> 6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

6th Tamil Guide Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

Students can Download 6th Tamil Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் Questions and Answers, Summary, Notes,

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.5 சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள்

கற்பவை கற்றபின்

கரிகாலனும் அவனுடைய தங்கை மலர்க்கொடியும் பூங்காவிற்குச் சென்றனர். அங்கு இருந்த செடிகளில் பூக்கள் மலர்ந்து இருந்தன. “இங்கு உள்ள மலர்களில் இம்மலர் அழகாக உள்ளது. அம்மலர் பெரியதாக உள்ளது” என்றாள் மலர்க்கொடி, “இந்த மலரைப் பார் அந்த மலரைவிட அழகாக உள்ளது” என்றான் கரிகாலன்.

Question 1.

இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்களை எடுத்து எழுதுக.

Answer:

இப்பத்தியில் உள்ள சுட்டுச் சொற்கள் :

  • அவனுடைய, அங்கு, இங்கு, இம்மலர், அம்மலர், இந்த, அந்த

Question 2.

நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் சிலவற்றை எழுதுக.

Answer:

நாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் சுட்டுச் சொற்கள் :

  • அது, அவர்கள், அவள், அவை, அந்த வீடு, இது, இவர்கள், இவள், இவை, இந்த வீடு, இப்புத்தகம், அப்புத்தகம், இப்பையன், அப்பையன்.

பத்தியில் உள்ள வினாச் சொற்களை எடுத்து எழுதுக

செழியன் துணிக்கடைக்குச் சென்றான். விற்பனையாளர் ஒருவரிடம் ஆயத்த ஆடைகள் பகுதி எங்கு உள்ளது? என்று வினவினான். “யாருக்கு ஆடை வேண்டும்? உனக்கா. 2 பெரியவர்களுக்கா?” என்று கேட்டார் விற்பனையாளர். “ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? சிறுவர்களுக்கான ஆடைகள் இல்லையோ?” என்று வினவினான். “நீ கேட்பது உன் அளவுக்குரிய ஆடைதானே? அதோ அந்தப் பகுதியில் இருக்கிறது” என்றார் விற்பனையாளர்.

பத்தியில் உன்ன வினாச்சொற்கள் :

1. எங்கு ?

2. யாருக்கு?

3. ஏன்?

4. இல்லையோ?

5. ஆடைதானே?

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. என் வீடு ……………. உள்ள து. (அது/அங்கே )

2. தம்பி …………….. வா. (இவர்/இங்கே )

3. நீர் ………………. தேங்கி இருக்கிறது? (அது/எங்கே )

4. யார் …………….. தெரியுமா? (அவர்/யாது)

5. உன் வீடு. …………. அமைந்துள்ளது? (எங்கே என்ன)

Answer:

1. அங்கே

2. இங்கே

3. எங்கே

4. அவர்

5. எங்கே

குறுவினா

Question 1.

சுட்டு எழுத்துகள் என்றால் என்ன? அவை யாவை?

Answer:

  • ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர். அவை அகச்சுட்டு, புறச்சுட்டு, அண்மைச்சுட்டு, சேய்மைச்சுட்டு, சுட்டுத்திரிபு.

Question 2.

அகவினா, புறவினா – வேறுபாடு யாது?

Answer:

சிந்தனை வினா

Question 1.

அகச்சுட்டு, அகவினா, புறச்சுட்டு, புறவினா என்று பெயரிட்ட காரணத்தை எழுதுக.

Answer:

அகச்சுட்டு : 

  • சுட்டெழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.

(எ.கா.) அது, இவன், அவர்.

அகவினா : 

  • வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினால் பொருள் தராது.

(எ.கா.) எது? எவர்? யார்?

புறச்சுட்டு :

  •  சுட்டெழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று சுட்டுப்பொருளை உணர்த்தும். சுட்டெழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.

(எ.கா.) அப்பையன், இப்பெட்டி

புறவினா : 

  • வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே நின்று வினாப் பொருளை உணர்த்தும். வினா எழுத்துகளை நீக்கினாலும் பொருள் தரும்.

(எ.கா.) எவ்வீடு? வருவானோ ?

  • (i) அகச்சுட்டு, அகவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் உள்ளேயே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.
  • (ii) புறச்சுட்டு, புறவினா இவற்றில் முறையே சுட்டெழுத்துகள், வினா எழுத்துகள் சொல்லின் வெளியே நின்று சுட்டுப்பொருளையும் வினாப் பொருளையும் உணர்த்துவதால் இப்பெயர் பெற்றது.

மொழியை ஆள்வோம்

சொற்றொடர்ப் பயிற்சி.

அ) அந்த, இந்த என்னும் சுட்டுச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

Answer:

(i) அந்தக் குழந்தை அழகாக இருந்தது.

(ii) இந்தக் குளத்தில் நீர் வற்றி விட்டது.

ஆ) எங்கே, ஏன், யார் ஆகிய வினாச் சொற்களை அமைத்துத் தொடர்கள் எழுதுக.

Answer:

(i) “எங்கே செல்கிறாய்?” என்று கண்ணன் முகிலனிடம் கேட்டான்.

(ii) “ஏன் அழுகிறாய்?” என்று தாய் குழந்தையைக் கேட்டாள்.

(iii) திருக்குறளை இயற்றியவர் யார்?

சொற்களைச் சேர்த்துச் சொற்றொடரை நீட்டி எழுதுக

அ) நான் பள்ளியில் படிக்கிறேன். (ஆறாம் வகுப்பு, அரசு)

Answer:

நான் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறேன்.

ஆ) பொன்னன் முன்னேறினான். (வணிகம் செய்து, பொருளீட்டி, துணி)

Answer:

பொன்னன் துணி வணிகம் செய்து பொருளீட்டி முன்னேறினான்.

பின்வரும் கட்டங்களில் உள்ள சொற்களைக் கொண்டு சொற்றொடர்கள் அமைக்க


  • (i) நான் ஊருக்குச் சென்றேன்.
  • (ii) நீ ஊருக்குச் சென்றாய்.
  • (iii) அவன் ஊருக்குச் சென்றேன்.
  • (iv) அவள் ஊருக்குச் சென்றான்.
  • (v) அவர் ஊருக்குச் சென்றாள்.

அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தக்க இடத்தில் சேர்த்து எழுதுங்கள்

அ) நீங்கள் வரும்போது எனக்குப் புத்தகம் வாங்கி வாருங்கள். (ஒரு)

Answer:

நீங்கள் வரும்போது எனக்கு ஒரு புத்தகம் வாங்கி வாருங்கள்.

ஆ) நாம் உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும். (இயற்கை)

Answer:

நாம் இயற்கை உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்.

இ) நான் சொன்ன வேலையை அக்கறையுடன் செய்திருக்கிறார்கள். (மிகுந்த)

Answer:

நான் சொன்ன வேலையை மிகுந்த அக்கறையுடன் செய்திருக்கிறார்கள்.

கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும். ஓர் இடத்தில் உற்பத்தியாகும் பொருள்களைப் பல இடங்களுக்கு அனுப்புவதும் பல இடங்களில் கிடைக்கும் பொருட்களை ஓர் இடத்தில் கிடைக்கச் செய்வதும் வணிகம் ஆகும்.

கிடைக்கும் பொருள்களின் மதிப்பைக் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும். சான்றாகக் கல் என்பது விற்பனைப் பொருளன்று. ஆனால் அதனைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இதனை மதிப்புக் கூட்டுதல் என்பர்.

Question 1.

கிடைக்கும் பொருள்களின் …………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகம்.

அ) அளவை

ஆ) மதிப்பை

இ) எண்ணிக்கையை

ஈ) எடையை

Answer:

ஆ) மதிப்பை

Question 2.

சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூளை ………………. மாற்றலாம்.

Answer:

கோலமாவாக

Question 3.

வணிகத்தின் நோக்கம் என்ன?

Answer:

மனிதர்களுக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் கிடைக்கச் செய்வதே வணிகத்தின் நோக்கம் ஆகும்.

Question 4.

மதிப்புக் கூட்டுதல் என்றால் என்ன?

Answer:

கல்லைச் செதுக்கிச் சிலையாக மாற்றலாம். உதிரும் கல்தூளைக் கோலமாவாக மாற்றலாம். இது மதிப்புக் கூட்டுதல் எனப்படும்.

Question 5.

இப்பத்திக்கு ஏற்ற தலைப்பை எழுதுக.

Answer:

வணிகம்.

மொழியோடு விளையாடு

விடுகதைக்கு விடை காணுங்கள்

(கப்பல், ஏற்றுமதி இறக்குமதி, தராசு, நெல்மணி, குதிரை)

1. தனி ஆளாய் இருந்தால் நடுநிலையாய் இருந்திடுவான்; யாரும் வந்து அமர்ந்தால் ஏற்றம் இறக்கம் காட்டிடுவான். அவன் யார்?

Answer:தராசு

2. தண்ணீ ரில் கிடப்பான்; தள்ளாடித் தள்ளாடி நடப்பான். காலில்லாத அவன் யார்?

Answer:கப்பல்

3. பேசமுடியாத ஓட்டப்பந்தய வீரனுக்கு வாய்க்கு மட்டும் பூட்டு. அவன் யார்?

Answer: குதிரை

4. இயந்திரத்தால் செய்ய முடியாத மணி; ஊசி நூலில் கோக்க முடியாத மணி; பூமியில் விளையும் மணி; பூவுலகத்தார் விரும்பும் மணி. எந்த மணி?

Answer: நெல்மணி

5. ஒருமதி வெளியே போகும்; ஒருமதி உள்ளே வரும்; இருமதியும் சேர்ந்துவிட்டால் பலநிதியும் சேர்ந்து வரும், அவை என்ன?

Answer: ஏற்றுமதி இறக்குமதி

பின்வரும் நவமணிகளை அகரவரிசைப்படுத்தி எழுதுக

நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்

1. கோமேதகம்

2. நீலம்

3. பவம்

4. புஷ்பராகம்

5. மரகதம்

6. மாணிக்கம்

7. முத்து

8. வைடூரியம்

9. வைரம்.

செயல் திட்டம்

Question 1.

பண்டைத் தமிழகத்தின் துறைமுகங்கள் பற்றியும் அங்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் எழுதுக.

Answer:

  • சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களோடு தற்போது எண்ணூரிலும் முக்கிய துறைமுகம் ஏற்பட இருக்கின்றது. தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் கீர்த்திப் பெற்றதாக இருந்துள்ளது. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் ஆதியில் துறைமுகங்கள், வணிகத் தலங்களாக அமைந்திருந்தன.
  • இத்துறைமுகங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னைக் கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார்.
  • கொற்கை, புகார் போன்ற துறைமுகங்களில் அரேபிய குதிரைகள் ஓடுகின்ற சத்தம், பொருட்களை வாங்கும் பொழுது ரோமானியர்கள் கொடுக்கும் பொற்காசுகளின் சலசலப்பு, உயர்தமிழ் செம்மொழிக்கு ஒப்ப அரபி, ரோமானியரின் மொழி, பேச்சுக்கள், இரவு நேரங்களில் வெளிநாட்டு லாந்தர்களின் மந்தகாச ஒளி, வெளிநாட்டினர் நடமாட்டத்தில் தூங்கா நகரங்களாக இவை இருந்தன. இந்து, கிறித்துவம், இஸ்லாம் மத நல்லிணக்கமும் பேணப்பட்டது.
  • இந்தத் துறைமுகங்கள் பண்டைய காலத்தில் கடற்கொள்ளையர் அணுக முடியாத வகையில் பாதுகாப்பானதாக இருந்துள்ளன. கொற்கை முத்து மற்றும் சேர நாட்டிலிருந்து வந்த மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற பொருட்களை யவனர், உரோமர், எகிப்தியர், கிரேக்கர் ஆகியோர் தங்களுடைய பொற்காசுகளைக் கொடுத்து, தமிழ் மண்ணிலிருந்து கடல் வழியாக எடுத்துச் சென்றதற்குச் சான்றுகள் உள்ளன.

Question 2.

உங்களுக்குத்தெரிந்த மூன்று தொழில்களின் பெயர்களை எழுதி அதில் பயன்படுத்தப்படும் ஐந்தைந்து சொற்களைப் பட்டியலிடுக. (எ.கா.) உழவு

Answer:

(i) உழவுத்தொழில் – கலப்பை, அறுவை இயந்திரம், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், இயற்கை உரங்கள்.

(ii) நெசவுத்தொழில் – ஊடைநூல், பாவுநூல், கரக்கோல், மிதிக்கட்டை, கத்திக் கயிறு

(iii) தச்சுத்தொழில் – உளி, அரம், மரப்பலகைகள், ஒட்டுப்பலகைகள், சுத்தி.

(iv) உணவுத்தொழில் – பாத்திரங்கள் (தட்டு, கரண்டி, குவளைகள், சிறு பாத்திரங்கள், பெரிய பாத்திரங்கள்) அடுப்பு, சமையலுக்குத் தேவையான பொருட்கள்.

குறுக்கெழுத்துப்புதிர்


இடமிருந்து வலம்

1. நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர்.

2. சுட்டிக்காட்டப் பயன்படுவது ……………. எழுத்து

வலமிருந்து இடம்

4. அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

5. ஒரு பொருளைக் கொடுத்து வேறு பொருளைப் பெறும் முறை.

மேலிருந்து கீழ்

1. காடும் காடு சார்ந்த இடமும்

3. தோட்டத்தைச் சுற்றி …………… அமைக்க வேண்டும்.

கீழிருந்து மேல்

4. மீனவருக்கு மேகம் ……………. போன்றது.

5. உடலுக்குப் போர்வையாக அமைவது.

விடைகள் :

இடமிருந்து வலம் : 1. முடியரசன், 2. சுட்டு

மேலிருந்து கீழ் : 1. முல்லை , 3. வேலி

வலமிருந்து இடம் : 4. குதிரை, 5. பண்டமாற்று

கீழிருந்து மேல் :4. குடை, 5. பனி மூட்டம்

கலைச்சொல் அறிவோம்

1. பண்ட ம் – Commodity

2. கடற்பயணம் – Voyage

3. பயணப் படகுகள் – Ferries

4. தொழில் முனைவோர் – Entrepreneur

5. பாரம்பரியம் – Heritage

6. கலப்படம் – Adulteration

7. நுகர்வோர் – Consumer

8. வணிகர் – Merchant

Share:

0 Comments:

Post a Comment