Samacheer Guide 6th Tamil Guide Chapter 4.3 கல்விக்கண் திறந்தவர்
Students can Download 6th Tamil Chapter 4.3 கல்விக்கண் திறந்தவர் Questions and Answers, Summary, Notes,
Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 4.3 கல்விக்கண் திறந்தவர்
கற்பவை கற்றபின்
Question 1.
காமராசரின் வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பேசுக.
Answer:
- ஒருமுறை பயணியர் விடுதியில் தங்கியிருந்தார். அப்பொழுது காங்கிரஸ் தொண்டர்களும் அவர் மீது அன்பு கொண்ட பொதுமக்களும் மாலையணிவித்து மரியாதை 3 செலுத்த வந்திருந்தனர். வந்திருந்தவர்களில் ஓர் ஆசிரியர் பொதுமக்களின் இடையில் வந்து நின்றார். அந்த ஆசிரியரைப் பார்த்த காமராசர், “என்னய்யா! படிக்காதவங்களுக்குப் போய் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய நீங்கள் படிக்காதவனுக்கு மாலை போட வந்திருக்கிறீர்களே?” என்றார். இதைக் கேட்டதும் அந்த ஆசிரியரின் கண்களில் கண்ணீர் மல்கியது.
- காமராசர், அவரைப் பார்க்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வரும்போது அவர் தன் உதவியாளர்களை அழைப்பார். தெருவில் போகிற முடிவெட்டுகிறவர், துணி வெளுக்கிறவர் என மிகச் சாதாரண வாழ்க்கை நடத்தும் ஏழைகளைக் கூப்பிடச் சொல்லுவார். அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்பாகவே அந்த ஏழைகளையெல்லாம் நலம் விசாரிப்பார். “என்ன… உங்களுக்கெல்லாம் அரிசி பருப்பெல்லாம் ஒழுங்கா கிடைக்குதா? விலைவாசி நிலையெல்லாம் எப்படி இருக்கு? உங்களுக்கெல்லாம் பிரச்சனை ஏதேனும் இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று உன்னிப்பாகக் கவனிப்பார். இந்நிகழ்வுகள் காமராசரின் எளிமையைப் பறைசாற்றுபவை.
Question 2.
தற்போது மாணவர்களுக்கு அரசு அளிக்கும் நலத்திட்டங்களைப் பட்டியலிடுக.
Answer:
- (i) 2011-12ம் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது.
- (ii) அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் சத்துணவு உண்ணும் மாணவர்கள் அனைவருக்கும் 4 இணைச் சீருடைகள் வழங்கப்படுகின்றன.
- (iii) மலைப் பகுதியில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2013-14ஆம் கல்வி ஆண்டு முதல் விலையில்லா கம்பளிச் சட்டை வழங்கப்படுகிறது.
- (iv) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலில் பயிலும் மாணவ/மாணவியர்கள் இடைநிலைக் கல்வியில் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-12 முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- (v) 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புவியியல் வரைபடம் வழங்கப்படுகிறது.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்
அ) ஆடு மேய்க்க ஆள் இல்லை
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
இ) வழி தெரியவில்லை
ஈ) பேருந்து வசதியில்லை
Answer:
ஆ) ஊரில் பள்ளிக்கூடம் இல்லை
Question 2.
பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) பசி + இன்றி
ஆ) பசி + யின்றி
இ) பசு + இன்றி
ஈ) பசு + யின்றி
Answer:
அ) பசி + இன்றி
Question 3.
படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) படி + அறிவு
ஆ) படிப்பு + அறிவு
இ) படி + வறிவு
ஈ) படிப்பு + வறிவு
Answer:
ஆ) படிப்பு + அறிவு
Question 4.
காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அ) காட்டாறு
ஆ) காடாறு
இ) காட்டு ஆறு
ஈ) காடுஆறு
Answer:
அ) காட்டாற
சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) வகுப்பு – வகுப்பில் உள்ள அனைவருடனும் அன்போடு பழக வேண்டும்.
ஆ) உயர்கல்வி – மாணவர்கள் உயர்கல்வி பெற்று நம் நாட்டிலேயே பணிபுரிய வேண்டும்.
இ) சீருடை – பள்ளிக்குச் சீருடையில்தான் செல்ல வேண்டும்.
கோடிட்ட இடங்களை நிரப்புக
1. குழந்தைகள் பள்ளியில் ஏற்றத்தாழ்வின்றிப் படிக்க ……………. அறிமுகப்படுத்தினார்.
2. காமராசரைக் ‘கல்விக் கண் திறந்தவர்’ என மனதாரப் பாராட்டியவர் ………………………
Answer:
1. சீருடை
2. தந்தை பெரியார்
குறுவினா
Question 1.
காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் யாவை?
Answer:
காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் :
- (i) பொறியியல் கல்லூரிகள்
- (ii) மருத்துவக் கல்லூரிகள்
- (iii) கால்நடை மருத்துவக் கல்லூரிகள்
- (iv) ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்
Question 2.
காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி யாது?
Answer:
காமராசர் முதல்வராகப் பொறுப்பேற்றதும் கல்விக்காகச் செய்த முதல் பணி :
- (i) தமிழகத்தில் மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க ஆணையிட்டார்.
- (ii) மாநிலம் முழுக்க அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார்.
சிறுவினா
Question 1.
காமராசரின் மதிய உணவுத் திட்டம் குறித்து எழுதுக.
Answer:
காமராசரின் மதிய உணவுத் திட்டம் :
- (i) ஒருமுறை காமராசர் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக் கொடி ஏற்றுவதற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு ஒரு மாணவன் மயங்கிக் கீழே விழுந்தான். தண்ணீ ர் தெளித்து அவனை எழுப்பினர். மயக்கம் தெளிந்த சிறுவனிடம் காமராசர், “காலையில் சாப்பிட்டாயா?” என்று கேட்டார். அவன் “எதுவும் சாப்பிடவில்லை ” என்றான். சாப்பிடாமல் வந்ததற்குக் காரணம் கேட்டதில் “சாப்பிட எதுவும் இல்லை ” என்று பதில் கூறினான்
- (ii) இந்நிகழ்விற்குப் பிறகு, படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
சிந்தனை வினா
Question 1.
நீங்கள் முதலமைச்சரானால் கல்வி முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை வகுப்பீர்கள்?
Answer:
முன்னுரை:
- நான் முதலமைச்சரானால் என்ன பணிகளைச் செய்வேன் என்பதையும், என்னென்ன திட்டங்களை நிறைவேற்றுவேன் என்பதையும் கூற விரும்புகிறேன்.
மாணவர்களுக்குப் பயன்தரும் திட்டங்கள்:
- மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்குச் சென்றுவர சிறப்புப் பேருந்துகளை இயக்க உத்தரவிடுவேன். ஏழை மாணவர்களும் உயர் கல்வி பெற உதவித்தொகை வழங்குவேன். பெண் கல்விக்கு ஊக்கமளிப்பேன்.
மின் உற்பத்தியைப் பெருக்குவேன்:
- மின் பற்றாக்குறையைப் போக்க புதிய மின் உற்பத்தி நிலையங்கள் துவங்க உத்தரவிடுவேன். தொழிற்சாலைகளை ஏற்படுத்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பளிக்க விரைந்து செயல்படுவேன்.
முடிவுரை:
- உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை அனைத்து மக்களும் பெற்று இன்புற்று வாழ வழிவகை காண்பேன். கல்வி வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துவேன். அனைவரும் எனக்கு ஆதரவு தர அன்புடன் வேண்டுகிறேன்.
கூடுதல் வினாக்கள்
Question 1.
காமராசரின் நினைவு இல்லங்கள் எங்கெங்கு உள்ளன?
Answer:
- காமராசர் வாழ்ந்த சென்னை இல்லம் மற்றும் விருதுநகர் இல்லம் ஆகியன அரசுடைமை ஆக்கப்பட்டு நினைவு இல்லங்களாக மாற்றப்பட்டுள்ளன.
Question 2.
காமராசரின் பெயர் சூட்டப்பட்ட இடங்கள் யாவை?
Answer:
- (i) மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
- (ii) சென்னையில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்குக் காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Question 3.
உன் பாடத்தில் காமராசரின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஏதேனும் ஒன்றினை எழுதுக.
Answer:
- பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் தேசியக்கொடி ஏற்றுமாறு அழைக்க அவரும் எழுந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது ஒரு மாணவன் மயங்கிக் கீழே விழுந்தான். அனைவரும் பதற்றம் அடைந்தனர். தண்ணீர் தெளித்து அவனை எழுப்பினர்.
- மயக்கம் தெளிந்த சிறுவனிடம் அவர் “காலையில் சாப்பிட்டாயா?” என்று கேட்டார் அவன் “எதுவும் சாப்பிடவில்லை ” என்றான். அதற்கு அவர் “ஏன்?” என்று கேட்டார். மாணவன் “சாப்பிட எதுவும் இல்லை ” என்று பதில் கூறினான். இதற்குப் பிறகு படிக்க வரும் மாணவர்களுக்கு ஒரு வேளை உணவாவது வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார் அவர்.
0 Comments:
Post a Comment