Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்
Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 6.6 கலைச்சொல்லாக்கம் Questions and Answers guide
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.6 கலைச்சொல்லாக்கம்
குறுவினாக்கள்
Question 1.
அயர்ந்து, எழுந்த – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
Answer:
அயர்ந்து – அயர் + த் (ந்) + த் + உ
- அயர் – பகுதி,
- த்-சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
- த்- இறந்தகால இடைநிலை
- , உ- வினையெச்ச விகுதி.
எழுந்த -எழு + த் (ந்) + த் + அ
- எழு பகுதி,
- த் – சந்தி, ‘ந்’ ஆனது விகாரம்,
- த் – இறந்தகால இடைநிலை,
- அ – பெயரெச்ச விகுதி.
Question 2.
தொடர் அமைத்து எழுதுக.
Answer:
- அன்றொருநாள் : அன்றொருநாள் நான் கண்ட அழகிய காட்சியை, மீண்டும் காண ஏங்கினேன்.
- நிழலிலிருந்து : வெயில் வேளையில் நிழலிலிருந்து இளைப்பாறினேன்.
கூடுதல் வினாக்கள்
Question 3.
கலைச்சொற்கள் பயன்படும் துறைகள் சிலவற்றைக் கூறுக.
Answer:
- வேளாண்மை, மருத்துவம், பொறியியல், தகவல் தொடர்பியல் முதலான துறைசார்ந்து இன்றைய சூழலுக்கு ஏற்பக் கலைச்சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
Question 4.
கலைச்சொல் உருவாக்கத்தில் மாணவர்களின் பங்களிப்புக் குறித்து எழுதுக.
Answer:
- நாள்தோறும், துறைதோறும் கண்டுபிடிப்புகள் உருவாகி வெளிவந்து கொண்டிருக்கின்றன.
- இந்தச் சூழலில் அவற்றிற்கெனக் கலைச்சொல்லாக்கங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவை ஏட்டளவில் இல்லாமல் பயன்பாட்டிற்கு வருவதே, மாணவர்களின் பங்களிப்பாக அமையும்.
Question 5.
கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை எவ்வாறு பெறலாம்?
Answer:
- காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள்சார்ந்த கலைச்சொற்களின் தேவை மிகுதி. அதனால் கலைச்சொற்கள் உருவாக்கப் பணியில், எல்லாரும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.
- இப்பணிக்கு இதழ்களும் ஊடகங்களும் துணைபுரியும். இதழ்கள், மின் இதழ்கள், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணையதளம் போன்றவற்றில் கலைச்சொற்களைப் பெறலாம். பள்ளி இதர்களில்
- இவற்றை வெளியிட்டு, மாணவர்களிடம் கலைச்சொல்லாக்க விழிப்புணர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
Question 6.
தாய்மொழிவழிக் கற்றலில் ஜப்பானியர் சிறக்கக் காரணம் என்ன?
Answer:
- உலகின் எம் மூலையில், எவ்வகைக் கண்டுபிடிப்பு நிகழ்ந்தாலும், ஜப்பானியர் உடனுக்குடன் தம் தாய் மொழியில், அதனை ஆக்கம் செய்து விடுகின்றனர். அதனால், தாய்மொழிவழியில் அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்கின்றனர். ஆகையால், ஜப்பானில் நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.
சிறுவினாக்கள்
Question 1.
கலைச்சொல்லாக்கத்திற்கும், அகராதிக்கும் உள்ள வேறுபாடு யாது?
Answer:
- காலத்திற்கு ஏற்ப வளரும் சில துறைகள் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழங்கும் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழில், இணையான சொற்களை உருவாக்க வேண்டியுள்ளது. அவ்வாறு கலைச்சொல்லை உருவாக்கும் முறையில் முழு ஈடுபாடு காட்டவேண்டும்.
- பொருள் தெரியாத சொற்களுக்குப் பொருள் கூறுவது அசராதி. ஆனால், பொருள் தெரிந்த பிறமொழிச் சொற்களுக்குத் தாய்மொழியில் வழக்கிலுள்ள சொற்களை அடையாளம் காட்டியும், தேவையான இடத்தில் புதிய சொற்களை உருவாக்கியும் தருவது கலைச்சொல்லாக்கம்.
கூடுதல் வினாக்கள்
Question 2.
கலைச்சொல், அதன் சிறப்புக் குறித்து கழுதுக.
Answer:
- காலத்திற்கு ஏற்ப, வளரும் துறைசார்ந்த புதுக்கண்டுபிடிப்புக்கென உருவாக்கிப் பயன்படுத்தும் சொல், கலைச்சொல். மொழியின் வேர்ச்சொல் பகுதி) கொண்டு, இதனை உருவாக்க வேண்டும்.
- அவ்வாறு புதிய கலைச்சொற்களை உருவாக்கும்போது, மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதோடு, புது வளர்ச்சியும் பெறும். தலைச் சொற்கள் பெரும்பாலும் காரணப் பெயர்களாகவே இருக்கும்.
Question 3.
மருத்துவம், கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்களை எழுதுக.
Answer:
மருத்துவத்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
- Clinic – மருத்துவமனை
- Blood Group – குருதிப் பிரிவு
- Companser – மருந்தாளுநர்
- X – ray – ஊடுகதிர்
- Typhas – குடல் காய்ச்சல்
- Ointment – களிம்பு
கல்வித்துறை சார்ந்த சில கலைச்சொற்கள் :
- Note Book – எழுதுசுவடி
- Answer Book – விடைச்சுவடி
- Rough Note book – பொதுக்குறிப்புச் சுவடி
- Prospectus – விளக்கச் சுவடி
Question 4.
கலைச்சொல் அகராதி என்பது யாது?
Answer:
- பல்வேறு துறைகள் சார்ந்த கலைச்சொற்களைத் தனித்தனியே தொகுத்து, அகர வரிசைப்படுத்தி வெளியிடப்படுவது, ‘கலைச்சொல் அகராதி’ எனப்படும்.
Question 5.
அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை அறிக.
Answer:
- Smart phone – திறன்பேசி
- Website – இணையம்
- Touch screen – தொடுதிரை
- Blog – வலைப்பூ
- Bug – பிழை
- Gazette – அரசிதழ்
- Ceiling – உச்சவரம்பு
- Despatch – அனுப்புகை
- Circular – சுற்றறிக்கை
- Subsidy – மானியம்
- Sub Junior – மிக இளையோர்
- Super Senior – மேல் மூத்தோர்
- Customer – வாடிக்கையாளர்
- Carrom – நாலாங்குழி ஆட்டம்
- Consumer – நுகர்வோர்
- Sales Tax – விற்பனை வரி
- Account – பற்று வரவுக் கணக்கு
- Referee – நடுவர்
- Cell phone – கைப்பேசி, அலைபேசி, செல்லிடப்பேசி/
Question 6.
உருவாக்கும் சொல் பல சொற்களை உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்பதற்குச் சான்று தந்து விளக்குக.
Answer:
- ஒரு சொல்லை மொழி பெயர்க்கும்போதோ, புதிய சொற்களை உருவாக்கும்போதோ அச்சொல்லானது, அதே போன்று வேறு பல சொற்கள் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும்.
- சான்றாக ‘Library’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ‘நூலகம்’, ‘நூல் நிலையம்’ என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
- இவற்றில் ‘நூலகம்’ என்னும் சொல், ‘நூலகர்’ (Librarian), நூலக அறிவியல் Library Science) என்னும் சொற்கள் உருவாகத் துணை புரிந்துள்ளமை காண்க.
Question 7.
கலைச்சொற்களை ஏன் தரப்படுத்த வேண்டும்?
Answer:
- கற்றவர், கல்லாதவர், கைவினைஞர், பயிற்றுநர், மாணவர், மகளிர் எனப் பலரும் இன்றைய சூழலில் கலைச்சொற்களை உருவாக்குகின்றனர். அறிவியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கும்போது, ஒரே பொருளைக் குறிக்கப் பலவேறு சொற்களைக் கையாளுகின்றனர்.
- அக்கலைச் சொற்கள், தமிழின் சொல்லாக்க வளர்ச்சியைக் காட்டினாலும், புரிந்து கொள்ளுதல் நிலையில் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தும். இக்குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைப் பெறக் கலைச்சொற்களைத் தரப்படுத்திப் பயன்படுத்துதல் அவசியமாகும்.
- சான்று : ‘ANTIBIOTICS’ என்னும் சொல்லைத் தமிழில் எதிர் உயிர்ப்பொருள், நுண்ணுயிர்க் கொல்லி, உயிர் எதிர் நச்சுகள், கேடுயிர்க் கொல்லிகள், நக்கயிர்க் கொல்லிகள் எனப் பலவாறு தமிழில் வழங்குவது, குழப்பத்தை ஏற்படுத்துதல் காண்க.
தேர்ச்சி கொள்
Question 1.
கலைச்சொல்லாக்கம் – பொருள் தருக?
Answer:
- ஒரு மொழியில் காலத்திற்கேற் துறைசார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்காக உருவாக்கிப் பயன்படுத்தப் படும் சொற்கள், ‘கலைச்சொற்கள் எனப்படும்.
