> Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 6.2 கடலோடு விளையாடு

Students can Download 6th Tamil Chapter 6.2 கடலோடு விளையாடு Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 6.2 கடலோடு விளையாடு

கற்பவை கற்றபின்

Question 1.

பாடப்பகுதியில் உள்ள பாடலை பாடலை இசையோடு பாடிக் காட்டுக.

Answer:

விடிவெள்ளி நம்விளக்கு – ஐலசா

விரிகடலே பள்ளிக்கூடம் – ஐலசா

அடிக்கும் அலை நம்தோழன் – ஐலசா

அருமைமேகம் நமதுகுடை – ஐலசா

வெண்மணலே பஞ்சுமெத்தை – ஐலசா

விண்ணின் இடி காணும் கூத்து – ஐலசா

Question 2.

உங்களைக் கவர்ந்த நாட்டுப்புறப் பாடல்களை எழுதி வருக.

Answer:

ஆற்றோடு ஆற்றுநீர் அலைந்து வருமாய்ப்போல்

அதன்பிறகே புள்ளுத் தொடர்ந்து வருமாப்போல்

சேற்றோடு வெள்ளம் தெளிந்து வருமாற்போல்

செங்கால் நாரையினம் மேய்ந்து வருமாற்போல்

சினந்தருவி வெட்டும் இளந்தாரிமாரை

கண்ணான எங்கள் இளந்தாரிமாரை

கண்ணூறு படாமற் காவும் ஐயனாரே

மட்டுருக் காலை அருவாளு மடித்து

மாவிலங்கன் பிடி சீவி யிறுக்கி வெட்டும் பிடியைச் சிறக்கவே

போட்டு வெள்ளித்தகட்டினால் விரல் கூட்ட மிட்டு

வளர்தருவி வெட்டும் இளந்தாரி மாரை நாவூறு வாராமற் காரும் ஐயனாரே.

Question 3.

சொந்தமாக கடல், வானம், மலை ஆகியவற்றைப் பாடல் எழுதிப் பாடுக.

Answer:

கடல் :

அலைவதால் உனக்கு அலைகடல் பேரோ? நிலையிலா

உலகின் நிகழ்வுகளைக் காட்டிடவே அலைகிறாய்

போலும் அங்குமிங்கும்! ஆட்டமிட்டு விலையிலா

பொருள்களை விளைத்திடும் கடல் தாய்!

முத்துடன் பவளமெனக் கத்துகடல் அளித்திடுமே!

சத்தமிடும் சங்கீதக் கடலுக்கு வந்தனமே!

முத்தமிடும் தரைதனையே முழுதாடை கடலென்பார்

வித்தகரின் பாடலைப் போல் விலையேது கடலுக்கே!

வானம் :

வாழ்வில் இன்பமும் துன்பமும்

உண்டென்பதை உணர்த்த

வானில் சந்திரனையும் சூரியனையும்

உன்னகத்தே வைத்தாய்!

வாழ்வில் தோன்றி மறையும்

நகைச்சுவை போல

வானில் தோன்றி மறையும்

மின்னலைக் காட்டினாய்!

மனிதன் கைமாறு கருதா

உதவிகள் செய்வதற்கு

முகில் கூட்டங்களை வைத்து

மழைபெய்வித்துச் சான்றானாய்!

வானமே! எத்தனைப் பேருக்கு

அடைக்கலம் தந்தாய்!

வாழ்க்கைப் பெட்டகமே நீயேதான்!

வாழ்க வளர்கவே!

மலை :

காடுகளை உனதாக்கி

மழையினைத் தந்தாய்!

சுவைமிகு காய்கனிகளை உனதாக்கி

நல் அமுதினைத் தந்தாய்!

அரிய மூலிகைகளை உனதாக்கி

மாமருந்தினைக் தந்தாய்!

பல்வகை உயிரினங்களுக்கும்

இருப்பிடம் தந்தாய்!

மலைமகளே உன்னைப்

பாதுகாப்போம் பராமரிப்போம்!

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கதிர்ச் + சுடர்

ஆ) கதிரின் + சுடர்

இ) கதிரவன் + சுடர்

ஈ) கதிர் + சுடர்

Answer:

ஈ) கதிர் + சுடர்

Question 2.

