> CBSE Class 10 Public Exam Result 2020-2021 ~ Kalvikavi - Educational Website - Question Paper

CBSE Class 10 Public Exam Result 2020-2021

சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று பகல் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும்12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பு , 11ம் வகுப்புகளில் தலா 30 சதவீத மதிப்பெண்கள் மற்றும் 12 ஆம் வகுப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் என கணக்கிடு செய்ய முடிவெடுக்கப்பட்டது. அத்துடன் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை 31-ஆம் தேதி வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. அதன் படி, கடந்த 30 ஆம் தேதி 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகும் என சிபிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை

 cbseresults.nic.in

cbse.gov.in 

இல் காணலாம். அல்லது Digilocker, Umang செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts