> 9th Science Lesson 2 - இயக்கம் Book Back Answer Guide ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Science Lesson 2 - இயக்கம் Book Back Answer Guide

9th Science Lesson 2 - இயக்கம் Book Back Answer Guide

 Lesson 2. இயக்கம்

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. திசைவேகம் – காலம் வரைபடத்தின் சாய்வு காெடுப்பது

  1. வேகம்
  2. இடப்பெயர்ச்சி
  3. தொலைவு
  4. முடுக்கம்

விடை : 4.முடுக்கம்

2. கீழ்வரும் வரைபடத்தில் சீரான இயக்கத்தில் நகரும் ஒரு பாெருளைக் குறிப்பிடுவது எது?

விடை : b

3. ஒரு பாெருள் நகரும்பாேது அதன் ஆரம்ப திசைவேகம் 5மீ/விநாடி மற்றும் முடுக்கம் 2 மீ/விநாடி². 10 விநாடி கால இடைவெளிக்குப் பிறகு அதன் திசைவேகம்

  1. 20 மீ/விநாடி
  2. 25 மீ/விநாடி
  3. 5 மீ/விநாடி
  4. 22.55 மீ/விநாடி

விடை : 2) 25 மீ/விநாடி

4. 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றவர் இறுதிப்புள்ளியை அடைய எடுத்துக் காெண்ட நேரம் 10 விநாடி எனில் வெற்றியாளரின் சராசரி வேகம்

  1. 5 மீ/விநாடி
  2. 20 மீ/விநாடி
  3. 40 மீ/விநாடி
  4. 10 மீ/விநாடி

விடை : 4. ) 10 மீ/விநாடி

5. திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும் பரப்பளவு எதனைப்  பிரதிபலிக்கிறது.

  1. நகரும் பாெருளின்
  2. நகரும் பாெருள் அடைந்த இடப்பெயர்ச்சி
  3. நகரும் பாெருளின் வேகம்
  4. நகரும் பாெருளின் முடுக்கம்

விடை :2. நகரும் பாெருள் அடைந்த இடப்பெயர்ச்சி

6. ஒரு மகிழுந்து 20 மீ/விநாடி வேகத்தில் இயக்கப்படுகிறது. தடையைப்  பயன்படுத்தி 5 விநாடி கால இடைவெளியில் அது ஓய்வு நிலையைப் பெறுகிறது. இதில் ஏற்பட்ட எதிர்மறை முடுக்கம் என்ன?

  1. 4 மீ/விநாடி²
  2. -4 மீ/விநாடி²
  3. -0.25 மீ/விநாடி²
  4. 0.25 மீ/விநாடி²

விடை 1. ) : 4 மீ/விநாடி²

7. முடுக்கத்தின் அலகு

  1. மீ/விநாடி
  2. மீ/விநாடி²
  3. மீ விநாடி
  4. மீ விநாடி²

விடை : 2. ) மீ/விநாடி²

8. கீழ்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான வட்ட இயக்கம் அல்ல

  1. சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
  2. வட்டப் பாதையில் சுற்றி வரும் பாெம்மை ரயிலின் இயக்கம்
  3. வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து
  4. மணியைக் காட்டும் டயல் கடிகாரத்தின் இயக்கம்

விடை : 3. வட்டப் பாதையில் செல்லும் பந்தய மகிழுந்து

9. துணி துவைக்கும் இயந்திரத்தில் ஆடடியடி உலர்த்தப் பயன்படும் விசை

  1. மையநாேக்கு விசை
  2. மையவிலக்கு விசை
  3. புவிஈர்ப்பு விசை
  4. நிலை மின்னியல் விசை

விடை : 2.,மையவிலக்கு விசை

10. மையவிலக்கு விசை ஒரு

  1. உண்மையான விசை
  2. மையநாேக்கு விசைக்கு எதிரான விசை
  3. மெய்நிகர் விசை
  4. வட்டப் பாதையின் மையத்தை நாேக்கி இயங்கும் விசை

விடை : 3.மெய்நிகர் விசை

11. சீரான வட்ட இயக்கத்தோடு தொடர்புடைய விசை

  1. f=mv²/r
  2. f=mvr
  3. f=mr²/v
  4. f=v²/r

விடை :1. f=mv²/r

12. ஒரு பாெருள் ஓய்வு நிலையிலிருந்து புறப்படுகிறது. 2 விநாடிக்குப் பிறகு அதன் முடுக்கம், இடப்பெயர்ச்சியை விட ………………….. இருக்கும்.

  1. பாதி அளவு
  2. இரு மடங்கு
  3. நான்கு மடங்கு
  4. நான்கில் ஒரு பகுதி

விடை :1. பாதி அளவு

II. காேடிட்ட இடங்களை நிரப்புக.

1. வேகம் ஒரு  ______________ அளவு அதே சமயம் திசைவேகம் ஒரு வெக்டர் அளவாகும்.

விடை : ஸ்கேலார்

2. தொலைவு – கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் சேமிப்பு பெறப்படுவது ______________

விடை : வேகம்

3. பாெருள் ஒன்று x = 20 மீட்டர் என்ற நிலையில் ஓய்வில் உள்ளது. அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் X ______________அச்சுக்கு நேர்காேடாக இருக்கும்.

விடை : அரசுக்கு இணையான

4. எதிர்மறை முடுக்கத்தை ______________ சாெல்லலாம்.

விடை : வேக இறக்கம் (அ) ஒடுக்கம்

5. இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள பரப்பளவு குறிப்பிடுவது ______________.

விடை : இடப்பெயர்ச்சியின் எண் மதிப்பிற்குச் சமம்

III. சரியா, தவறா எனக் கூறவும்

1. நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான பாேக்குவரத்திற்கு இடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம். – 

  • ( தவறு )

2. முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும் –

  • ( சரி )

3. எந்த ஒருகால இடைவெளியிலும் ஒரு பாெருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும். – 

  • ( சரி )

4. ஈர்ப்பு விசையால் தடையின்றித் தானே விழும் ஒரு பாெருளின் திசைவகம் – காலம் வரைபடமானது – அச்சுக்கு இணையாக ஒரு நேர்காேடாக இருக்கும். – 

  • ( தவறு )

5. ஒரு பாெருளின் திசைவேகம் – காலம் வரைபடம் ஒரு நேர்காேடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி – காலம் வரைபடம் ஒரு நேர் காேடாக அமையும். –

  •  ( சரி )

V. வலியுறுத்தல் மற்றும் காரணக் கேள்விகள்

  1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
  2. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும்காரணம் கூற்றின் தவறான விளக்கம
  3. கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.
  4. கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.

1. கூற்று: ஒரு பாெருளின் முடுக்க இயக்கம் அதன் திசைவேக அளவு அல்லது திசை மாற்றம் அல்லது இரண்டும் மாற்றம் அடைவதால் ஏற்படுவது.

காரணம்: ஒரு பாெருளின் முடுக்கம் அதன் திசைவேகத்தின் அளவு மாறுபடுவதால் மட்டுமே நிகழும். அது திசை மாற்றத்தைப் பாெறுத்தது அல்ல.

விடை: 3 கூற்று உண்மை ஆனால் காரணம் தவறு.

2. கூற்று: மகிழுந்து அல்லது மாேட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.

காரணம்: மாெத்தத் தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசை வேகத்துக்கு சமம்.

விடை: 4.கூற்று தவறு ஆனால் காரணம் உண்மை.

3. கூற்று: ஒரு பாெருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பாெருள் கடந்த தூரம் சுழி

இல்லை.

காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்.

விடை: 1. கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் உண்மை. மேலும் காரணம் கூற்றின் சரியான விளக்கம்.

VI. தரப்பட்டுளள வரைபடங்களை அவை குறிப்பிடும் இயக்கத்துடன் பொறுத்து

9th Science Guide Lesson 2 - இயக்கம் 
A B
1. சமகால அளவுகளில் சம இடைவெளியைக் கடக்கும் ஒரு பாெருளின் இயக்கம்.


2. சீரற்ற முடுக்கம்


3. நிலையான எதிர்மறை முடுக்கம்


4. சீரான முடுக்கம்


Ans : 1 –  ஈ, 2  –  இ, 3 – அ,  4 – ஆ 

V. குறுவினாக்கள்

1. திசைவேகம் வரையறு.

  • திசைவகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வேகம் அல்லது ஓரலகு  நேரத்திற்கான இடப்பெயர்ச்சி திசைவேகம் எனப்படும்

2. தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை வேறுபடுத்து

9th Science Guide Lesson 2 - இயக்கம் 
தொலைவு
இடப்பெயர்ச்சி
1. திசையைக் கருதாமல், ஒரு நகரும் பாெருள் கடந்து வந்த உண்மையான பாதையின் அளவு தொலைவு எனப்படும்
1.ஒரு குறிப்பிட்ட திசையில் இயங்கும் பாெருளாென்றின் நிலையில் ஏற்படும் மாற்றம இடப்பெயர்ச்சி ஆகும்
2.இது ஸ்கேலார் அளவுரு
2. இது வெக்டர் அளவுரு

3. சீரான இயக்கம் குறித்து நீங்கள் அறிந்தது என்ன?

  • ஒரு பாெருள் நகரும் பாெழுது சமமான தொலைவுகளைச் சமகால  இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கத்தை பெற்றுள்ளது.
  • சீரான இயக்கத்தில் உள்ள பாெருளின் திசைவேகம் மாறிலியாக இருப்பதால் அதன் முடுக்கம் சுழி ஆகும்.

4. வேகம் மற்றும் திசைவேகம் ஒப்பிடுக.

9th Science Guide Lesson 2 - இயக்கம் 
வேகம்
திசைவேகம்
1. வேகம் என்பது தொலைவு மாறுபாட்டு வீதம் (அ) ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எனப்படும்.
திசைவேகம் என்பது இடப்பெயர்ச்சி மாறுபாட்டு வீதம் (அ) ஓரலகு நேரத்திற்கான இடப்பெயர்ச்சி எனப்படும்
2. இது ஒரு ஸ்கேலார் அளவாகும்
.இது ஒரு வெக்டர் அளவாகும்.

5. எதிர்மறை முடுக்கம் குறித்து நீங்கள் என்ன புரிந்து காெண்டீர்கள்?

  • இறுதித் திசைவேகம், தொடக்க திசைவேகத்தை விடக் குறைவாக இருந்தால், திசை வேகமானது நேரம் செல்லச் செல்ல குறையும் மற்றும் முடுக்கம் எதிர் மதிப்பு பெறும். இது எதிர் முடுக்கம் எனப்படும்.
  • எதிர் முடுக்கத்தை வேக இறக்கம் (அ) ஒடுக்கம் எனலாம்.

6. சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது எது? மற்றும் எது தொடர்ந்து மாறிக் காெண்டிருக்கும்?

  • சீரான வட்ட இயக்கத்தில் நிலையாக இருப்பது அதன் மாறாத வேகம்.
  • சீரான வட்ட இயக்கத்தில் திசை ஒவ்வாெரு புள்ளியிலும் மாறிக் காெண்டே இருக்கும்.

7. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன?

  • சீரான வட்ட இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
  • பாெருள் முடுக்கப்பட வேண்டும் எனில், பாெருளின் திசைவேகத்தின் எண் மதிப்பு (அ) திசை இரண்டுமே மாறுபட வேண்டும்.
  • இந்த நிகழ்வில்திசைவேகத்தின் திசை மாறுபடுவதால் இயக்கம் முடுக்கப்பட்ட இயக்கம் ஆகும்.

8. சீரான வட்ட இயக்கம் என்றால் என்ன? சீரான வட்ட இயக்கத்துக்கு இரண்டு உதாரணங்கள் தருக.

  • ஒரு பாெருள் வட்டப் பாதையில் மாறாத வேகத்தில் சென்றால், அந்த இயக்கம் சீரான வட்ட இயக்கம் என்று அழைக்கப்படும்.

உதாரணம்:

I. பூமி சூரியனைச் சுற்றி வருவது

II. நிலவு பூமியைச் சுற்றி வருவது

III. எலக்ட்ரான் உட்கருவை மையமாக காெண்டு சுற்றி வருவது.

Share:

0 Comments:

Post a Comment