> Samacheer Guide 3rd Tamil Solutions Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி ~ Kalvikavi - Educational Website - Question Paper

Samacheer Guide 3rd Tamil Solutions Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி

Samacheer Guide 3rd Tamil Solutions Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி Textbook Questions and Answers, Notes.

Samacheer Guide 3rd Tamil Solutions Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி

பக்கம் 9

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்

அ) சந்திரன்

ஆ) சூரியன்

இ) விண்மீன்

ஈ) நெற்கதிர்

விடை:

ஆ) சூரியன்

கேள்வி 2.

மகிழ்ச்சியடைந்தான் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) மகிழ்ச்சி + அடைந்தான்

ஆ) மகிழ்ச்சி + யடைந்தான்

இ) மகிழ்ச்சியை + அடைந்தான்

ஈ) மகிழ்ச்சியை + யடைந்தான்

விடை:

அ) மகிழ்ச்சி + அடைந்தான்

கேள்வி 3.

ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) ஒலி + யெழுப்பி

ஆ) ஒலி + எழுப்பி

இ) ஒலியை + யெழுப்பி

ஈ) ஒலியை + எழுப்பி

விடை:

ஆ) ஒலி + எழுப்பி பால்

பொருத்தமான குறியிடுக. ✓ சரி, X தவறு.

கேள்வி 1.

கண்ண ன் பெரியவருக்குச் சாலையைக் கடக்க உதவினான்.

விடை:

கேள்வி 2.

கண்ணன் பள்ளிக்கு நேரத்தோடு வந்துவிட்டான்.

விடை:

X

கேள்வி 3.

பெரியவர் அலைபேசியில் 107ஐ அழைத்தார்.

விடை:

X

கேள்வி 4.

ஆசிரியரும் மாணவர்களும் கண்ண னைப் பாராட்டினர்.

விடை:

அகர முதலியைப் பார்த்துப் பொருள் வேறுபாடு அறிக

1. ஒலி : ___________________________

2. ஒளி : ___________________________

விடை:

1. ஒலி : ஓசை

2. ஒளி : வெளிச்சம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 2 கண்ணன் செய்த உதவி 2

3. பள்ளி : ___________________________

4. பல்லி : ___________________________

விடை:

3. பள்ளி : கல்வி கற்கும் இடம்

4. பல்லி : ஊர்ந்து செல்லும் உயிரினம்

5. காலை : ___________________________

6. காளை : ___________________________

விடை:

5. காலை : பொழுது விடிந்த நேரம்

6. காளை : எருது

சரியான சொல்லால் நிரப்பிப் படி

(வலிமை, கத்த, இலைதழைகளைத், நீளமாக, உயரமானது)

கேள்வி 1.

ஒட்டகச்சிவங்கி மிகவும் ___________________________

விடை:

  • ஒட்டகச்சிவங்கி மிகவும் உயரமானது   

கேள்வி 2.

அதன் கழுத்து ___________________________ இருக்கும்.

விடை:

  • அதன் கழுத்து   நீளமாக   இருக்கும்.

கேள்வி 3.

ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு ___________________________ முடியாது.

விடை:

  • ஒட்டகச்சிவிங்குக்குக் குரல்நாண் இருந்தாலும் அதனால் சத்தம் போட்டு   கத்த   முடியாது.

கேள்வி 4.

ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு ___________________________ வாய்ந்தது.

விடை:

  • ஒரு சிங்கத்தையே காலால் தாக்கிக் கொல்லும் அளவுக்கு   வலிமை   வாய்ந்தது.

கேள்வி 5.

ஒட்டகச்சிவிங்கி ___________________________ தின்னும்.

விடை:

  • ஒட்டகச்சிவிங்கி இலை   தழைகளைத்   தின்னும்.

பக்கம் 11

வினாக்களுக்கு விடையளி பாக்கத்தக்காக்கும்

கேள்வி 1.

கண்ணன் எங்குப் புறப்பட்டான்?

விடை:

  • கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான்

கேள்வி 2.

பள்ளி செல்லும் வழியில் கண்ணன் யாரைப் பார்த்தான்?

விடை:

  • பள்ளி செல்லும் வழியில் கண்ணன் ஒரு பெரியவரைப் பார்த்தான்.

கேள்வி 3.

பேருந்து எதில் மோதியது?

விடை:

  • பேருந்து ஒரு மரத்தில் மோதியது.

கேள்வி 4.

பெரியவர் எந்த எண்ணிற்குச் செல்பேசியில் பேசினார்?

விடை:

  • பெரியவர் 108 என்ற எண்ணிற்கு செல்பேசியில் பேசினார்.

கேள்வி 5.

ஆசிரியர் கண்ணனை எதற்காகப் பாராட்டினார்?

விடை:

  • பிறருக்கு உதவி செய்ததற்காக ஆசிரியர் கண்ணனைப் பாராட்டினார்.

சொல் விளையாட்டு

வாத்தில் உள்ள எழுத்துக்களைக் கொண்ட புதிய சொற்களை உருவாக்குக.

எ.கா : நகை

விடை:


Share:

0 Comments:

Post a Comment

Popular Posts