> கல்வியாண்டில் 2,098 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ~ Kalvikavi - Educational Website - Question Paper

கல்வியாண்டில் 2,098 ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Post Graduate Assistants / Physical Education Directors Grade - I

TRB Subject wise Vacancies 2021

  • Tamil - 271
  • English - 190
  • Mathematics-110
  • Physics - 94
  • Chemistry - 177 
  • Zoology - 106
  • Botany - 89 
  • Economics - 287
  • Commerce-313
  • History - 112
  • Geography - 12
  • Political Science - 14
  • Home Science - 03
  • Indian Culture - 03
  • Bio Chemistry - 01
  • Physical Director Grade 1-39
  • Computer Instructor Grade 1 - 39
  • Minority Medium - 09

Pay Scale: Basic Pay-29,800/- (with higher initial) at entry point in Pay Matrix Level-9 of WBS(ROPA) Rules, 2019. Other allowances are admissible as per existing Government Rules

TRB latest Update today

  • தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், இந்த கல்வியாண்டில் 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர்கள்:

  • தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் சென்னையில் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்துள்ளார். அதன் பின்னர் சட்டப்பேரவை விவாதம் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
  • இந்நிலையில் சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் உரையாற்றினார். மேலும் தேசிய மாணவர்கள் சேர்க்கை விகிதம் 27.1 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய மொத்த மாணவர்கள் சேர்க்கை விகிதம் 51.4 விழுக்காடு ஆகும். மேலும் கொரோனா பரவல் காரணாமாக ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்படுகின்றன.
  • அதனால் உயர்கல்வி மாறி வரும் சூழல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் முறை மற்றும் பாட அறிவை புது விதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இந்த காலத்திற்கேற்ப படிப்பை வழங்க அவர்கள் புது வித தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் இந்த ஆண்டே நிரப்பப்படும் என கொள்கை குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tag : PGTRB 2021, TNTRB latest notification update ,pgtrb today news,pgtrb vacancy list,pgtrb total vacancy list subject wise.

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts