> 11th Tamil Assignment Answer key 2021 - unit 1 TNSCERT Assignment ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

11th Tamil Assignment Answer key 2021 - unit 1 TNSCERT Assignment

11th Tamil Assignment Answer key 2021 - unit 1 TNSCERT Assignment

ஒப்படைப்பு

வகுப்பு:XI.                                            பாடம் : தமிழ்

  • இயல் 1 
  • செய்யுள் - யுகத்தின் பாடல்

ஒரு மதிப்பெண் வினாக்கள்:

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அ.முத்துலிங்கம்-யுகத்தின்பாடல்

ஆ. பவணந்தி முனிவர்- நன்னூல்

இ.சு.வில்வரத்தினம் - ஆறாம்திணை

ஈ. இந்திரன்- பேச்சு மொழியும் எழுத்து மொழியும்

விடை : ஆ மற்றும் ஈ

2.கபாடபுரங்களைக் காவு கொண்ட பின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள் - அடி மோனையைத் தெரிவு செய்க.

அ. கபாடபுரங்களை - காவுகொண்ட

ஆ. காலத்தால்-கனிமங்கள்

இ.கபாடபுரங்களை- காலத்தால்

ஈ. காலத்தால்- சாகாத

விடை : இ.கபாடபுரங்களை- காலத்தால்

3. பாயிரம் அல்லது ______அன்றே.

அ.காவியம்

ஆ. பனுவல்

இ.பாடல்

ஈ.கவிதை

விடை : ஆ.பனுவல்

4. ஒரு திரவ நிலையில் நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ் படிந்து நடந்து கொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிற போது உறைந்து போன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது இவ்வரிகள் உணர்த்தும் கருத்து

அ. மொழி என்பது திட, திரவ, நிலையில் இருக்கும்

ஆ.பேச்சுமொழி, எழுத்து மொழியை திட. திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.

இ. எழுத்து மொழியை விட பேச்சு மொழி எளிமையானது.

ஈ. பேச்சு மொழியைக் காட்டிலும் எழுத்து மொழி எளிமையானது.

விடை :  எழுத்து மொழியை விட பேச்சு மொழி வலிமையானது.

குறிப்பு : நான்கு விடைகளும் தவறு 

5.மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையாக கண்டுபிடிக்க.

அ அன்னம், கிண்ணம்

இ- ரூபாய், இலட்சாதிபதி

ஆ. டமாரம், இங்ஙனம்

ஈ. றெக்கை, அங்ஙனம்

விடை : அ அன்னம், கிண்ணம்

6.கவிஞர் பாப்லோ நெரூடா எந்த நாட்டைச் சார்ந்தவர்?

அ.பிரான்ஸ்

ஆ.சிலி

இ.அமெரிக்க

ஈ. இத்தாலி

விடை : ஆ.சிலி

7. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம் :கூடில்லாத பறவை என்று கூறியவர்.

அ. பாரதிதாசன்

இ.மல்லார்மே

ஆ. பாரதியார்

ஈ.இரசூல்கம்சதோவ்

விடை : ஈ.இரசூல்கம்சதோவ்

8.நன்னூலின் ஆசிரியர்யார்?

அ.பவணந்தி முனிவர்

இ. அமிர்தசாகரர்

ஆ. தொல்காப்பியர்

ஈ.நம்பி

விடை : அ.பவணந்தி முனிவர்

9. நன்னூல் கூறும் பாயிரத்தின் வகைகள் எத்தனை?

அ. 5

ஆ.3

இ.2

ஈ.4

விடை : இ. 2 ( பொது,சிறப்பு)

10. தவறான இணையைத் தேர்வு செய்க.

அ.மொழி +ஆளுமை - உயிர் + உயிர்

இ கடல் +அலை - உயிர் +மெய்

ஆ.தமிழ்+உணர்வு-மெய்+உயிர்

ஈ.மண் + வளம்- மெய் + மெய்

விடை : இ . கடல் +அலை - உயிர் +மெய்

பகுதி-ஆ

குறுவினாக்கள்

1. பேச்சு மொழி, எழுத்து மொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாடுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்துமொழி, பேச்சுமொழிக்குத் திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறி விடுகிறது. எழுத்துமொழி உணர்ச்சி வெளிப்பாட்டைத் தெரிவிப்பதில்லை. எனவே, எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

2. மொழிக்குமுதலில்வரும் எழுத்துக்கள்எத்தனை? அவையாவை? 3.மொழிக்கு இறுதியில்வரும் எழுத்துக்கள்எத்தனை? அவையாவை.?

  • மொழிக்கு முதல் வரும் எழுத்துகள் இருபத்திரண்டு. அவை உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் க், ச், த், ப், ங், ஞ், ந், ம், ய், வ் என்னும் பத்து ஆக இருபத்திரண்டு.
  • மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் இருபத்து நான்கு. அவை, உயிரெழுத்துகள் பன்னிரண்டு, மெய்யெழுத்துகளில் ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய பதினொன்று, குற்றியலுகரம் ஒன்று ஆக இருபத்து நான்கு ஆகும்

4.பாயிரம்பற்றிநீஅறியும்கருத்துயாது?

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து, நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்

5.இனம்,மொழிகுறித்தஇரசூல்கம்சதோவ் பார்வையைக்குறிப்பிடுக.

  • “தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம் கூடில்லாத பறவை”

பகுதி-இ

சிறுவினாக்கள்

1. சு. வில்வரத்தினம் பாடிய பல்லாண்டு வாழ்த்து தமிழ்த்தாய்க்கு எங்ஙனம் பொருந்துகிறது. 

  • “என் அம்மையே” எனத் தமிழ்த்தாயை அழைத்து, “வழிவழி உனது அடியைத் தொழுதவர், உழுதவர், விதைத்தவர், உழைத்து வியர்த்தவர் என அனைவர்க்கும் நிறைமணி தந்தவளே, உனக்குப் பல்லாண்டு பாடத்தான் வேண்டும்” என்று, சு. வில்வரத்தினம் பாடுகிறார்.

2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம் பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது.

  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
  • பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

3. 'என்னுயிர் தமிழ் மொழி என்பேன்' என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

  • எனக்கு உயிர் தந்தவள் தாய். தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய மாட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளிமான மொழியைக் கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழமும் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று, என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்துகொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று, நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொரும் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

4.உயிரீறு மெய்யீறு, உயிர்முதல், மெய்ம் முதல் எடுத்துக்காட்டுடன் விவரிக்க,

உயிரீறு : 

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு.

எ-கா : அருவி (வ்+இ), மழை (ழ்+ஐ) – இ, ஐ என்னும் உயிர் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன.

மெய்யீறு : 

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய் எழுத்து அமைவது மெய்யீறு.

எ – கா : தேன் (ன்), தமிழ் (ழ்) – ன், ழ் என்னும் மெய் எழுத்துகள் ஈறுகளாக அமைந்தன்.

5. மொழிமுதல்,இறுதி எழுத்துக்கள் யாவை?ஒவ்வொன்றிற்கும் எடுத்துக்காட்டுதருக.

  • மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

எ – கா : 

  • அன்பு (அ), ஆடு (ஆ), இலை (இ) ஈகை (ஈ) உரல் (உ), ஊசி (ஊ) எருது (எ), ஏணி (ஏ) ஐந்து (ஐ) ஒன்று (ஒ) ஓணான் (ஓ) ஔவை (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு முதலில் வரும்.

(க்+அ) கலம், (ங்+அ) ஙனம், (ச்+அ) சங்கு , (ஞ்+அ) ஞமலி, (த்+அ) தமிழ், (ந்+அ) நலம்,

(ப்+அ) பழம், (ம்+அ) மலர், (ய் +அ) யவனம், (வ்+அ) வளம் என, மெய் எழுத்துகள் பத்தும் மொழிக்கு முதலில் வரும்.

  • மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் : உயிர் எழுத்துகள் பன்னிரண்டும், ஞ், ண், நாம், ன், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் பதினொரு மெய்யெழுத்துகளும், (கு, சு, டு, து, ன் என்னும் ) குற்றியலுகரம் ஒன்றும் ஆக இருபத்து நான்கு எழுத்துகள், மொழிக்கு இறுதியில் வரும்.

