> Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 9.1 ஆசிய ஜோதி

Students can Download 6th Tamil Chapter 9.1 ஆசிய ஜோதி Questions and Answers, Summary, Notes, Samacheer Kalvi 6th Tamil Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus, helps students complete homework assignments and to score high marks in board exams.

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 9.1 ஆசிய ஜோதி

கற்பவை கற்றபின்

Question 1.

நீங்கள் மிகவும் விரும்பும் தாவரங்கள், பறவைகள், விலங்குகளின் பெயர்களைப் பட்டியலிடுக.

Answer:

(i) விரும்பும் தாவரங்கள் : மல்லிகைக் கொடி, ரோசாச் செடி, மருதாணி, முருங்கை மரம், வாழை மரம், தென்னை மரம், ஆலமரம், தூதுவளை, பிரண்டை .

(ii) விரும்பும் பறவைகள் : காகம், சிட்டுக்குருவி, குயில், குருவி, தேன்சிட்டு, புறா, காடை, தூக்கணாங்குருவி, மரங்கொத்திப் பறவை, கொக்கு, நாரை

(iii) விரும்பும் விலங்குகள் : நாய், பூனை, பசு, ஆடு, யானை, குதிரை, காளை மாடு, புள்ளிமான், முயல்.

Question 2.

உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள் – என்னும் தலைப்பில் பேசுக.

Answer:

  • ‘தன்னைப் போல் பிறரை நினை’ என்பது எவ்வளவு கருத்தாழம் பொருந்தியது? 9 இத்தொடர் கூறுவதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தோமேயானால் நாடு நலம் பெறும். நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அவ்வாறு மற்றவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டும்.
  • இன்னா செய்தார்க்கும் இனியவற்றையே செய்ய வேண்டும் என்பது வள்ளுவம். ‘பகைவனுக்கருள்வாய் என் நெஞ்சே’ என்கிறார் பாரதிதாசன். ‘உன்னை வருந்தியவரையும் a நேசி’ என்று இயேசு கிறித்து கூறியுள்ளார். இவற்றையெல்லாம் நம் மனதில் நிறுத்தி , அனைவரிடமும் அன்பு காட்ட வேண்டும். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் . வள்ளலார். அதனாலன்றோ அவர் சத்திய தருமச் சாலையை ஏற்படுத்தினார்.
  • ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். கடுமையான கோடைக்காலத்தில் ஒரு குரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தார். உடனிருந்த சீடன் குருவிற்கு விசிறிவிட்டான். குருவும் நன்றாக உறங்கினார். சீடன் சிறிது நேரத்திற்குப் பிறகு களைத்துப் போனான். அப்படியே அவனும் உறங்கி விட்டான். குரு விழித்தெழுந்தபோது சீடனுக்கு வியர்த்திருந்ததைப் பார்த்தார். அவர் சீடனுக்கு விசிறினார். குளிர்ந்த காற்று பட்டதும் சீடன் சட்டென்று எழுந்து பார்த்தான். குரு தனக்கு விசிறி விடுவதைப் பார்த்துப் பதற்றமுற்றான்.
  • “குருவே என்ன செயல் செய்கிறீர்கள்? நீங்கள் எனக்கு விசிறி விடுவதா?” என்று கேட்டான். “அமைதியாய் இரு; பதற்றப்படாதே! நீயும் என்னைப் போல் ஓர் உயிர்தான். எனக்கு வியர்த்தபோது நீ விசிறினாய், உனக்கு வியர்த்தபோது நான் விசிறினேன். இதில் எவ்வித மரியாதைக் குறையும் இல்லை” என்று பொறுமையுடனும் அடக்கத்துடனும் கூறினார். தன்னைப்போல் பிறரை நேசிப்பதனைப் பற்றி சீடன் உணர்ந்தான்.
  • பிறர் நம்மை மதிக்க வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்று நினைப்பது நம் அனைவரின் விருப்பம். பிறரிடம் நாம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். பிறரை நேசிப்போம், அன்பால் இணைவோம்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல்

அ) ஜீவ ஜோதி

ஆ) ஆசிய ஜோதி

இ) நவ ஜோதி

ஈ) ஜீவன் ஜோதி

Answer:

ஆ) ஆசிய ஜோதி

Question 2.

நேர்மையான வாழ்வை வாழ்பவர்

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

ஆ) உயிர்களைத் துன்புறுத்துபவர்

இ) தம்மை மட்டும் காத்துக்கொள்பவர்

ஈ) தம் குடும்பத்தையே எண்ணி வாழ்பவர்

Answer:

அ) எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் கொண்டவர்

Question 3.

ஒருவர் செய்யக் கூடாதது

அ) நல்வினை

ஆ) தீவினை

இ) பிறவினை

ஈ) தன்வினை

Answer:

ஆ) தீவினை

Question 4.

எளிதாகும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) எளிது + தாகும்

ஆ) எளி + தாகும்

இ) எளிது + ஆகும்

ஈ) எளிதா + ஆகும்

Answer:

இ) எளிது + ஆகும்

Question 5.

பாலையெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாலை + யெல்லாம்

ஆ) பாலை + எல்லாம்

இ) பாலை + எலாம்

ஈ) பா + எல்லாம்

Answer:

ஆ) பாலை + எல்லாம்

Question 6.

இனிமை + உயிர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) இன்உயிர்

ஆ) இனிய உயிர்

இ) இன்னுயிர்

ஈ) இனிமைஉயிர்

Answer:

இ) இன்னுயிர்

Question 7.

மலை+எலாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

அ) மலை எலாம்

ஆ) மலையெலாம்

இ) மலையெல்லாம்

ஈ) மலை எல்லாம்

Answer:

ஆ) மலையெலாம்

குறுவினா

Question 1.

அரசனாலும் செய்ய முடியாத செயல் எது?

Answer:

அரசனாலும் செய்ய முடியாத செயல் :

  • இறந்த உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல்.

Question 2.

எறும்பு எதற்காகப் பாடுபடுகிறது?

Answer:

  • எறும்பு தன் உயிரைக் காத்துக் கொள்ளப் பாடுபடுகிறது. .

Question 3.

ஒருநாளும் விட்டுச் செல்லாதது எது?

Answer:

  • ஒருவர் செய்த நன்மையும் தீமையும் ஒருநாளும் அவரை விட்டுச் செல்லாது.

Question 4.

உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?

Answer:

  • நேர்மையான, இரக்க மனம் கொண்டிருக்கும் ஒருவராலேயே இந்தப் பரந்த உலகத்தை ஆள முடியும்.

சிறுவினா

Question 1.

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?

Answer:

எல்லா உயிர்களும் மகிழ்வோடு வாழப் புத்தர்பிரான் கூறும் அறிவுரைகள் :

  • (i) தீய செயல்களைச் செய்யாதீர்கள். பிற உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.
  • (ii) இந்தப் பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள். இங்கு மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள்.

சிந்தனை வினா

Question 1.

பறவைகளும், விலங்குகளும் சுதந்திரமாக வாழ வேண்டும் எனில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

Answer:

பறவைகளும் விலங்குகளும் சுதந்திரமாக வாழ நாம் செய்ய வேண்டுவன : சுற்றுச்சூழல் என்பது இயற்கையாக அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட ஒன்று. இது பறவை, தாவரம், விலங்கு மட்டுமின்றி மனிதனையும் சார்ந்ததாகும். பறவைகள், விலங்குகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியது. ஒன்றையொன்று சார்ந்து இருப்பவை. அப்படிப்பட்ட பறவைகள், விலங்குகள் வாழ நாம் வழி வகை செய்ய வேண்டும்.

