> Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள் ~ Kalvikavi - Educational Website - Question Paper

Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள்

Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள்

Students can Download 6th Tamil Chapter 5.5 மயங்கொலிகள் Questions and Answers, Summary, Notes,6th Tamil term 2 book answers

Tamilnadu Samacheer Kalvi 6th Tamil Solutions Chapter 5.5 மயங்கொலிகள்

கற்பவை கற்றபின்

Question 1.

ல, ள, ழ ஆகிய எழுத்துகள் அமைந்த சொற்களைப் பொருளுடன் தொகுக்க

Answer:

1. அலகு – பறவை மூக்கு

அளகு – பெண் பறவை

அழகு – வனப்பு

2. அலை – திரை, திரி

அளை – தயிர்

அழை – கூப்பிடு

3. இலை – தழை

இளை – மெலி

இழை – நூல்

4. ஒலி – ஓசை

ஒளி – வெளிச்சம்

ஒழி – கெடு

5. கலை – வித்தை

களை – நீக்க

கழை – மூங்கில்

6. கிலி – அச்சம்

கிளி – ஒரு பறவை

கிழி – துண்டாக்கு

7. தலை – சிரசு

தளை – கட்டுதல்

தழை – இலை

8. தால் – நாக்கு

தாள் – கால், பாதம்

தாழ் – பணி

9. வலி – வலிமை

வளி – காற்று

வழி – பாதை

10. வால் – விலங்குகளின் வால் பகுதி

வாள் – கத்தி

வாழ் – உயிர் வாழ்.

Question 2.

மயங்கொலி எழுத்துகளை உங்களது நண்பரிடம் ஒலித்துக் காட்டுக.

Answer:

1. அரம் – ஒரு கருவி

2. அறி – தெரிந்து கொள்

3. உரிய – சொந்தமான

4. அருகு – பக்கம்

5. அரை – பாதி

6. இரங்கு – மனமுருகு

7. இறங்கு – கீழிறங்கு

8. உரை – சொல்

9. கூரை – முகடு

10. தரு – மரம்

11. மாரி – மழை

12. மறை – வேதம்

13. மறம் – வீரம்

14. ஆழி – கடல்

15. குழம்பு – காய்கறிக் குழம்பு

16. சோளம் – தானியம்

17. ஆணை – கட்டளை

18. கணி – கணக்கிடு

19. வளி – காற்று

20. விழி – கண்திற

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சிரம் என்பது ………………. (தலை / தளை )

2. இலைக்கு வேறு பெயர் ……………… (தளை / தழை)

3. வண்டி இழுப்பது ……………… (காலை/காளை)

4. கடலுக்கு வேறு பெயர் ……………….. (பரவை / பறவை)

5. பறவை வானில் ………….. (பறந்தது/பரந்தது)

6. கதவை மெல்லத் …………… திறந்தான் / திரந்தான்)

7. ………………. வீசும். (மனம்/மணம்)

8. புலியின் ………………. சிவந்து காணப்படும். (கன்/கண்)

9. குழந்தைகள் … …………………… விளையாடினர். (பந்து/பன்து)

10. வீட்டு வாசலில் …………… போட்டனர். கோலம்/கோளம்)

Answer:

1. தலை

2. தழை

3. காளை

4. பரவை

5. பறந்தது

6. திறந்தான்

7. மணம்

8. கண்

9. பந்து

10. கோலம்

தொடர்களில் உள்ள மயங்கொலிப் பிழைகளைத் திருத்தி எழுதுக

Question 1.

எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின.

Answer:

என் விட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

Question 2.

தேர்த் திருவிலாவிற்குச் சென்றனர்.

Answer:

தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.

Question 3.

வாழைப்பலம் உடலுக்கு மிகவும் நல்ளது.

Answer:

வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது.

பொருள் வேறுபாடறிந்து எழுதுக

1. வாசலில் போடுவது …………………..

2. பந்தின் வடிவம் …………….