எ – கா : பல (அ), பலா (ஆ), கிளி (இ), தேனீ (ஈ), தரு (உ), பூ (ஊ) (எ. ஒரே (ஏ), தளை (ஐ), (ஒ), பலவோ (ஓ), கௌ (ஔ) என, உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மொழிக்கு இறுதியில் வரும்.

  • உரிஞ் (ஞ்), மண் (ண்), வெரிந் (ந்), பழம் (ம்), அறன் (ன்), மெய் (ய), அவர் (ர்), அவல் (ல்), அவ் (வ்), தமிழ் (ழ்), அவள் (ள்) என, மெய்யெழுத்துகள் பதினொன்று மொழிக்கு இறுதியில் வரும்.
  • பாக்கு (கு), பஞ்சு (சு), எட்டு (டு), பந்து (து), சால்பு (பு), கயிறு (று) எனக் குற்றியலுகர எழுத்துகள் மொழிக்கு இறுதியில் வரும்.

பகுதி -ஈ

IV.பெருவினாக்கள்

1. நீங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலையில் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க.

  • பேச்சு மொழி என்பது, திரவநிலையில் இருந்து நம் விருப்பத்திற்குக் கையாளவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும், பிறரை உணரச் செய்யவும் துணைபுரிகிறது. எழுத்தாகப் பதிவு செய்யப்படும் மொழி, உறைந்துபோன பனிக்கட்டி போன்று, திடநிலை பெற்றுவிடுகிறது. ஆகவே, கையாள எளிதாக இருப்பதில்லை .

பேச்சுமொழிச் சிறப்பு :

  • எழுத்தை மனிதனின் கை எழுதினாலும், அந்த எழுத்தின் உணர்ச்சியை முகத்திலுள்ள வாயினால் மட்டுமே வெளிப் படுத்த முடியும். அதனால் எழுத்துமொழியைவிடவும் பேச்சுமொழிக்கு ஆற்றல் அதிகம் உள்ளது. எழுத்து மொழியில், அதனைக் கேட்க எதிராளி என, ஒருவரும் இருப்பதில்லை. பேச்சுமொழி அப்படியன்று. எழுத்து மொழியைவிடவும் பேச்சு மொழிக்கு உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுதி.

எழுத்து மொழி இயல்பு :

  • எழுத்து பொழி என்பது, ஒருவகையில் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் மொழிபோல் தோன்றும்; உறைந்த பாக்கட்டி போன்ற திடநிலை அடைந்துவிடும். எழுத்துமொழி, விருப்பம்போல் கையாள முடியாததாகி விடுகிறது. எழுத்துமொழி, நேரடிப் பயன்பாட்டிற்கு உதவாததால், வேற்றுமொழி போலாகிவிடுகிறது.

பேச்சுமொழிக் கவிதை :

  • பேச்சுமொழியே ஒரு கவிஞனை நிகழ்காலத்தவனா, இறந்தகாலத்தவனா என, நிர்ணயம் செய்யும் ஆற்றலுடையது. பேச்சுமொழியில் ஒரு கவிதையைப் படைக்கின்றபோது, அது உடம்பின் ஒரு மேல்தோல்போல் உயர்வுடன் இயங்குகிறது. ஆனால், எழுத்துமொழியில் அதே சொற்கள் அழகுடையதானாலும், உணர்ச்சி இல்லாத ஆடைபோல் போர்த்திக்கொள்ள உதவுகிறது. பேச்சுமொழியை உடனே தாகம் போக்கும் நீர் என்றும், எழுத்துமொழி உறைந்த பனிக்கட்டியானாலும், என்றேனும் ஒருநாள் பயன்தரும் எனவும் நான் உணர்கிறேன்.

2.நன்னூல் பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத தொகுத்துரைக்க,

பாயிரம் :

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் (1) பொதுப்பாயிரம், ம சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் :

  • எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.
  • நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை
  • மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் :

  • தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.
  • நூல் சிரியரின் பெயர்
  • நூல் பின்பற்றிய வழி
  • நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;
  • நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;
  • நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;
  • இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;
  • இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

Share:

1 Comments: