> 7th Std Science Term 1 Solution | Lesson.1 அளவீட்டியல் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

7th Std Science Term 1 Solution | Lesson.1 அளவீட்டியல்

7th Science Term 1 அளவீட்டியல் Physics Book back question 

7th Science guide answers

Lesson.1 அளவீட்டியல்

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும்:

1. பின்வருவனவற்றுள் எது வழி அளவு?

  1. நிறை
  2. நேரம்
  3. பரப்பு
  4. நீளம்

விடை : 3.பரப்பு

2. பின்வருவனவற்றுள் எது சரி?

  1. 1L = 1cc
  2. 1L = 10 cc
  3. 1L = 100 cc
  4. 1L = 1000 cc

விடை : 4.1L = 1000 cc

3. அடர்த்தியின் SI அலகு

  1. கிகி / மீ2
  2. கிகி / மீ3
  3. கிகி / மீ
  4. கி / மீ3

விடை :2. கிகி / மீ3

4. சம நிறையுள்ள இரு கோளங்களின் கனஅளவுகளின் விகிதம் 2:1 எனில், அவற்றின் அடர்த்தியின் விகித

  1. ) 1:2 
  2. ) 2:1
  3. ) 4:1
  4. ) 1:4

விடை :1) 1:2

5. ஒளி ஆண்டு என்பது எதன் அலகு?

  1.  தொலைவு
  2. நேரம்
  3. அடர்த்தி
  4. நீளம் மற்றும் நேரம்

விடை :4. நீளம் மற்றும் நேரம்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள பொருட்களின் பருமனை அளக்க ___________ விதி பயன்படுகிறது

விடை : ஆர்க்கிமிடிஸ்

2. ஒரு கன மீட்டர் என்பது ___________ கன சென்டிமீட்டர்.

விடை : 1,00,000

3. பாதரசத்தின் அடர்த்தி ___________ 

விடை : 13,600 கிகி / மீ3

4. ஒரு வானியல் அலகு என்பது ___________ 

விடை : 149.6 மில்லியன் கிமீ = 149.6 × 106 கிமீ = 1.496 × 1011 மீ.

5. ஓர் இலையின் பரப்பை _________ பயன்படுத்தி கணக்கிடலாம்.

விடை : வரைபடத்தாளை

III. பின்வரும் கூற்றுகள் சரியா தவறா எனக் கூறுக.

1. ஒரு பொருளின் மேற்பரப்பே அதன் கனஅளவு எனப்படும்.

விடை : சரி

2. திரவங்களின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

விடை : சரி

3. நீர் மண்ணெண்ணெயை விட அடர்த்தி அதிகம் கொண்டது.

விடை : சரி

4. இரும்பு குண்டு பாதரசத்தில் மிதக்கும்.

விடை : சரி

5. ஓரலகு பருமனில் குறைந்த எண்ணிக்கையில் மூலக்கூறுகளைக் கொண்ட பொருள் அடர்த்தி அதிகம் கொண்டப் பொருள் எனப்படும்.

விடை : தவறு

IV. பொருத்துக

A)

1. பரப்பு - ஓளி ஆண்டு

2. தொலைவு - மீ3

3. அடர்த்தி -மீ2

4. கன அளவு -கிகி

5. நிறை -கிகி / மீ3

விடை : 1 – இ, 2 – அ, 3 – உ, 4 – ஆ, 5 – ஈ

A)

1. பரப்பு - கிகி / மீ3

2. நீளம் - அளவிடும் முகவை

3. அடர்த்தி - பொருளின் அளவு

4. கன அளவு -கயறு

5. நிறை - தள வடிவ பொருள்

விடை : 1 – உ, 2 – ஈ, 3 – அ, 4 – ஆ, 5 – இ

V. பின்வருவனவற்றை சரியான வரிசையில் எழுதவும்:

1. 1 L, 100 cc, 10 L, 10 cc

விடை : 10 cc, 100 cc, 10 L

2. தாமிரம், அலுமினியம், தங்கம், இரும்பு

விடை : அலுமினியம், இரும்பு, தாமிரம், தங்கம்

VI.ஒப்புமையைக் கொண்டு நிரப்புக

1. பரப்பு : மீ2 :: கன அளவு :____________

விடை : கன மீட்டர் (அ) மீ3

2. திரவம் : லிட்டர் :: திடப்பொருள் :_____________

விடை : கிலோகிராம்

3. நீர் : மண்ணெண்ணெய் :: ____________ : அலுமினியம்

விடை : இரும்பு

VII. கூற்று-காரணம் வகைக் கேள்விகள். உங்களது விடையைப் பின்வருமாறு தேர்ந்தெடுத்து எழுதுக.

  1. கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.
  2. கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
  3. கூற்று சரி ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் சரி.

1. கூற்று : கல்லின் கன அளவை அளவிடும் முகவை மூலம் அளக்கலாம்.

காரணம் : கல் ஒரு ஒழுங்கற்ற வடிவமுடைய பொருள்.

விடை : கூற்றும் காரணமும் சரி மற்றும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்.

2. கூற்று : மரக்கட்டை நீரில் மிதக்கும்.

காரணம் : நீர் ஒரு ஒளி ஊடுருவும் திரவம்.

விடை : கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

3 கூற்று : ஒர் இரும்பு குண்டு நீரில் மூழ்கும்.

காரணம் : நீர் இரும்பைவிட அடர்த்தி அதிகமுடையது.

விடை : கூற்று சரி ஆனால் காரணம் தவறு.

VIII. ஓரிரு வார்த்தைகளில் விடையளி.

1. ஒரு சில வழி அளவுகளைக் கூறுக.

  • பரப்பு
  • கனவஅளவு
  • வேகம்
  • நீளம்
  • நிறை
  • நேரம்
  • வெப்பநிலை

  • மின்னோட்டம்
  • பொருளின் அளவு
  • ஒளிச்செறிவு

2. ஓர் ஒளி ஆண்டின் மதிப்பைத் தருக.

  • ஒளி ஆண்டு = 9.46×1015 மீ

3. ஓர் உருளையின் கனஅளவைக் காணும் சூத்திரத்தை எழுதுக.

  • உருளையின் கனஅளவு = π × r2 × உயரம்

4. பொருட்களின் அடர்த்திக்கான வாய்ப்பாட்டைத் தருக.

  • அடர்த்தி (D) = நிறை (M) / பருமன் (V)

5. எந்த திரவத்தில் இரும்பு மூழ்கும்?

  • நீரில் இரும்பு மூழ்கும்

6. வானியல் பொருள்களின் தொலைவைக் காண உதவும் அலகுகளைக் கூறுக.

  • வானியல் அலகு
  • ஒளியாண்டு

7. தங்கத்தின் அடர்த்தி எவ்வளவு?

  • 19,300 கிகி / மீ3

IX. ஓரிரு வாக்கியங்களில் விடையளி.

1. வழி அளவுகள் என்றால் என்ன?

  • அடிப்படை அளவுகளைப் பெருக்கியோ அல்லது வகுத்தோ பெறப்படும் அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.

எ.கா : பரப்பு , கனஅளவ

2. ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.

திரவத்தின் கன அளவு

  • திரவத்தின் கன அளவு என்பது அது கலனில் நிரப்பும் அளவைக் குறிக்கிறது என்பதே ஆகும்.

கலனின் கொள்ளளவு

  • ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்ச திரவத்தின் பருமனே கொள்ளவு ஆகும்.

3. பொருட்களின் அடர்த்தியை வரையறு.

  • ஒரு பொருளின் அடர்த்தி என்பது அதன் ஓரலகு பருமனில் (1 மீ3) அப்பொருள் பெற்றுள்ள நிறைக்குச் சமம் ஆகும்.
  • அடர்த்தி (D) = நிறை (M) / பருமன் (V)

4. ஓர் ஒளி ஆண்டு என்றால் என்ன?

  • ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் கடக்கும் தொலைவே ஆகும்.
  • 1 ஒளி ஆண்டு = 9.46×1015 மீ.

5. ஓரு வானியல் அலகு வரையறு.

  • ஒரு வானியல் அலகு என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயுள்ள சராசரித் தொலைவு ஆகும்.

1 வானியல் அலகு = 149.6×106 கிமீ = 1.496×1011 மீ.

Share:

0 Comments:

Post a Comment