9th Tamil July Month assignment answer Key - Unit 2 Assignment
- பாடம்: தமிழ்
- வகுப்பு: ஒன்பது
- ஒப்படைப்பு - விடைகள்
- இயல் - 2
- இயற்கை , சுற்றுச்சூழல்
9th Tamil 2nd Assignment Answer key
1. ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் “ என்று பாடியவர் யார் ?
- இளங்கோவடிகள்
2. தௌலீஸ்வரம் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?
- கோதாவரி ஆறு
3. 'மே தினமே வருக' இந்நூலின் ஆசிரியர் யார் ?
- கவிஞர்.தமிழ்ஒளி
4. கந்தம் என்ற சொல்லின் பொருள் யாது ?
- மணம்
5. நீர்நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
- சோழநாடு
6. பெரிய புராணத்தை இயற்றியவர் யார்?
- சேக்கிழார்
7. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலை எழுதியவர் யார்?
- நம்பியாண்டார் நம்பி.
8. பண்டைத் தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?
- புறநானூறு
9. மல்லல் மூதூர் வயவேந்தே! - எவ்வகைத் தொடர்?
- விளித்தொடர்.
10.அடுபோர். இலக்கணக் குறிப்பு தருக.
- வினைத்தொகை
பகுதி - ஆ
I1 குறுவினா
11. உறைக்கிணறு என்றால் என்ன?
மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு உறைக்கிணறு எனப்படும்.
12. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளுள் இரண்டினை எழுதுக.
* நிலைபெற்ற சிலை
* மே தினமே வருக
* குருவிப்பட்டி
13. களை பறிக்கும் பருவம் எது?
- நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக் கண்ட உழவர் இதுதான் களைபறிக்கும் பருவம் என்றனர்.
14. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே-குறிப்பு தருக.
- நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது ; உணவையே முதன்மையாகவும் உடையது. எனவே , உணவு தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர்.
15. கூவல் என்று அழைக்கப்படுவது எது?
- உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை.
பகுதி-இ
III. நெடுவினா
16. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
பட்டமரத்தின் வருத்தங்கள் :
* மழைநீர் இன்மையால், மரங்கள் பட்டமரங்களாகக் காய்ந்து போகின்றன.
* இலை, தழைகளை யெல்லாம் பெற்றிருந்த மரம், பட்டமரமாகியதால், வெட்டப்படும் நாள் என்று வருமோ என வருந்தி நிற்கிறது.
* அழகிய மலர்களும் பசுமையான இலைகளுமாக நிழல் தந்த மரம், வெந்து வெம்பிக் குமைந்தது.
* மேல்பட்டையாகிய ஆடைகள் எல்லாம் விழுந்தன.
* பாடும் பறவை இனங்கள், வாழ வழியற்றுத் தவித்துப் போயின.
*கிளைகளில் ஏறிக் குதிரை ஆடும் சிறார்கள், விளையாட முடியாமல் ஏங்கினர்.
* இவை அனைத்தும் வெறும் கனவாகிப் போயினவே என்பன, பட்டமரம் வருந்தியது.
17. சோழர் காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது ?
சோழர்காலக் 'குமிழித்தூம்பின் பயன்கள்
* அணையில் வழிந்தோடும் நீரின் அளவை அதிகரிக்கவும், அணையின் முன் தேங்கும் நீரின் சேற்றைக் குறைக்கவும் தமிழன் கையாண்ட அற்புதமான யுக்தி ‘குமிழித் தூம்பு'.
* மழைக்காலங்களில் ஏரியில் நீர் நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர் தண்ணீருக்குள் சென்று கழிமுகத்தை அடைந்து, குமிழித்தூம்பை மேலே தூக்குவார்.
* அடியில் இருக்கும் இரு துளைகளின் வழியே, மேலே இருக்கும் நீர் ஓடித் துளையிலிருந்து வெளியேறும்.
* கீழே உள்ள சேறும் சகதியும், துளையில் இருந்து நீருடன் சேர்ந்து வெளியேறும். தூர் வாரவேண்டிய அவசியம் இருக்காது.
பகுதி-ஈ
IV.செயல்பாடு
படத்தைப் பார்த்துக் கவிதை படைக்க. பசுமை யான மரம்- ஒருவீடு
மாணவக் கவிஞர்கள் தங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கவிதையாக வடிக்கவும்.
9th std Tamil assignment Answer key,9th Tamil unit 2 Assignment Answer key ,m 9th Tamil July Month Answer key
0 Comments:
Post a Comment