Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்
Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 11th Tamil Guide Pdf Chapter 3.7 திருக்குறள் Questions and Answers, Summary, Notes.
Tamilnadu Samacheer Kalvi 11th Tamil Solutions Chapter 3.7 திருக்குறள்
Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.7 திருக்குறள்
குறுவினாக்கள்
Question 1.
தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும் நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுவது ஏன்?
Answer:
- தியினால் சுட்டது உடலில் வடுவாக இருந்தாலும், உள்ளத்தில் ஆறிவிடும்.
- நாவினால் சுட்டது மனத்தில் என்றும் ஆறாத வடுவாக நிலைத்துவிடும்.
- எனவே, தீயினால் சுட்டதைப் ‘புண்’ என்றும், நாவினால் சுட்டதை ‘வடு’ என்றும் வள்ளுவம் கூறுகிறது.
Question 2.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். – இக்குறட்பாவின் உவமையைப் பொருளோடு பொருத்துக.
Answer:
- மருந்தாகித் தப்பா மரம், தன் எல்லா உறுப்புகளாலும் மருந்தாகப் பயன்படும் மரம் என்பது உவமை.
- செல்வம், பிறருக்குப் பயன்படும்வகையில் வாழும் பெருந்தகையானுக்கு உவமையாகக் கூறப்பட்டது.
- மரம் – உவமானம்; பெருந்தகையான் – உவமேயம்; பயன்படல் – பொதுத்தன்மை ; ‘அற்று’ – உவமை உருபு.
Question 3.
எதற்குமுன் நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது?
Answer:
- நாக்கு அடைத்து, விக்கல் வந்து உயிர்க்கு இறுதி வருமுன், நல்ல செயல்களை விரைந்து செய்யவேண்டும் என்று, திருக்குறள் கூறுகிறது.
Question 4.
சீர்தூக்கி ஆராய வேண்டிய ஆற்றல்கள் யாவை?
Answer:
- செயலின் வலிமை, தன்னின் வலிமை, பகைவனின் வலிமை, துணையானவரின் வலிமை
Question 5.
மருந்து எது? மருந்து மரமாக இருப்பவர் யார்?
Answer:
- மருந்து மரமாக இருப்பவர் : பெருந்தகையாளர் மருந்து : செல்வம்
கூடுதல் வினாக்கள்
Question 6.
மலையினும் மாணப்பெரியது எது?
Answer:
- தனக்குரிய நேர்வழியில் மாறாது, அடக்கமாக இருப்பவனின் உயரிய தோற்றமானது, மலைப்பின் மாண்பைக் காட்டிலும் பெரியதாகும்.
Question 7.
நாவை ஏன் காக்க வேண்டும்?
Answer:
- எதனை அடக்கிக் காக்காவிட்டாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும். அவ்வாறு நாவைக் காக்காவிட்டால், சொல்குற்றம் ஏற்பட்டுத் துன்பப்படுவர்.
சிறுவினாக்கள்
Question 1.
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு – இக்குறட்பாவில் பயின்று வரும் அணியை விளக்குக.
Answer:
- இக்குறட்பாவில் வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.
இரு பொருள்களின் ஒற்றுமையை முதலில் கூறிப் பின்னர் அவற்றின் வேற்றுமையைக் கூறுவது வே றுமை அணி. தீயினால் சுட்ட புண்ணும், நாவினால் சுட்ட வடுவும் சுடுதலால், ஒற்றுமை உடையன. புண் ஆறும்; வடு ஆறாது என்பது வேற்றுமை. எனவே, வேற்றுமை அணி பயின்று வந்துள்ளது.
Question 2.
புகழுக்குரிய குணங்களாக நீவிர் கருதுவன யாவை? புகழின் பெருமையைப் பொதுமறைவழி நின்று கூறுக.
Answer:
- உலகநடை அறிந்து, அடக்கத்தோடு பிறருக்கு உதவி செய்து வாழ்வதே, புகழுக்குரிய குணங்கள் ஆகும்.
- இணையற்ற இந்த உலகத்தில், உயர்ந்த புகழே அல்லாமல், உயர்ந்து ஒப்பற்று நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை .
- எனவே, வாழ்ந்தால் புகழ் தரும் பண்புகளுடன் வாழ வேண்டும். இல்லையெனில் தோன்றாமல் இருப்பதே நல்லது. ஏனெனில், பழி இல்லாமல் வாழ்பவரே வாழ்பவராவார். புகழ்பெற இயலாமல் வாழ்பவர், வாழாதவரேயாவார் எனப் புகழின் பெருமையைப் பொதுமறை விளக்குகிறது..
Question 4.
