12th Economics Chapter 1 - பேரியல் பொருளாதாரம் Book back Question and Answer Guide
சரியான விடையை தெரிவு செய்க:
1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
அ. சொத்து மற்றும் நலமும்
ஆ. உற்பத்தி மற்றும் நுகர்வு
இ. தேவையும் மற்றும் அளிப்பும்
ஈ. நுண்ணியல் மற்றும் பேரியல்
2. “ மேக்ரே” (Macro) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
அ. ஆடம்ஸ்மித்
ஆ. ஜே.எம். கீன்ஸ்
இ. ராக்னர் பிரிக்ஸ்
ஈ. காரல் மார்க்ஸ்
3. “நவீன பேரியல் ப ொருளியலின் தந்தை”
என அழைக்கப்படுபவர் யார்?
அ. ஆடம்ஸ்மித்
ஆ. ஜே.எம். கீன்ஸ்
இ. ராக்னர் பிரிக்ஸ்
ஈ. காரல் மார்க்ஸ்
4. பேரியல் பொருளாதாரத்தின் வேறு பெயர் யாது?
அ. விலை கோட்பாடு
ஆ. வருவாய் கோட்பாடு
இ. அங்காடி கோட்பாடு
ஈ. நுண்ணியல் கோட்பாடு
5. பேரியல் ப ொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.
அ. தனிநபர்கள்
ஆ. நிறுவனங்கள்
இ. நாடு
ஈ. மொத்தங்கள்
6. ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.
அ. நாடுகளின் செல்வம்
ஆ. பொது கோட்பாடு
இ. மூலதனம்
ஈ. ப ொது நிதி
7. பொதுவான விலையின் தொடர் உயர்வை
குறிப்பிடும் கருத்து ___________ஆகும்.
அ. மொத்த விலைக் குறியீடு
ஆ. வாணிபச் சுழல்
இ. பண வீக்கம்
ஈ. தேசிய வருவாய்
8.பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக
அ. அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பது
ஆ. தடைகளை முறியடிப்பது
இ. வளர்ச்சியை அடைவது
ஈ. மேலே கூறப்பட்ட அனைத்தும்
9. ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிடுக.
அ. உற்பத்தி மற்றும் பகிர்வும்
ஆ. உற்பத்தி மற்றும் பரிமாற்றம்
இ. உற்பத்தி மற்றும் நுகர்வு
ஈ. உற்பத்தி மற்றும் சந்தையிடுகை.
10. ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது
அ. உற்பத்தி துறை
ஆ. நுகர்வு துறை
இ. அரசு துறை
ஈ. மேலே கூறப்பட்ட அனைத்தும்
11. எந்த பொருளாதார அமைப்பில், உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?
அ. முதலாளித்துவ அமைப்பு
ஆ. சமத்துவ அமைப்பு
இ. உலகமய அமைப்பு
ஈ. கலப்புப் பொருளாதார அமைப்பு
12. பகிர்வில் சமத்துவத்தை கடைப்பிடிக்கிற பொருளாதார அமைப்பு _________ஆகும்.
அ. முதலாளித்துவ அமைப்பு
ஆ. உலகமயத்துவ அமைப்பு
இ. கலப்புப் பொருளாதாரம் அமைப்பு
ஈ. சமத்துவ பொருளாதார அமைப்பு
13. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?
அ. ஆடம்ஸ்மித்
ஆ. காரல் மார்க்ஸ்
இ. தக்கேரி
ஈ. ஜே.எம்.கீன்ஸ்
14. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு_________ ஆகும்.
அ. ரஷ்யா
ஆ. அமெரிக்கா
இ. இந்தியா
ஈ. சீனா
15. சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி.
அ. ஜே.எம்.கீன்ஸ்
ஆ. காரல் மார்க்ஸ்
இ. ஆடம்ஸ்மித்
ஈ. சாமுவேல்சன்
16. தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பை குறிப்பிடும் பதம்____________ஆகும்.
அ. முதலாளித்துவ பொருளாதாரம்
ஆ. சமத்துவ பொருளாதாரம்
இ. உலகமயத்துவ பொருளாதாரம்
ஈ. கலப்புப் பொருளாதாரம
17. ஒரு குறிப்பிட்ட காலத்தில் (Point of time)குவிந்த சரக்குகளின் அளவை குறிப்பிடும் பதம் ________ஆகும்.
அ. உற்பத்தி
ஆ. இருப்பு
இ. மாறிலி
ஈ. ஓட்டம்
18. கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.