Answer:

1. கோலம் – (அழகு புள்ளிகள் வைத்து அவற்றை இணைத்து வரையப்படும் அலங்கார வடிவம்).

2. கோளம் – (உருண்டை)

மொழியை ஆள்வோம்

பத்தியைப் படித்து வினாக்கள் அமைக்க.

முகிலன் பொங்கல் விழா கொண்டாடத் தாத்தா வீட்டிற்குச் சென்றான். அங்கு செவலை என்ற காளை இருந்தது. அக்காளையை முகிலனுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குத் தீவனம் வைப்பது அவனது வழக்கம். வீட்டிற்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இருந்து காய்கறிகள் பறித்துக் கொடுத்துத் தாத்தாவுக்கு உதவுவான். அவன், தாத்தா பாட்டியோடு மகிழ்வாகப் பொங்கல் விழாவைக் கொண்டாடுவான்.

வினாக்கள் :

1. முகிலன் எதற்காகத் தாத்தா வீட்டிற்குச் சென்றான்?

2. முகிலனின் தாத்தா வீட்டில் என்ன இருந்தது?

3. முகிலனின் வழக்கம் என்ன?

4. முகிலன் தாத்தாவிற்கு எவ்வாறு உதவுவான்?

5. முகிலன் தன் தாத்தா பாட்டியோடு எவ்விழாவைக் கொண்டாடுவான்?

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக

1. கதிரவன் மறையும் காலையில் உதித்து மாலையில்

2. மாலையில் காலையில் உதித்து மறையும் கதிரவன்.

3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்.

4. மறையும் காலையில் கதிரவன் உதித்து மாலையில்.

Answer:

(விடை: 3. கதிரவன் காலையில் உதித்து மாலையில் மறையும்)

உரையாடலை நிரப்புக

செல்வன் : வாங்க மாமா. நலமாக இருக்கின்றீர்களா?

மாமா : நான் நலமாக இருக்கிறேன். நீ எப்படி இருக்கிறாய்?

செல்வன் : நன்றாக இருக்கிறேன். உட்காருங்கள் மாமா.

மாமா : அப்பா, அம்மா எங்கே சென்றுள்ளார்கள்?

செல்வன் : இருவரும் கடைவீதிக்குச் சென்றுள்ளார்கள்.

மாமா : அப்படியா. நீ எப்படிப் படிக்கிறாய்?

செல்வன் : நன்றாகப் படிக்கிறேன் மாமா.

மாமா : நாளை சுதந்திர தினவிழா. உங்கள் பள்ளியில் போட்டிகள் நடத்துகிறார்களா?

செல்வன் : ஆம் மாமா. நான் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்கிறேன்.

மாமா : வெற்றி பெற வாழ்த்துகள்.

செல்வன் : நன்றி மாமா!

நட்பு என்னும் தலைப்பில் கவிதை எழுதுக

இன்பம் கொடுப்பது நட்பு

மகிழ்ச்சி அளிப்பது நட்பு

கைக் கொடுப்பது நட்பு

ஊக்கம் அளிப்பது நட்பு.

மொழியோடு விளையாடு

Question 1.

கீழே உள்ள சொற்களைச் சேர்த்துப் புதிய சொற்களை உருவாக்குக.

(எ.கா) கல் + ல் + உண்டு = கல்லுண்டு, கல் + ல் + இல்லை = கல்லில்லை.

Answer:

1. பல் + ல் + உண்டு = பல்லுண்டு

பல் + ல் + இல்லை = பல்லில்லை .

2. மின் + ன் + உண்டு = மின்னுண்டு

மின் +ன் + இல்லை = மின்னில்லை

3. மண் + ண் + உண்டு = மண்ணுண்டு

மண் + ண் + இல்லை = மண்ணில்லை.

கட்டங்களில் மறைந்துள்ள சுற்றுலாத் தலங்களைக் கண்டுபிடித்து எழுதுக

சுற்றுலாத்தலங்கள் :

1. கன்னியாகுமரி

2. தஞ்சாவூர்

3. மாமல்லபுரம்

4. ஏற்காடு

5. கல்லணை

6. சுருளி

7. குற்றாலாம்

8. மதுரை

9. செஞ்சி

10. ஊட்டி

செயல் திட்டம்


Question 1.

கதிரவன் உதிக்கும் காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.

Answer:

Question 2.

உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள பண்பாட்டுச் சின்னங்கள் குறித்த படத்தொகுப்பைச் செய்தியுடன் சேகரிக்க.

Answer:



  • விழுப்புரம் மாவட்டத்தில், சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் சாலையில் சுமார் 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது , செஞ்சி. இது, மலைகளால் சூழப்பட்ட பகுதியாகும். இதன் கிழக்கே சாரங்கபாணி ஆறு உள்ளது. சிங்கபுரம் என்று அழைக்கப்பட்ட செஞ்சி, தொன்மைச் சிறப்புகள் பல நிறைந்தது. பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் பல இங்கு உள்ளன. செஞ்சிக்குள் பல சிறப்பு பெற்ற ஊர்கள் காணப்படுகின்றன. தொண்டூர், திருநாதர்குன்று,
  • பனமலை போன்றவை குறிப்பிடத்தக்கவை. பொ.ஆ. 13-ம் நூற்றாண்டில், செஞ்சியர்கோன் என்ற அரசன், இவ்வூரில் உள்ள ராஜகிரி, கிருஷ்ணகிரி, சந்திரகிரி எனும் மூன்று மலைகளையும் சேர்த்து கோட்டை ஒன்றை எழுப்பத் திட்டமிட்டான் செஞ்சிக்கோட்டையும் இக்காலத்தில் அமைக்கப்பட்டதுதான்.
  • விஜயநகரப் பேரரசு வீழ்ச்சிக்குப்பின், செஞ்சி நாயக்கர்கள் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு, பொ.ஆ. 16-ம் நூற்றாண்டில் தங்களது ஆட்சியை ஏற்படுத்தினர். பின்னர், செஞ்சிக்கோட்டை கட்டி முடிக்கப்பட்டது. முக்கியத்துவம் பெற்ற இக்கோட்டையானது, பொ.ஆ. 1677-ல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியால் கைப்பற்றப்பட்டது. இக்கோட்டை தமிழகத்திலேயே தலைசிறந்த கோட்டை ஆகும்.
  • தமிழகத்தில் இன்றைக்கும் முழமையான அமைப்பில் காணப்படக்கூடிய ஒரு கோட்டையாகத் திகழ்கிறது. இக்கோட்டைக்குள் ஏழுநிலை மாடங்கள் நிறைந்த கல்யாண மகால், வெங்கட்ரமணர் கோயில், தர்பார், களஞ்சியங்கள், யானைக்குளம், அரச குடும்பத்தினர் குடியிருப்புகள், சதத்துல்லாகான் மசூதி, தேசிங்குராஜன் சமாதி எனப் பல பகுதிகள் உள்ளன.
  • பீரங்கி மேடையும், அதன்மேல் காணப்படும் பீரங்கியும் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. கோட்டைவாயில்களும், அதன் படிக்கட்டுகளும், அதன் உள்கட்டமைப்புகளும் * மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • அரைவட்டவடிவில், வளைவு வளைவாக கருங்கற்களைக் கொண்டு கோட்டையின் அரண் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிரிகளை மறைந்திருந்து தாக்கவும், உள்ளே இருப்பவர்கள் தக்க பாதுகாப்புடன் இருக்கவும் மிகுந்த கவனத்துடன் இக்கட்டுமானம் அமைத்துள்ளது காண்போர் அனைவராலும் வியக்கவைக்கும் வகையில் உள்ளது.

தமிழ்ச்சொல் அறிவோம்

1. நல்வரவு – Welcome

2. சிற்பங்கள் – Sculptures

3. சில்லுகள் – Chips

4. ஆயத்த ஆடை – Readymade Dress

5. ஒப்பனை – Makeup

6. சிற்றுண்டி – Tiffin

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts