> Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

 Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.1 மலை இடப்பெயர்கள்: ஓர் ஆய்வு

பலவுள் தெரிக

Question 1.

கூற்று : ‘கோடு என்பது தமிழ்ச்சொல் ஆகும்.

விளக்கம் : ‘கோடு’ என்னும் சொல்லுக்கு மலையுச்சி, வல்லரண், கோட்டை என்னும் பொருள்களும் உண்டு .

அ) கூறும் சரி, விளக்கம் தவறு

ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

இ) காற்று தவறு, விளக்கம் சரி

ஈ) கூற்றும் தவறு, விளக்கமும் தவறு

Answer:

ஆ) கூற்றும் சரி, விளக்கமும் சரி

குறுவினா

Question 1.

‘கோட்டை’ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது?

Answer:

  • ‘கோட்டை என்னும் சொல், கோட்ட, கோடு, கோட்டே, கோண்டே, க்வாட் எனத் திராவிட மொழிகளில் எடுத்தாளப்படுகிறது.

சிறுவினா

Question 1.

‘மலை, மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது’ என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

Answer:

  • மனித சமூகத்தின் ஆதிநிலம் மலை.
  • மலைநிலத்தைத் தமிழ் இலக்கியம், குறிஞ்சி’ என்றே குறிப்பிடுகிறது.
  • திராவிடர்களைக் கமில் சுவலபில், ‘மலைநில மனிதர்கள்’ என்கிறார்.
  • இந்தியப் பழங்குடியினர் பெயர்கள், மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்து கொன்றன.
  • பழங்குடியினர், உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறு, ஓடைகல ஒட்டிக் குடியிருப்பை அமைத்துள்ளனர்.
  • அவை, பழங்குடியினரின் மலைசார்ந்த சமூக, சமயக் கூறுபாடு சார்ந்த புரிதலைத் தருகின்றன.

கூடுதல் வினாக்கள்

Question 2.

திராவிடப் பழங்குடி இனப்பெயர்கள் எதன் அடிப்படையில் ஆக்கப்பெற்றுள்ளன?

Answer:

  • இந்தியாவில் வாழும் பல்வேறு திராவிடப் பழங்குடி இனக்குழுப் பெயர்கள், மலை, குன்று என்று பொருள்தரும் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பெற்றுள்ளன.

Question 3.

திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள் எவற்றை உணர்த்துகின்றன?

Answer:

  • திராவிட மலைவாழ் மக்களின் குடியிருப்புகள், அப்பழங்குடியினரின் மலைசார்ந்த வாழ்வியல் சமூக, சமயக் கூறுபாடுகளைக் குறித்த புரிதலை உணர்த்துகின்றன.

Question 4.

மலை, குன்று சொல்லாட்சியை உறுதி செய்வது எது?

Answer:

  • ‘மலை’ என்பது உயரமானதையும், ‘குன்று’ என்பது உயரம் குறைவானதையும் குறிக்கின்றன. மலை, குன்று என்னும் சொல்லாட்சிகள் வெளிப்படுத்தும் உயர வேறுபாட்டை, வடமேற்குப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் மலை சார்ந்த இடப்பெயர்கள் உறுதி செய்வது வியப்பளிப்பதாக உள்ளது.

Question 5.

‘வரை’ என்னும் சொல்வழக்குக் குறித்து அறியப்படுவது யாது?

Answer:

  • ‘நுனிமுதல் அடிவரை’, அடிமுதல் நுனிவரை’ என்னும் தொடர்களில் வரை’ என்ற சொல், ‘விளிம்பு’ என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிறுவினா

கூடுதல் வினாக்கள்

Question 2.

கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்களாக ஆசிரியர் கூறியுள்ளன யாவை? (அல்லது) கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம் – குறிப்பு எழுதுக

Answer:

  • கொற்கை, வஞ்சி, தொண்டி என்னும் ஊர்ப் பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாடு களின் விளைவால் உருவானவை. சங்ககாலப் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கையும், வஞ்சியும், தொண்டியும் ஆணிவேர் அடையாளங்கள்.
  • இப்பெயர்களில் எதையும் வடமொலி இலக்கியங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால், சங்ககால மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன.)
  • கொற்கை, வஞ்சி தொண்டி காட்டும் பொதுத்தன்மைகள் மிக முக்கியமானவை. இவை கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள் என ஆசிரியர் கூறுகிறார்.

Question 3.

கொற்கை, வஞ்சி தொண்டிவளாகம் – குறிப்புத் தருக.

Answer:

  • கொற்கை, வஞ்சி, தொண்டிவளாகம் என்னும் ஊர்ப்பெயர்கள், பழந்தமிழரின் அரசியல், பொருளியல், பண்பாடுகளின் விளைவால் உருவானவை. சங்ககாலப் பழந்தமிழ்ச் சமூகத்திற்குக் கொற்கையும், வஞ்சியும், தொண்டியும் ஆணிவேர் அடையாளங்கள்.
  • சங்ககால மன்னர்கள், குறுநிலத் தலைவர்கள் ஆகியவர்களின் தலைநகரங்கள், துறைமுகங்கள், போர்க்களங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு, வடமேற்குப் பகுதிகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் பொருந்திப் போகின்றன. இவை, கடந்தகால வரலாற்றிற்கான அடையாளச் சின்னங்கள்.

Question 4.

‘மலை’, ‘கோட்டை’ என்னும் சொற்களை அடிப்படையாகக் கொண்ட திராவிட இனப்பெயர்கள் யாவை?

Answer:

  • மால் பஹாடியா (ஜார்கண்ட்), மல அரயன், மல குறவன், மல மூத்தன், மல பணிக்கர், மலயன், மல வேடா (கேரளம், மலேரு (கர்நாடகம்), என்னும் பழங்குடி இனப்பெயர்கள், ‘மலை’ என்னும் சொல்லடியால் உருவான திராவிட இனப்பெயர்களாகும்.
  • கோட்டா (நீலகிரி), கொண்ட தோரா (ஆந்திரம்), கொண்டு, கொய்டர் (ஒடிஸா) என்னும் பழங்குடி திராவிட இனப்பெயர்கள், ‘கோட்டை’ என்பதன் அடிப்படையில் உருவானவை.

நெடுவினா

Question 1.

“இயற்கையோடு இயைந்த வாழ்ந்த தமிழர்களின் வாழ்வில் இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தன” – கூற்றினை மெய்ப்பிக்க.

Answer:

மனிதன் தோன்றியது மலைநிலம்:

  • மலை, மனித சமூகத்தின் ஆதி நிலமாகும். தமிழரின் பண்டைப் பதிவுகள், கடவுளையும் மலையையும் வாழ்வில் தொடர்புபடுத்துவனவாக விளங்குகின்றன.
  • மலை, தமிழ் இலக்கியங்களில் ‘குறிஞ்சி’ எனக் குறிக்கப்படுகிறது. திராவிடப் பழங்குடிகளின் இனக்குழுப் பெயர்கள், மலைசார்ந்த மானுடப் புவிச்சூழலை வெளிப்படுத்துகின்றன.

இயற்கையோடு இயைந்த வாழ்வு :

  • பழங்குடியினர் ஓடும் நீரையே குடிநீராகப் பயன்படுத்தினர். தம் குடியிருப்புப் பகுதியைவிட உயரமான இடத்தில் ஓடும் சிற்றாறுகள், ஓடைகளில் நீர் எடுத்துப் பருகினர்.
  • மலைஉச்சியில் அமைந்த பழங்குடித் தலைவரின் வீடு, வாழ்விட வடிவமைப்பு, வாழ்வியலில் உயரமான இடங்கள் செலுத்தும் தாக்கத்தைக் காட்டுகின்றன.

சொல்வழக்கு :

  • சிந்துவெளி, திராவிட மலைவாழ் மக்களின் அன்றாடப் புழங்கு சொநகளின் தொடர்ச்சி சிந்திக்கத்தக்கதாகும்.
  • தென்னிந்திய மலைவாழ் மக்களிடையே மலை, மலா, மலே என்னும் சொற்கள் வழங்குகின்றன.
  • ‘மலை’, ‘குன்று’ என்னும் சொல்லாட்சி, மலை சார்ந்த மக்களிடம் வழங்குகிறது சிறப்பாகும்.

கோட்டை :

  • ‘கோட்டை’ என்னும் சொல், செயற்கையான காப்பு அரண்களான கோட்டைகளைக் கட்டி எழுப்பிய நகர நாகரிகத்தின் பின்னணியில் தோன்றின என்பதைவிட, தொன்மையான மலை சார்ந்த வாழ்வியல் சூழலில் உருப்பெற்றிருக்கும் என்பதே உண்மை.

மலைப் பெயர்களின் நீட்சி :

  • வடமேற்கு நாடுகளில் கண்டறியப்பட்ட சான்றுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நெடுமலைகளோடு பொருந்திப் போகும் திராவிடர்களின் மலைப் பெருமிதத்தின் நீட்சியாக உள்ளன. அப்பகுதிகளில் திராவிடர் வாழ்ந்த சான்றுகளை உறுதி செய்கின்றன.
  • இவற்றால், இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழர்களின் வாழ்வில், இருப்பிடங்களின் பெயர்களும் இயற்கையோடு இயைந்தே இருந்தமை புலப்படும்.

கூடுதல் வினாக்கள்

Question 2.

அகத்திணை இயல், மலை மற்றும் மலைசார்ந்த பகுதியை, …………….எனக் குறித்தது.

அ) பாலை

ஆ) முல்லை

இ) குறிஞ்சி

ஈ) மருதம்

Answer:

இ) குறிஞ்சி

Question 3.

மலை. குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை ,………….. என்னும் கலைச்சொல் குறிக்கும்.

அ) Biology

ஆ) Geology

இ) Zoology

ஈ) Orology

Answer:

ஈ) Orology

Question 4.

முருகனைச் “சேயோன் மேய மைவரை உலகம்” எனக் கூறும் நூல் …………..

அ) திருமுருகாற்றுப்படை

ஆ) நற்றிணை

இ) தொல்காப்பியம்

ஈ) நன்னூல்

Answer:

இ) தொல்காப்பியம்

Question 5.

“விண்பொரு நெடுவரை குறிஞ்சிக் கிழவ” எனக் குறிப்பிடும் நூல் …………..

அ) தொல்காப்பியம்

ஆ) புறநானூறு

இ) திருமுருகாற்றுப்படை

ஈ) பரிபாடல்

Answer:

இ) திருமுருகாற்றுப்படை

Question 6.

திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என அழைத்தவர் …………..

அ) ஆர். பாலகிருஷ்ணன்

ஆ)அண்ணாமலையார்

இ) கமில் சுவலபில்

ஈ) தி. சு. செல்லப்பா

Answer:

இ) கமில் சுவலபில்

Question 7.

பால் எருமைக் கொட்டில்களைப் புனித இடமாகக் கருதுபவர் …………..

அ) குறும்பர்

ஆ) ஜதாப்பு

இ) தோடர்

‘ஈகோட்டா

Answer:

இ) தோடர்


Question 8.

‘கடையெழு வள்ளல்கள்’ வாழ்ந்த இடம் …………..

அ) பாலை

ஆ) காடு

இ) மனை

ஈ) தீவு

Answer:

இ) மலை

Question 9.

‘கொண்டா தோரா’ இனக் குழுவினர் வாழும் பகு) …………..

அ) தமிழ்நாடு

ஆ) ஆந்திரப்பிரதேசம்

இ) ஒடிஸா

ஈ) பீஹார்

Answer:

ஆ) ஆந்திரப்பிரதேசம்

Share:

0 Comments:

Post a Comment