> TNPSC VAO காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு– அமைச்சர் அறிவிப்பு ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNPSC VAO காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு– அமைச்சர் அறிவிப்பு

TNPSC VAO காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு – அமைச்சர் அறிவிப்பு..

தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக நிரப்பப்படாமல் உள்ள அரசு காலிப்பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

tnpsc-vao-vacancies-to-be-filled-soon-2021
tnpsc-vao-vacancies-to-be-filled-soon-2021

TNPSC VAO GROUP 4 2021:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பாதிப்பு பரவி வந்தது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. நோய் பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் நடக்க வேண்டிய முக்கிய தேர்வுகள் மற்றும் நிகழ்ச்சிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் நேற்று திருநெல்வேலியில் ஆய்வு மேற்கொண்டார்.அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் நிலஅளவை பணிகளுக்கு அதிக மாதங்கள் காத்திருக்காமல் உடனடியாக சர்வே செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தமிழக அரசின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யவும், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

மேலும், பட்டா தொடர்பாக தவறுகள் இருந்தால் அந்தந்த சப் கலெக்டர்கள், ஆர்டிஓக்கள் வாரம் ஒரு முறை ஒவ்வொரு தாலுகாவிற்கும் சென்று அந்தக் குறையை தீர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் நிரப்பப்படாமல் உள்ள வி.ஏ.ஓ பணியிடங்களை விரைவில் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். தொடர்ந்து 3,000 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கும் நியமனம் விரைவில் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார். 

Share:

0 Comments:

Post a Comment