மூச்சடக்கி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மூச்சு + அடக்கி

ஆ) மூச் + அடக்கி

இ) மூச் + சடக்கி

ஈ) மூச்சை + அடக்கி

Answer:

அ) மூச்சு + அடக்கி

Question 3.

பெருமை + வானம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) பெருமைவனம்

ஆ) பெருவானம்

இ) பெருமானம்

ஈ) பேர்வானம்

Answer:

ஆ) பெருவானம்

Question 4.

அடிக்கும் + அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) அடிக்குமலை

ஆ) அடிக்கும் அலை

இ) அடிக்கிலை

ஈ) அடியலை

Answer:

அ) அடிக்குமலை

பாடல் வரிகளுக்கு ஏற்பப் பொருத்துக

அ) விடிவெள்ளி – 1. பஞ்சுமெத்தை

ஆ) மணல் – 2. ஊஞ்சல்

இ) புயல் – 3. போர்வை

ஈ) பனிமூட்டம் – 4. விளக்கு

Answer:

அ) 4

ஆ) 1

இ) 2

ஈ) 3

குறுவினா

Question 1.

அலையையும் மேகத்தையும் மீனவர்கள் என்னவாகக் கருதுகின்றனர்?

Answer:

  • மீனவர்கள் அலையைத் தோழனாகவும் மேகத்தைக் குடையாகவும் கருதுகின்றனர்.

Question 2.

கடல் பாட்டில் கண்ணாடியாகவும் தலைவனாகவும் குறிப்பிடப்படுவன யாவை?

Answer:

  • கடல் பாட்டில் முழுநிலவு கண்ணாடியாகவும், பெருவானம் தலைவனாகவும் குறிப்பிடப்படுகின்றன.

சிறுவினா

Question 1.

‘கடல்’ பாட்டின் பொருளை உங்கள் சொந்த நடையில் எழுதுக.

Answer:

  • (i) மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் மீனவர்கள். அவர்களுக்கு விண்மீன்களே விளக்குகள், விரிந்த கடலே பள்ளிக்கூடம்.
  • (ii) கடல் அலையே தோழன், மேகமே குடை, வெண்மையான மணலே படுத்துறங்கும் பஞ்சு மெத்தை. விண்ணின் இடி அவர்கள் காணும் கூத்து, சீறிவரும் புயல் விளையாடும் ஊஞ்சல்.
  • (iii) பனிமூட்டம்தான் உடலைச் சுற்றும் போர்வை. அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் மேற்கூரை.
  • (iv) கட்டுமரம்தான் அவர்கள் வாழும் வீடு. மின்னல் கோடுகளே அடிப்படைப் பாடம்: வலைவீசிப் பிடிக்கும் மீன்களே அவர்களது செல்வம். முழு நிலவுதான் கண்ணாடி.
  • (v) மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் தவம். இவற்றிற்கு இடையே மீனவர்கள் மன உறுதியோடு தொழில் செய்கின்றனர்.

சிந்தனை வினா

Question 1.

நீங்கள் வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில்களில் ஒன்றைப் பற்றி ஐந்து வரிகள் எழுதுக.

Answer:

நான்வசிக்கும் பகுதியில் நடைபெறும் தொழில் பாய் பின்னும் தொழில்(வந்தவாசி):

  • தமிழகத்தின் பாரம்பரிய கோரைப் பாய் தயாரிக்கும் தொழில் வந்தவாசியில் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான மூலப்பொருள் கோரை. இது ஒருவகைப் புல்லாகும். இது காவிரி ஓடும் கரையோரப் பகுதிகளில் விளைகின்றது.
  • தமிழகத்தில் மட்டும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பாய் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. முன்பெல்லாம் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட பாய்கள், தற்போது இயந்திரங்கள் மூலம் நெய்யப்படுகிறது.
  • கோரைப் பிரிப்பது, அதற்கு சாயம் பூசுவது வெயிலில் உலர்த்துவது, நெய்வது, பாய் நெய்த பிறகு அதன் ஓரங்களில் துணி வைத்து தைப்பது, பாய்களைச் சுருட்டிக் கட்டாகக் கட்டுவது போன்ற பல்வேறு கட்டங்களில் பணி நிகழ்கிறது. 
  • பத்தமடைப் பாய் எந்த அளவு புகழ்பெற்றதோ அதே போல் எங்கள் பகுதியான வந்தவாசியில் தயாரிக்கும் பாய்களும் புகழ்பெற்றது. பாயில் பல வகைகள் உள்ளன. அவை கோரைப்பாய், பிரம்புப் பாய், ஈச்சம்பாய், மூங்கில் பாய், நாணல் கோரைப் பாய் என்பனவாம். பாயைத் தரையில் விரித்து நாம் உறங்குவதே ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.
  • கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு இளம் வயது முகுது வலி வராமலும் தடுக்கும். பாயில் படுத்து உறங்குவது ஞாபக சக்தியையும் மன அமைதியையும் தருகிறது.