Question 2.
கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குவதற்குரிய விதிமுறைகள் யாவை?
Answer:
- புதிதாக உருவாக்கப்பெறும் கலைச்சொல், தமிழ்ச்சொல்லாக இருத்தல் வேண்டும்.
- பொருள் பொருத்தமுடையதாகவும், செயலைக் குறிப்பதாகவும் அமைதல் வேண்டும்.
- வடிவில் சிறியதாகவும் எளிமையானதாகவும் இருத்தல் வேண்டும்.
- ஓரை யமுடையதாகவும், தமிழ் இலக்கண மரபுக்கு உட்பட்டதாகவும் இருத்தல் வேண்டும்.
- மொழியின் வேர்ச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு, பல சொற்களை மேலும் உருவாக்கும் ஆக்கத்திறன் கொண்டதாகக் கலைச்சொற்களை உருவாக்கல் வேண்டும்.
- இவ்விதிமுறைகளைக் கலைச்சொல்லாக்கப் பணிகள் தொடங்குமுன், பின்பற்ற வேண்டும்.
Question 3.
பின்வரும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்க் கலைச்சொற்களை எழுதுக.
Answer:
- Personality – ஆளுமை, வேறுபட்ட பண்பு.
- Plastic – நெகிழி
- Emotion – மனஉணர்ச்சி, மனக்கிளர்ச்சி.
- Escalator – நகரும் மின்படி
- Straw – நெகிழிக்குழல், உறிஞ்சுகுழல்.
- Mass Drill – கூட்டு உடற்பயிற்சி
- Horticulture – தோட்டக்கலை
- Average – நடுத்தரம், சராசரி அளவு.
- Apartment – அடுக்குமாடி, அடுக்ககம், தொகுப்புமனை.
Question 4.
Ship என்னும் ஆங்கிலச் சொல்லின் பழந்தமிழ் இலக்கியப் பெயரைக் கூறுக.
Answer:
- நாவாய், கலம்.
Question 5.
உலக அளவில் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்?
Answer:
- உலக அளவில் பயன்படுத்தப்படும் கணிதச் சூத்திரங்களையும், வேதியியல் குறியீடுகளையும் தமிழில் பயன்படுத்தும்போது, பழந்தமிழிலக்கியச் சொல்லைத் தேர்ந்து பயன்படுத்துதல். (எ-கா: வலவன் Pilot)
- பேச்சுமொழிச் சொல்லைப் பயன்படுத்துதல் . (எ-கா : அம்மை)
- பிறமொழிச் சொற்களைக் கடன் பெறுதல். (எ-கா : தசம முறை / Decimal)
- புதுச்சொல் படைத்தல். (எ-கா : மூலக்கூறு / Molecule)
- உலக வழக்கை அப்படியே ஏற்றுக் கொள்ளல். (எ-கா : எக்ஸ் கதிர் / Xray)
- பிறமொழித்துறைச் சொற்களை மொழி பெயர்த்தல். (ஒளிச்சேர்க்கை / Photo anthesis)
- ஒலிபெயர்த்துப் பயன்படுத்துதல். (எ-கா : மீட்டர் / Meter) (ஓம் / Om)
- உலக அளவிலான குறியீடுகள் – சூத்திரங்களை R√A = r,r2 H2O, Ca
- அப்படியே ஏற்றல் என்னும் நெறிமுறையைக் கையாள வேண்டுமென்று, வா. செ. குழந்தைசாமி கூறுகிறார்.
பலவுள் தெரிக
Question 1.
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
அ) மூதூர்
ஆ) வெற்றிடம்
இ) நல்லாடை
ஈ) பைந்தளிர்
Answer:
இ) நல்லாடை
கூடுதல் வினாக்கள்
Question 2.
பொருள் தெரியாத சொற்களுக்கும் பொருள் கூறுதல் ……………… நோக்கம்.
அ) கலைச் சொல்லின்
ஆ, இணையத்தின்
இ) அகராதியின்
ஈ) வலைப்பூவின்
Answer:
இ) அகராதியின்
Question 3.
மக்கள் பயன்பாற் றடுக் கலைச்சொற்களைக் கொண்டு சேர்க்கத் துணை நிற்பவை……………
அ) பொதுமக்களும் இதழ்களும்
ஆ) பள்ளிகளும் இதழ்களும்
இ) மாணவர்களும் ஊடகங்களும்
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Answer:
ஈ) இதழ்களும் ஊடகங்களும்
Question 4.
மாயர்களிடையே கலைச்சொற்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவது………………….
அ) செய்தித்தாள்
ஆ) வார மாத இதழ்
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
ஈ) வானொலி
Answer:
இ) பள்ளியில் செயல்படும் கையெழுத்து இதழ்
Question 5.
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………….
அ) பாரதிதாசன்
ஆ) திரு. வி. கலியாணசுந்தரனார்
இ) காந்தியடிகள்
ஈ) பாரதியார்
Answer:
ஈ) பாரதியார்
குறுவினா
Question 1.
முக்காற் புள்ளி இடம்பெற வேண்டிய இடத்தினை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
- சிறுதலைப்பு, நூற்பகுதி, எண், பெருங்கூட்டுத் தொடர் முதலிய இடங்களில் முக்காற் புள்ளி இடவேண்டும்.
- எ – கா : i. சார்பெழுத்து :
- ii. பத்துப்பாட்டு 2 : 246
- iii. எட்டுத்தொகை என்பன வருமாறு:
கூடுதல் வினாக்கள்
Question 2.
காற்புள்ளி இடம்பெற வேண்டிய இடங்களை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
Answer:
- பொருள்களைத் தனித்தனியே குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், ஆணைப்புச் சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி இடம்பெற வேண்டும்.
எ – கா : i. அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப் பேறுகள் நான்கு
ii. நாம் எழுதும்போது, பிழையற எழுதவேண்டும்.
iii. இனியன் நன்கு படித்ததனால், தேர்ச்சி பெற்றான்.
iv. ஐயா, / அம்மையீர்,
V. சிறியவன், பெரியவன், செல்வன், ஏழை.
Question 3.
அரைப்புள்ளி இடம்பெறும் இடங்களைக் கூறுக.
Answer:
- தொடர்நிலைத் தொடர்களிலும், ஒரு சொல்லுக்குப் பலபொருவு கூறும் இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.
எ – கா : i. வேலன் கடைக்குச் சென்றான்; பொருள்களை வாங்கினான்; வீடு திரும்பினான்.
ii. அளி – அன்பு; அருள்; குளிர்ச்சி, பயண்டு; இரக்கம்; எளிமை.
Question 4.
முற்றுப்புள்ளி வரும் இடங்கள் இரண்டினைக் குறிப்பிடுக.
Answer:
- தலைப்பின் இறுதி, தொடரின் இறுதி, முகவரி இறுதி, சொற்குறுக்கம், நாள் முதலிய இடங்களில்,
- முற்றுப்புள்ளி இடுதல் வேண்டும்.
எ – கா : i. மரபியல்.
- ii. உருவுகண்டு எள்ளாமை வேண்டும்.
- iii. தலைமையாசிரிய அரசு மேனிலைப்பள்ளி.
- iv. தொல். சொல். 58.
பலவுள் தெரிக
Question 1.
சரியான நிறுத்தக்குறியுடைய சொற்றொடரைக் கண்டுபிடிக்க
அ) மலரவன் தன் பாட்டியிடம் நான் படிக்கிறேன் என்றான்.
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
இ) மலரவன் தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
ஈ) மலரவன் தன் பாட்டியிடம், நான் படிக்கிறேன்! என்றான்.
Answer:
ஆ) மலரவன், தன் பாட்டியிடம், “நான் படிக்கிறேன்” என்றான்.
கூடுதல் வினா
Question 2.
சரியான நிறுத்தற்குறியுடைய சொற்றொடலாக் காண்க.
அ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
ஆ) பேரறிஞர் அண்ணா செவ்வாழை, என்னும் ‘சிறுகதை’ எழுதினார்.
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
ஈ) ‘பேரறிஞர் அண்ணா செவ்வாழை என்னும் சிறுகதை எழுதினார்.
Answer:
இ) பேரறிஞர் அண்ணா , ‘செவ்வாழை’ என்னும் சிறுகதை எழுதினார்.
மெய்ப்பத் திருத்துநர் பணிவேண்டி, நாளிதழ் முதன்மையாசிரியருக்குக் கீழ்க்காணும் விவரங்களுடன் தன்விலக்குறிப்பு ஒன்று எழுதுக.
Answer:
பெயர், வயது, பாலினம், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி,
அறிந்த மொழிகள், எடை, உயரம், குருதிவகை, கல்வித்தகுதி)
அனுப்புநர்:
க. அன்புச்செல்வன்,
8, 82ஆவது தெரு,
கலைஞர் நகர்,
சென்னை – 600078.
பெறுநர்:
ஆசிரியர்,
‘தினமலர்’ நாளிதழ்,
சென்னை – 600002.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : மெய்ப்புத் திருத்துநர் பணிவேண்டி விண்ணப்பம்.