  • (i) இவற்றின் வாழ்விடங்களான காடுகளை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும். சனில்
  • (ii) பறவைகளைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்காமல் அவற்றைச் சிறகடித்து வானில் பறக்கவிட வேண்டும்.
  • (iii) பறவை, விலங்குகளை வேட்டையாடக் கூடாது.
  • (iv) விலையுயர்ந்த பட்டுப்புடவைக்காகப் பல பட்டுப் புழுக்களை அழிக்கிறோம். அவற்றைச் செய்யக் கூடாது.
  • (v) வீட்டு விலங்குகளிடம் அன்பாகப் பழக வேண்டும்.
  • (vi) சிறு தெய்வங்களுக்குக் காவு கொடுப்பதற்காக ஆடு, கோழி, சேவல் போன்றவை அழிக்கப்படுகிறது. அதனைத் தடுக்க வேண்டும்.
  • (vii) வண்டி இழுக்கப் பயன்படுத்தும் குதிரை, காளைமாடு ஆகியவற்றிற்குச் சரியான தீவனங்கள், நீர் போன்ற உணவுப் பொருட்களைக் கொடுக்க வேண்டும்.
  • (viii) பறவைகளைப் பாதுகாக்க மொட்டை மாடிகளில் நீர் வைத்தல், தானியங்களைப் போட்டு வைத்தல், போன்றவற்றைச் செய்யலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. தலைசிறந்த பண்புகளுள் ஒன்று ………………………..

2. உலக உயிர்கள் இன்புற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர்களுள் ஒருவர் ……………..

3. அரச வாழ்வைத் துறந்து நள்ளிரவில் அரண்மனையை விட்டு வந்தவர் …………………….

4. ………….. மன்னனின் யாகத்துக்காக ஆடுகள் கொண்டு செல்லப்பட்டன.

5. வலியால் துடித்த ஆட்டுக்குட்டியைத் தோளில் சுமந்து சென்றவர் ……………

6. புத்தர் நாடெங்கும் …………….. தடுத்து நிறுத்தினார்.

7. தேசிக விநாயகனார் பெற்ற பட்டம் ……………………

8. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் நூலை ஆங்கில மொழியில் எழுதியவர் …………….

9. ஆசிய ஜோதி ………………..’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது.

10. புத்தரின் வரலாற்றைக் கூறும் நூல் ……………….

11. ‘லைட் ஆஃப் ஆசியா’ என்னும் ஆங்கில மொழி நூலைத் தமிழில் எழுதியவர் ……………………

Answer:

1. இரக்கம்

2. புத்தர்

3. புத்தர் பிரான்

4. பிம்பிசாரர்

5. புத்தர்

6. உயிர்க்கொலையைத்

7. கவிமணி

8. எட்வின் அர்னால்டு

9. லைட் ஆஃப் ஆசியா

10. ஆசிய ஜோதி

11. கவிமணி தேசிக விநாயகனார்

விடையளி :

Question 1.

நேர்மையான வாழ்வு பற்றி புத்தர் கூறிய உரை யாது?

Answer:

  • எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்பவரே நேர்மையான வாழ்வு வாழ்பவர். இந்த மறைபொருளை அறியாதவர் பிற உயிர்களை வருத்தித் தாமும் துன்புறுவர்.

Question 2.

“தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவும் செயல் யாது?

Answer:

  • “ஆடு காடு, மலை எல்லாம் மேய்ந்து வருகிறது. அது தன் குட்டி வருந்திடும் வகையில் பாலை அவற்றிற்குக் கொடுப்பதை விடுத்து மக்களுக்குத் தருகிறது. இச்செயல் தீயசெயல் என்று கருதுகிறீர்களா?” என்று புத்தர் வினவுகிறார்.

நூல் வெளி

தேசிக விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். முப்பத்தாறு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். கவிமணி என்னும் பட்டம் பெற்றவர்.

ஆசிய ஜோதி, ஆங்கில மொழியில் எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆஃப் ஆசியா (Light of Asia) என்னும் நூலைத் தழுவி எழுதப்பட்டது. இந்நூல் புத்தரின் வரலாற்றைக் கூறுகிறது.

Share:

0 Comments:

Post a Comment