சொற்பொருள் பின்வருநிலையணியை விளக்கிக் கீழ்க்காணும் குறளுக்கு இவ்வணிமைப் பொருத்தி எழுதுக.
Answer:
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
- செய்யுளில் முன்னர்வந்த சொல், மீண்டும் மீண்டும் அதே பொருளில் பல முறை வருமானால், அது சொற்பொருள் பின்வருநிலை அணி எனப்படும்.
- இக்குறளில் வலி’ என்னும் சொல், வலிமை’ என்னும் பொருளில் பலமுறை வந்துள்ளது. எனவே, இச்செய்யுளில் சொற்பொருள் பின்வருநிலையணி பயின்று வந்துள்ளது.
Question 5.
விரும்பியதை அடைவது எப்படி? குறள்வழி விளக்குக.
Answer:
- செய்ய முடிந்த தவத்தை முயன்று பார்த்தால், விரும்பியதை விரும்பியபடி பெறமுடியும். பொன்னை நெருப்பில் இட்டுச் சுடும்போது, அது மாசு நீங்க ஓரிவிடுவதுபோலத் தவத்தை மேற்கொண்டு வருந்தினால், ஞானம் என்னும் அறிவு ஒளி பெறலாம்.
- உரிய காலத்தில், பொருத்தமான இடத்தில் தங்க செயலை மேற்கொண்டால், உலகத்தையே பெறக் கருதினாலும் கிடைத்துவிடும் எனக் குறத வழிகாட்டுகிறது.
கூடுதல் வினாக்கள்
Question 6.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின் – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
- இதில் உவமை அணி பயின்றுள்ளது. உவமானம் ஒரு தொடராகவும், உவமேயம் ஒரு தொடராகவும் அமைய, இடையில் உவமை உருபைக் கொடுத்துக் கூறுவது உவமை அணியாகும்.
- மருந்தாகித் தப்பா மரம் – உவமானம்; செல்வம் பெருந்தகையான்கண் படின் – உவமேயம்.
- அற்று – உவமை உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.
Question 7.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. – இதில் பயின்றுள்ள அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
- இதில் உவமை அணி பயின்றுள்ளது.
- வமானம், உவமேயம், உவமை உருபு ஆகியவற்றைப் பெற்றிருப்பது உவமை அணி.
- சுடச்சுடரும் பொன் – உவமானம்; துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு ஒளிவிடும் – உவமேயம்; போல் – உவம உருபு. எனவே, உவமையணி பயின்றுள்ளது.
Question 8.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. – இக்குறளில் பயிலும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
- இக்குறளில் சொற்பொருள் பின்வரு நிலையணி பயின்றுள்ளது.
- ஒருசொல் அதே பொருளில், பலமுறை இடம்பெறுவது, சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
- ‘பற்று’ என்னும் சொல், ‘பிடித்தல்’ என்னும் பொருளில் பலமுறை இடம்பெற்றதால், சொற்பொருள் பின்வரு நிலையணியாயிற்று.
Question 9.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின். – இக்குறளில் பயின்று வரும் அணியைச் சுட்டி விளக்குக.
Answer:
இக்குறளில் பிறிது மொழிதல் அணி பயின்றுள்ளது. கூறக்கருதிய பொருளை நேரே கூறாமல், பிறிது ஒன்றைக் கூறி, அதன்மூலம் விளக்குவது. அதாவது, உவமானத்தைக் கூறி, உவமேயத்தைப் பெற வைப்பது, பிறிது மொழிதலணியாகும்.
“இலேசான மயிலிறகேயானாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால், வண்டியின் வலிமையான அச்சும் முறிந்துவிடும்” என்னும் உவமையைக் கூறி, “வலிமை இல்லாதவராயினும் பலர் ஒன்று சேர்ந்தால், வலிமை பொருந்தியவனையும் அழித்திட இயலும்” என்னும் பொருளைப் பெறவைத்தமையால், பிறிது மொழிதலணியாகும்.
நெடுவினா
Question 1.
கொடையில் சிறந்து விளங்க வள்ளுவம் கூறும் வழிகளை ஒப்புரவறிதல் அதிகாரம்வழி நிறுவுக.
Answer:
- உலகியல்பு அறிந்து, கைம்மாறு கருதாமல், கண்ணோட்டத்துடன் பிறர்க்கு உதவி வாழ்தலே ஒப்புரவறிதலாகும்.
- ஒப்புரவு அறிந்தவர், தம் கைப்பொருளைப் பிறர் நலனுக்குத் தேவையுள்ளபோது செலவழிப்பவராக இருப்பர். விடாமுயற்சி செய்து பொருள் ஈட்டும் செயல்களாம், தகுதியானவர்க்குக் கொடுத்து உதவுவதற்கே ஆகும். *
- உலகநடை அறிந்து, உயர்ந்தவர் அனைவரோடும் ஒத்துப்போகிறவனே உயிர் வாழ்பவனாவான்.
- பொருட்செல்வமானது, பெருந்தன்மை பொருந்தி வனிடம் சென்று சேருமானால், அது தன் உறுப்புகளால் மருந்தாகப் பயன்படும் மரம், ஊர் நடுவில் பழுத்து உள்ளதற்குச் சமமாகும் என, வள்ளுவர் கூறுகிறார்.
- இவற்றால் ஒப்புரவு அறிந்தவரே, கொடையால் சிறந்து விளங்க முடியும் என்பதனைத் தெளியலாம்.
Question 2.
‘அடக்கமுடைமை ஒருவரை வாழ்வினில் உயர்த்தும்’ – இக்கூற்றை முப்பால்வழி விளக்குக.
Answer:
- ஒருவர் மனம், மொழி, செயல்களால் அடங்கி இருப்பதே அடக்கமாகும். அந்த அடக்கமுடைமை ஒருவனை வாழ்வில் எவ்வெவ் வாறு உயர்த்தும் என்பதை முப்பால்வழிக் காண்போம்.
- தன் தகுதிக்கென ஆன் தேன் கூறிய நேர்வழி மாறாது, ஒருவன் அடக்கமாக இருப்பானாயின், அவன் உயர்வானது, மலையின் மாண்பைக் காட்டிலும் பெரிதாக விளங்கும்.
- அடக்கம் என்பதில் புலன் அடக்கம் முக்கியம். அவ்வகையில் எதனை அடக்கிக் காக்கவில்லையானாலும், நாவை மட்டுமாவது அடக்கிக் காக்க வேண்டும்.
- அப்படி நாவை அடக்கிக் காக்கவில்லையானால், பேசும் சொற்களில் குற்றம் ஏற்பட்டு, சிக்கலுக்கு உள்ளாகித் துன்பப்படுவர்.
- நாவைன் அடக்க வேண்டும்? தீயினால் சுட்ட புண், உடலில் வடுவாகக் கிடந்தாலும், உள்ளத்துள் ஆடும். நாவினால் கூறும் சுடுசொல் புண்ணாகும் வகையில் சுடாது. ஆனால், வடுவாகவே உள்ளத்தில் நிலைத்திருந்து ஊறு செய்யும்.
- எனவே, ஒருவர் வாழ்வில் பழிபாவமின்றி உயர்வு பெற, அடக்கம் இன்றியமையாதது என்பதை முப்பால் தெளிவுபடுத்துகிறது.
இலக்கணக்குறிப்பு
- அடங்கியான், அறிவான், வாழ்வான், வாழ்வாரே, நீங்கியான், வியந்தான், கருதுபவர் – வினையாலணையும் பெயர்கள்
- தோற்றம், நோதல், வாழ்க்கை – தொழிற்பெயர்கள்
- மலையினும் – உயர்வு சிறப்பும்மை
- யா – அஃறிணைப் பன்மை வினாப்பெயர்
- நா காக்க (நாவைக் காக்க), நாச்செற்று (நாவினைச் செற்று), அவா நீப்பின் (அவாவை நீப்பின்) – இரண்டாம் வேற்றுமைத்தொகைகள்
- சுடச்சுடரும் (சுடுவதால் சுடரும்) – மூன்றாம் வேற்றுமைத்தொகை
- நெருநல் உளன் (நேற்றைக்கு உளன்), இன்று இல்லை – நான்காம் வேற்றுமைத்தொகைகள்
- வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி – ஆறாம் வேற்றுமைத்தொகைகள்
- காக்க, தோன்றுக, பற்றுக – வியங்கோள் வினைமுற்றுகள்
- சோகாப்பர் – பலர்பால் வினைமுற்று
- சொல்லிழுக்கு (சொல்லால் உண்டாகும் இழுக்கு) – மூன்றன் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
- காவாக்கால், பொன்றாது, இடையறாது, கலங்காது – எதிர்மறை வினையெச்சங்கள்
- சுட்ட புண், சுட்ட வடு, தந்த பொருள் – இறந்தகாலப் பெயரெச்சங்கள்
- ஆறும் – உடன்பாட்டு ஒன்றன்பால் வினைமுற்று
புணர்ச்சி விதிகள்
1. தாளாற்றி – தாள் + ஆற்றி.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (தாளாற்றி).
2. பொருளெல்லாம் – பொருள் + எல்லாம்.
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (பொருளெல்லாம்).
3. அச்சிறும் – அச்சு + இறும்.
- “உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்” (அச்ச் + இரும்)
- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே” (அச்சிறும்.)
It is very helpful to me , thank you 😉
ReplyDelete