வணக்கம். நான், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுள்ளேன். தமிழில் தட்டச்சுச் செய்வேன். பத்திரிகைகளின் மெய்ப்புத் திருத்தும் பணியையும் செய்த அனுபவம் உண்டு. பணி அளித்தால், சிறப்பாகச் செய்வேன் என உறுதி அளிக்கிறேன்.
நன்றி.
உங்கள்,
உண்மையுள்ள,
க. அன்புச்செல்வன்.
தன்விவரக் குறிப்பு
- பெயர் : க. அன்புச்செல்வன்
- தந்தை : கோ. கந்தசாமி
- தாயார் : சாரதாதேவி
- பிறந்தநாள் : 15.07. 1999
- கல்வித்தகுதி : பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி
- தொழில் பயிற்சித் தகுதி : தமிழ்த் தட்டச்சு, சுருக்கெழுத்துத் தேர்வு.
- கணினி : அடிப்படைக் கணினித் தேர்வு
- பட்டறிவு : இரண்டு ஆண்டுகள் சிறுபத்திரிகைகளில் மெய்ப்புத் திருத்தல்
- முகவரி : 8, 82 ஆவது தெரு, கலைஞர் நக சென்னை – 600078.
- அலைபேசி எண் : 9677074899
- மின்ன ஞ்சல் முகவரி : anbuselvan08@gmailcom
- அறிந்த மொழிகள் : தமிழ், ஆங்கிலம், தெலுங்கு.
- உயரம் : 6′
- எடை : 68 கிலோ
- குருதிவகை : O+
விடுபட்ட இடத்தில் அடுத்து வரவேண்டிய சொற்களைக் கண்டறிந்து எழுதுக.
1. தனிமொழி – அறிவு; …………………. – வண்ண மயில்; பொது பொழு – ………………….
Answer:
தொடர்மொழி, பலகை (பலகை / பல கை)
2. கார்காலம் – …………………. ; குளிர்காலம் – ஐப்பசி, கார்த்திகை; …………………. – மார்கழி, தை
Answer:
ஆவணி, புரட்டாசி; முன்பனிக்காலம்
3. எழுத்து, சொல் …………………. , யாப்பு, ………………….
Answer:
பொருள், அணி
4. எழுத்து, …………………. , சீர், தளை, …………………. , தொடை.
Answer:
அசை, அடி
5. சேரன் – வில், சோழன் – …………………. , …………………. – மீன்.
Answer:
புலி, பாண்டியன்
நிற்க அதற்குத் தக
நம் நாட்டின் பெருமைகளில் ஒன்று தொன்மைச் சின்னங்கள். அவை நம் வரலாற்றைப் பறைசாற்றுபவை. கோயில்களிலும், தொன்மையான இடங்களிலும், கல்வெட்டுகளிலும் சிலர் கிறுக்குவதை, சிதைப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நம்முடைய பெருமையை நாமே சிதைக்கலாமா? அவற்றை அழியாமல் பாதுகாக்க, டும் என்ன செய்யப் போகிறோம்? பட்டியலிடுக.
செல்லும் இடம் கோவிலோ, தொல்லியல் சார்ந்த இடடோ, இன்றளவும் இருப்பதனால் வழிபடவும் கண்டு மகிழவும் செல்கிறோம். எனவே, அவற்றைப் பழமை சிதையாமல், நம் பிற்காலச் சந்ததியினர் காணவும் பாதுகாக்கவும் வேண்டும். சுவர்களைக் கண்டால், கீறலோ) கிறுக்கவோ கூடாது. நம் உறைவிடத்தைச் சிதைப்போமா? குப்பைகளையும் நெகிழிப்பைகளையும் போடக்கூடாது.
வீட்டை மட்டுமன்று நாம் சார்ந்துள்ள பகுதிகளையும் தூய்மையோடு வைக்கவேண்டும். நம் பாரம்பரியத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்கும் சின்னங்கள் அவை. அவற்றை அழிக்கவோ, சேதப்படுத்தவோ, நமக்கோ மற்றவர்களுக்கோ உரிமை கிடையாது. நன்றும் தீதும் பிறர் தர வருவதில்லை! எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
கலைச்சொல் அறிவோம்
- நுண்க லைகள் – Fine Arts
- தானியக் கிடங்கு – Grain Warehouse
- ஆவணப்படம் – Documentary
- பேரழிவு – Disaster
- கல்வெட்டு – Inscription / Epigraph
- தொன்மம் – Myth
0 Comments:
Post a Comment