> Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 lesson 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 lesson 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம்

Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 lesson 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 1 Chapter 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 1 lesson 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம்

தமிழ் அமுது 

பாடலின் கருத்து:

  • தோண்டும் போதெல்லாம் ஊற்றில் நீர் சுரக்கிறது. அது போல் சுரக்கின்ற செந்தமிழே! விரும்பிய போதெல்லாம் விளைகின்ற முத்துப் போன்ற தமிழே! இந்த உலகில் என்னைப் பாதுகாக்க பொன்னோ பொருளோ தேவையில்லை. இன்பத் தமிழே! நீதான் உலகில் என்னைப் பாதுகாத்து வருகிறாய்.

‌விடை‌:

  1. தோண்டுகின்ற                                –           மணலை அள்ளி
  2. எடுக்கின்ற: சுரக்கின்ற               –            நீர் ஊறுகின்ற
  3. வேண்டுகின்ற                                  –            விரும்பிய
  4. நித்திலம்                                              –            முத்து
  5. போற்றி வைக்க                               –            சேர்த்து வைக்க

பக்கம் 2

படிப்போம் சிந்திப்போம் எழுதுவோம்

கேள்வி 1.

நித்திலம் இச்சொல்லின் பொருள்

அ) பவளம்

ஆ) முத்து

இ) தங்கம்

ஈ) வைரம்

விடை‌:

ஆ) முத்து

கேள்வி 2.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செம்மை + தமிழ்

ஆ) செந் + தமிழ்

இ) செ + தமிழ்

ஈ) செம் + தமிழ்

விடை‌:

அ) செம்மை + தமிழ்

கேள்வி 3.

உன்னை + தவிர என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்)

அ) உன்னைத் தவிர

ஆ) உனைத்தவிர

இ) உன்னை தவிர

ஈ) உனை தவிர

விடை‌:

அ) உன்னைத் தவிர

இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் தெரிவு செய்து எழுதுவோமா ….

Samacheer Book 3rd Tamil Guide Term 1 Chapter 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் 2

‌விடை‌:

Samacheer Book 3rd Tamil Guide Term 1 Chapter 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் 2

கலைந்துள்ள எழுத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்குக.

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் 3

‌விடை‌:

Samacheer Kalvi 3rd Tamil Guide Term 1 Chapter 1 மூன்றாம் வகுப்பு முதல் பருவம் 4

ஆடிப் பாடி மகிழ்வோம்

பாடலின் பொருள் :

  • அத்திப் பழத்தின் தேன் எடுப்போம். ஆலமர விழுது போல் தாங்கு வோம். இன்முகத்துடன் பள்ளிக்குச் செல்வோம். நட்புணர்வுடன் பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம். மகிழ்ச்சியுடன் பாடம் படித்திடுவோம். ஊர் முழுவதும் சுற்றி வருவோம். எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். ஏட்டில் பாட்டு எழுதுவோம். ஐந்து வகை நிலம் செழிக்க ஒன்றுபட்டு வாழ்வோம். ஆற்றில் படகு விடுவோம். ஔவையின் அறிவுரைகளை மதித்திடுவோம். எ∴கு போன்ற மனவலிமை கொண்டு வாழ்வோம்.

விடை‌:

  • விழுது                      –            ஆலமரத்தின் தாங்கும் வேர்;
  • இசைவோடு         –           மனநிறைவோடு;
  • ஈகை                        –           பிறருக்கு அளிப்பது;
  • உவகை                   –           மகிழ்ச்சி;
  • ஏடு                            –           எழுதப் பயன்படும் காகிதம்;
  • ஐவகை                   –           ஐந்து விதமான;
  • ஓடம்                        –           படகு;
  • ஔவை                  –           சங்ககாலப் பெண்புலவர்;
  • எ∴கு                        –           இரும்பின் ஒரு வகை;
  • உறுதி                    –            திடம் / வலிமை.

செயல் திட்டம்

கேட்டு, எழுதி வரலாமா

தமிழ் மொழியின் சிறப்பை வெளிப்படுத்தும் பாடல்கள் இரண்டை எழுதி வருக

‌விடை‌:

தமிழ் மொழியின் சிறப்பு

1)

 தமிழே, தமிழே, என் உயிரே

தரணியில் இதற்கிலை ஈடிணையே!

அமிழ்தின் இனிய தமிழ் மொழியே

அகிலம் போற்றும் உயர் மொழியே!

2) 

தொன்மையில் தோய்ந்தது எம்மொழியாம்

எண்ணரும் இலக்கியச் செம்மொழியாம்.

விண்ணவர் போற்றிடும் தேன்மொழியாம்

கண்மணி எங்களின் தாய்மொழியாம்.

Share:

0 Comments:

Post a Comment