> 9th Tamil Assignment Answer 2021 - Kalvitv Assignment ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

9th Tamil Assignment Answer 2021 - Kalvitv Assignment

9th Tamil Assignment Answer 2021 - Kalvitv Assignment

9th Maths Assignment Answer Key Click Here

9th tamil assignment unit 1 - PDF Download

 ஒப்படைப்பு

வகுப்பு :9.                                               பாடம்:தமிழ்

இயல்-1

 பகுதி - அ

1. ஒரு சொல்லில் விடை தருக.

1.எந்த நாடுகளின் பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ளது?

  • மொரிசியஸ்,இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளன

2. கடுவன் என்னும் சொல்லின் பொருள் யாது?

  • கடுவன் என்பதன் பொருள் ஆண் குரங்கு

3.திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதியவர் யார்?

  • கால்டுவெல்

4. தமிழோவியம் என்னும் கவிதை நூல் யாருடைய படைப்பு?

  • ஈரோடு தமிழன்பன்

5. "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று பாடியவர் யார்?

  • பாரதியார்

6.சிற்றியலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

  • தொன்னூற்றாறு (96)

7. கண்ணி என்னும் செய்யுள் எத்தனை அடிகளைக் கொண்டது?

  • இரண்டு

8.தூது இலக்கியத்தின் வேறு பெயர் என்ன?

  • வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்

9. வனப்பு என்பதன் பொருள் யாது?

  • அழகு

10. " விட்டு விட்டு * - இலக்கணக் குறிப்பு தருக.

  • அடுக்குத்தொடர்

பகுதி -ஆ

II.சிறுவினா

11.இந்திய மொழிக் குடும்பங்கள் நான்கினை எழுதுக.

  1. இந்தோ ஆசிய மொழிக்குடும்பம்
  2. திராவிட  மொழிக்குடும்பம்
  3. ஆசிய மொழிக்குடும்பம்
  4. சீன திபெத்திய மொழிக்குடும்பம்

12. தமிழோவியம் என்னும் நூலின் ஆசிரியர் எழுதியுள்ள கவிதை நூல்களை எழுதுக.

  • வணக்கம் வள்ளுவ ,ஹைக்கூ , சென்டரியு , லிமரைக்கூ 

13. சங்க இலக்கியத்தில் இயக்கப்பட்ட கடற்கலன்கள் எவையெவை?

  • நாவாய், வங்கம், தோணி, கலம் 

14. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் நான்கு தமிழ்ச் சொற்களைத் தருக.

  1. சாப்ட்வேர் – மென்பொருள்
  2. கர்சர் – ஏவி அல்லது சுட்டி
  3. க்ராப் – செதுக்கி
  4. போல்டர் – உறை

15. தன்வினையைப் பிறவினையாக மாற்றும் விகுதிகளை எழுதுக.

தன்வினை

  • வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா: பந்து உருண்டது.

பிறவினை :

  • வினையின் பயன் எழுவாயை இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான்

பகுதி - இ

III. பெருவினா

16. திராவிட மொழிக்குடும்பம் பற்றி விளக்குக.

  • தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா ஆகியவை தென் திராவிட மொழிகள்.
  • திராவிட மொழிக்குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள், நடுத் திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் என மூன்று பிரிவுகளை உடையது.

  • திராவிட மொழிகளுள் முதன்மையாக விளங்குவது தமிழ். எத்தகைய காலமாற்றத்திலும் மாறிவரும் புதுமைகளுக்கும் ஈடு கொடுத்து இயங்கும் ஆற்றல் தமிழுக்கு உண்டு. தமிழாய்ந்த அயல்நாட்டவரும் செம்மொழித் தன்மையைத் தரணியெங்கும் எடுத்துரைத்து வருகின்றனர். திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது 
  • திராவிட மொழிகளுள் பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழே ஆகும். தமிழ் மொழி திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது. தமிழின் பல அடிச் சொற்களின் ஒலியன்கள், ஒலி இடம் பெயர்தல் என்ற விதிப்படி பிற திராவிட மொழிகளின் வடிவம் மாறியிருக்கின்றன. சுட்டுப்பெயர்களும் மூவிடப் பெயர்களும் பெரும்பாலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன.

முடிவுரை  :

  • திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியாகத்திகழ்கின்ற தமிழ், பிற திராவிட மொழிகளை விட ஒப்பியல் ஆய்வுக்குத் துணையாக அமைந்துள்ளது.

17. தமிழ் விடுதூது பாடலில் கூறும் தமிழின் பத்துக் குணங்களை எழுதுக.

 பத்துக் குணங்கள் 

  1.  செறிவு,
  2. தெளிவு,
  3. சமநிலை,
  4. இன்பம்,
  5. ஒழுக்கிசை ,
  6. உதாரம்,
  7. உய்த்தலில் பொருண்மை,
  8. காந்தம்,
  9. வலி ,
  10. சமாதி 
 

Share:

14 Comments: