றால், அது சிறந்த ந வராக மதிக்கப்படாது.


இலக்கணக் குறிப்பு

  • மாநகர் – உரிச்சொற்றொடர்
  • காட்டல், கோடல் – தொழிற்பெயர்கள்
  • கேட்போர், நுவல்வோன், கொள்வோன், ஆக்கியோன் – வினையாலணையும் பெயர்கள்

  • ஐந்தும் – முற்றும்மை
  • அமைதோள் – உவமைத்தொகை
  • மாடக்கு – ‘அத்து’ச் சாரியை தொக்கி நின்றது
  • ஆடமை (ஆடு அமை) – வினைத்தொகை

உறுப்பிலக்கணம்

1. வைத்தார் – வை + த் + த் + ஆர்.

  • வை – பகுதி, 
  • த் – சந்தி, த் – இறந்தகால இடைநிலை, 
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.

2. கொள்வோன் – கொள் + வ் + ஓன்.

  • கொள் – பகுதி, 
  • ‘வ்’ – எதிர்கால இடைநிலை,
  • ஓன் – ஆண்பால் வினை சற்று விகுதி.

3. நின்ற – நில் (ன்) + ற் + அ.

  • நில் – பகுதி ‘ல்’,
  •  ‘ன்’ ஆனது விகாரம், 
  • அ – பெயயெச்ச விகுதி

4. ஏற்றி – ஏற்று + இ

  • ஏற்று – பகுதி, 
  • இ – வினையெச்ச விகுதி.

புணர்ச்சி விதிகள்

1. அணிந்துரை – அணிந்து + உரை

  •  “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (அணிந்து + உரை)
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்ரே’ அணிந்துரை )

2. பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுச்சிறப்பு)

3. பயனோடு – பயன் + ஓடு

  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே (பயனோடு)

4. முன்னுரை – முன் + உரை

  • “தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்” (முன்ன் + உரை)
  • “உடல்மேல் உயிர்த்து ) ஒன்றுவது இயல்பே” (முன்னுரை )

5. நூன்முகம் – நூல் + முகம்

“லள வேற்றுமையில் மெலிமேவின் னணவும் ஆகும்” (நூன்முகம்)

6. நூற்பெயர் – நூல் + பெயர்

  • “லௗ வேற்றுமையில் வலிவரின் றடவும் ஆகும்” (நூற்பெயர்)

7. நன்னூல் – நன்மை + நூல்

  • நறுபோதல்” – நன் + நூல், “னலமுன் றனவும் ஆகும் தநக்கள்” (நன் + னூல்)

8. தந்துரை – தந்து + உரை

  • “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (தந்த் + உரை)
  • “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தந்துரை )

9. பொதுப்பாயிரம் – பொது + பாயிரம்

  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” (பொதுப்பாயிரம்)

பலவுள் தெரிக

Question 1.

பாயிரம் இல்லது ……………. அன்றே

அ) காவியம்

ஆ) பனுவல்

இ) பாடல்

ஈ) கவிதை

Answer:

ஆ) பனுவல்


Question 2.

நன்னூலின் ஆசிரியர்………………

அ) தொல்காப்பியர்

ஆ) அகத்தியர்

இ) பவணந்தி முனிவர்

ஈ) திருவள்ளுவர்

Answer:

இ) பவணந்தி முனிவர்

Question 3.

நன்னூல் கூறும் இலக்கண வகை ………………..

அ) எழுத்து, பொருள்

ஆ) சொல், பொருள்

இ) யாப்பு, சொல்

ஈ) எழுத்து, சொல்

Answer:

ஈ) எழுத்து, சொல்

Question 4.

நன்னூலைப் பவணந்தி முனிவர், ………………..வேண்டுதலால் இயற்றினார்.

அ) பாரிவள்ளல்

ஆ) சீதக்காதி

இ) சீயகங்கன்

ஈ) சடையப்பர்

Answer:

இ) சீயகங்கன்

Question 5.

நன்னூல் விளக்கும் இலக்கண வகைகளின் எண்ணிக்கை

அ) 4

ஆ) 3

இ) 5

ஈ) 2

Answer:

ஈ) 2

Question 6.

நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பதால், ……………………… எனப்பட்டது.

அ) முகவுரை

ஆ) புனைந்துரை

இ) புறவுரை

ஈ) அணிந்துரை

Answer:

அ) முகவுரை

Question 7.

நூலில் சொல்லிய பொருள் அல்லாதவற்றைத் தந்து உரைப்பது …………..

அ) முகவுரை

ஆ) நான்முகம்

இ) தந்துரை

ஈ) புறவுரை

Answer:

இ) தந்துரை

Question 8.

எல்லாவகை நூல்களுக்கும் அழகு சேர்ப்பது …………….

அ) அணிந்துரை

ஆ) தந்துரை

இ) சிறப்புரை

ஈ) பதிகம்

Answer:

அ) அணிந்துரை

Question 9.

நூலின் முதன்மையான கருத்துகளைத் தொகுத்துக் கூறுவதால் ……………….எனப்பட்டது.

அ) முகவுரை

ஆ) தந்துரை

இ) பதிகம்

ஈ) அணிந்துரை

Answer:

இ) பதிகம்


Question 10.

நூலுக்கு அணியாக அமைவது………………..

அ) முகவுரை

ஆ) நூன்முகப்பு

இ) புனைந்துரை

ஈ) அணிந்துரை

Answer:

ஈ) அணிந்துரை

Question 11.

நூலின் கருத்தோடு அதன் வரலாற்றையும் எடுத்துரைப்பது………………..

அ) தந்துரை

ஆ) அணிந்துரை

இ) புறவுரை

ஈ) பதிகம்

Answer:

இ) புறவுரை

Question 12.

மாடங்களுக்கு அழகு தருவது ……………………..

அ) நகரங்கள்

ஆ) மகளிர்

இ) ஓவியங்கள்

ஈ) வண்ணங்கள்

Answer:

இ) ஓவியங்கள்

Question 13.

பெரிய நகாங்களுக்கு அழகு சேர்ப்பவை ………………

அ) மாடங்கள்

ஆ) நகரங்கள்

இ) வண்ணங்கள்

ஈ) கோபுரங்கள்

Answer:

கோபுரங்கள்

Question 14.

அனலன்கள் அழகு சேர்ப்பது………………..

அ) குழந்தைகளுக்கு

ஆ) அங்காடிகளுக்கு

இ) மகளிருக்கு

ஈ) சிலைகளுக்கு

Answer:

இ) மகளிருக்கு

Question 15.

ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும்

பாயிரம் இல்லது பனுவல் அன்றே – அடி எதுகையைத் தெரிவு செய்க.

அ) ஆயிரம் முகத்தான் – அகன்றது ஆயிரம்

ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது

இ) பாயிரம் இல்லது – பனுவல் அன்றே

ஈ) அகன்றது ஆயினும் – பனுவல் அன்றே

Answer:

ஆ) ஆயிரம் முகத்தான் – பாயிரம் இல்லது

Question 16.

நன்னூலுக்குத் தொடர்பில்லாதது ……………..

அ) முகவுரை, பதிகம், அணிந்துரை

ஆ) நூன்முகம், புறவுரை, தந்துரை

இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி

ஈ) பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம்

Answer:

இ) வேற்றுமையணி, வேற்றுப்பொருள்வைப்பணி

Share:

0 Comments:

Post a Comment