Question 2.

நாட்டுப்புற இலக்கியங்களை வாய்மொழி இலக்கியங்கள் என்று கூறக் காரணம் என்ன?

Answer:

  • நாட்டுப்புற இலக்கியங்கள், மக்களின் மனவுணர்வுகளைப் பலவாறான கூறுகளில் மிக எளிமையாகவும் இனிமையாகவும் வெளிப்படுத்துபவைகளாக விளங்கும். இவை பெரும்பான்மையும் கல்வி பயிலா மக்களாலேயே உருவாக்கப்பட்டுள்ளன எனலாம். இப்பாடல்களுக்கு ஆசிரியர் என்று ஒருவர் இல்லை. இவை ஓலைச்சுவடிகளில் பதிவு பெறுவதற்கு முன்பு வாய்மொழியாக ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் பதிவு செய்யப்பட்டன.
  • இந்த இலக்கியங்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழியாக அல்லது செவி வழியாக பகிரப்பட்டு வந்தவை ஆகும். ஏட்டில் எழுதப்படாமல் வழிவழியாக தாய் பாட அவளைத்தொடர்ந்து மகள் எனப் பல தலைமுறையாகப் பாடப்படுகிறது. நாட்டுப்புறங்களில் .9 பாடப்பட்டு வளர்ந்தவை. எழுதப்படாமல் வாய்மொழியாக வளர்ந்தமையால் இது வாய்மொழி இலக்கியம் எனப் பெயர் பெற்றது.
  • இதன் வேறு பெயர்கள் – பாமரர் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், ஏட்டில் எழுதாக் கவிதை, காற்றிலே மிதந்த கவிதை, வாய்மொழிப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்.
  • வகைகள் – புராணக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், தொழில் பாடல்கள், ஏற்றப்பாட்டு, விதைப்புப் பாட்டு, நடவுப் பாட்டு, அறுவடைப் பாட்டு, நெல் குத்தும் பாட்டு, சுண்ணம் இடிக்கும் பாட்டு தெம்மாங்குப் பாடல்கள்,

கூடுதல் வினாக்கள்

Question 1.

வாய்மொழி இலக்கியம் என்றால் என்ன?

Answer:

  • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் 3 பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை வாய்மொழி இலக்கியம் என்பர்.

Question 2.

நீ அறிந்த நாட்டுப்புறப் பாடல்களின் பெயர்களை எழுதுக.

Answer:

  • நடவுப் பாட்டு, தாலாட்டுப் பாட்டு, வள்ளைப் பாட்டு, விடுகதைப் பாட்டு, ஏற்றப்பாட்டு, 5 பரிகாசப் பாட்டு, கும்மிப் பாட்டு, கண்ண ன் பாட்டு, ஏசல் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு.

Question 3.

நெய்தல் திணை பற்றி எழுதுக.

Answer:

நிலம் :

  • கடலும் கடல் சார்ந்த இடமும்

மக்கள் : 

  • பரதர், பரத்தியர், எயினர், எயிற்றியர்

தொழில்:

  • மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல்

பூ : 

  • தாழம்பூ.

நூல் வெளி

  • உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க உற்சாகத்துடன் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடலாகும். காதால் கேட்டு வாய்மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் இதனை ‘வாய்மொழி இலக்கியம்’ என்பர். ஏற்றப்பாட்டு, ஓடப்பாட்டு முதலான தொழில் பாடல்களும் விளையாட்டுப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள் முதலியனவும் நாட்டுப்புறப் பாடல்களுள் அடங்கும். இப்பாடல் சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Share:

0 Comments:

Post a Comment