தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – ஜூன் 7க்கு பிறகு அறிவிப்பு..
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டுமாக திறப்பது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.
+2 பொதுத்தேர்வு நடத்தலாமா ? ரத்து செய்யலாமா ? கருத்து கேட்பு? - Gov toll free & mail I'd - Click here
இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கோடை விடுமுறை நேற்றுடன் (மே 31) முடிவடைந்துள்ளது. இன்று (ஜூன் 1) முதல் பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு துவங்கவுள்ளது. தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த கல்வியாண்டில் பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பில் புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கட்டாயம் – மதிமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்..
அவர்கள் பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு வழிகாட்டுதல்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் புதிய அமைச்சராக அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வி முதன்மை செயலாளராக காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்கள் புதிய கல்வி ஆண்டிற்கான பணிகளை மேற்கொண்டு, அதற்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும். தமிழகத்தில் தற்போது முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதால், 2021 – 2022 ஆம் கல்வியாண்டுக்கான புதிய வகுப்புகள் இன்று (ஜூன் 1) துவங்க உள்ள நிலையில், பள்ளிகளை துவங்கி ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Please 12th exam cancel pannunga
ReplyDeletePls pls cancel pannuga 😭
ReplyDelete