அ. பண அளிப்பு
ஆ. சொத்துக்கள்
இ. வருவாய்
ஈ. வெளிநாட்டுச் செலாவணி இருப்பு
19. இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக
அ. குடும்பங்களும் நிறுவனங்களும்
ஆ. தனியார் மற்றும் பொதுத்துறை
இ. உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டுத்துறைகள்
ஈ. நிறுவனங்களும் அரசும்
20. திறந்துவிடப்பட்ட பொருளதாரத்தின் வட்ட ஓட்ட மாதிரி என்பது _________ஆகும்
அ. இரு துறை மாதிரி
ஆ. முத்துறை மாதிரி
இ. நான்கு துறை மாதிரி
ஈ. மேல் சொல்லப்பட்ட அனைத்தும்
பகுதி – ஆ
கீழ்க்கண்டவற்றுக்கு ஓரிரு வார்த்தையில் விடையளி
21. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
- பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது. ‘பேரியல் பொருளாதாரத்தைவருவாய் கோட்பாடு’ எனவும் அழைப்பர்.
22. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.
- பணவீக்கம் என்பது பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பதாகும்.
- மொத்த விலை குறியீட்டெண்,மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களை பயன்படுத்தி மொத்தவிலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.
23. “பொருளாதாரம்” என்பதன் பொருள் யாது?
பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை ஏ.ஜே. பிரவுண் (A.J. Brown ) என்பவர், “மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்துள்ளார்.
ஜே.ஆர். ஹிக்ஸ் (J.R.Hicks) “நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு” என கூறுகிறார்
24. வளர்ச்சி நிலை அடிப்படையில் பொருளாதாரங்களை வகைப்படுத்துக.
- வளர்ந்த, பொருளாதார அமைப்புகள்
- வளராத, முன்னேறாத பொருளாதார அமைப்புகள்
- வளரும் பொருளாதார அமைப்புகள்
25. முதலாளித்துவம் என்றால் என்ன?
- இங்கு பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.
- முதலாளித்துவ பொருளாதாரத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் தனியார் வசம் இருக்கும் . பொருட்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் லாபநோக்கத்தை முதன்மையாக கொண்டிருப்பார்கள்
- தனிநபர் தங்களுக்கான வேலையைத் தெரிந்தெடுப்பதிலும் மற்றும் திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சுதந்திரமாகச் செயல்படுவர்.
26. பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக.
- மாதிரி (MODEL) என்பது உண்மை சூழலை எளிமையாக பிரதிபலிப்பது ஆகும்.
- பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்.
- மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது.
- பெரும்பாலான பொருளாதார மாதிரிகள், கணிதம், (MATHAMATIC) வரைபடங்கள் (GRAPHS) மற்றும் சமன்பாடுகளால் (Equations) அமைக்கப்பட்டு, பொருளாதார மாறிலிகளுக்கிடையேயான உறவுகளை விளக்க உதவுகின்றன.
27. “வருமானத்தின் வட்ட ஓட்டம்” – வரையறு.
- ஒரு பொருளாதார அமைப்பின் வருவாயின் வட்டஓட்டம் மாதிரியானது அந்த பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையே உள்ள தொடர்பினை விளக்குவதாகும்.
- இது, பொருளாதார முகவர்களாகிய நிறுவனம், குடியிருப்பு, அரசாங்கம் மற்றும் நாடுகளிடையே வருவாய், பொருட்கள் மற்றும் பணிகள், மற்றும் உற்பத்தி காரணிகளின் ஓட்டத்தை காண்பிப்பதாகும்.
- வருவாயின் வட்டஓட்டம் ஆய்வானது தேசிய கணக்குகள் மற்றும் பேரியல் பொருளாதாரத்தின் அடிப்படையாகும்.
பகுதி – இ
கீழ்வரும் வினாக்களுக்கு ஒரு பத்தி அளவில் பதில் தருக
28. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை தருக.
29. பொருளாதார அமைப்புகளின் வகைகளை குறிப்பிடுக
30. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.
31. சமத்துவத்தின் குறைகளைக் கூறுக.
32. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எடுத்தெழுதுக.
33. முதலாளித்துவம் மற்றும் சமத்துவத்தை வேறுபடுத்துக.
34. இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.
பகுதி – ஈ
கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு பக்க அளவில் விடையளி
35. பேரினப் பொருளியலின் பரப்பெல்லையை விவரி.
36. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.
37. முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக.
38. முதலாளித்துவ, சமத்துவம், கலப்புத்துவம் இவற்றின் தன்மைகளை ஒப்பிடுக
0 Comments:
Post a Comment