> TN 6th std Tamil Assignment Asnwer 2021 - Kalvitv Assignment 6th Tamil ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TN 6th std Tamil Assignment Asnwer 2021 - Kalvitv Assignment 6th Tamil

TN 6th std Tamil Assignment Asnwer 2021 - Kalvitv Assignment 6th Tamil

Question PDF Download -

இயல்-1

பகுதி -அ

வகுப்பு : 6


பாடம் : தமிழ்

பகுதி - 1

1. ஒரு மதிப்பெண் வினாக்கள்

அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.                                 14x1=14

1.அமுதென்று என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

அ, அமுது+தென்று 

ஆ. அமுது+என்று

இ. அமுது+நன்று

 ஈ. அமு+தென்று 

விடை :ஆ. அமுது+என்று

2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் சுருங்கி விட்டது.

அ. மேதினி      ஆ.நிலா        இ.வானம்            ஈ.காற்று

விடை :இ.வானம்

3. எட்டு + திசை என்பதை சேர்த்து எழுதக் கிடைப்பது --------

அ எட்டி திசை     ஆ. எட்டு திசை      இ. எட்டுத்திசை      ஈ. எட்டி இசை

விடை:இ. எட்டுத்திசை  

4.தொன்மை என்னும் சொல்லின் பொருள் 

அ.புதுமை      ஆ. பழமை       இ. பெருமை       ஈ. சீர்மை

விடை: ஆ. பழமை

5.உயிர் எழுத்துக்கள் மொத்தம் 

அ .5       ஆ .7.          இ 12        ஈ .18

விடை :இ 12

கோடிட்ட இடங்களை நிரப்புக

6. பாரதிதாசனின் இயற்பெயர்------

விடை: கனகசுப்புரத்தினம்

 7. தமிழ் கும்மிப் பாடல்________ என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது.

விடை:கனிச்சாறு 

8. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்_______

விடை:தொல்காப்பியம் 

9.நீண்ட நெடுங்காலமாக அறிவியல் சிந்தனைகளோடு விளங்கியவர்கள்_______

விடை:தமிழர்கள் 

 10. எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவு__________ எனப்படும்.

விடை: மாத்திரை 

பகுதி- ஆ

II.குறுவினா

1. பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

  • அமுதம், 
  • நிலவு, 
  • மணம்.

 2. தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

  • செந்தமிழின் புகழ் எட்டுத்திசைகளிலும் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்.

3. பூவின் ஏழு நிலைகள் யாவை?

  1. பூக்கும் பருவத்தின் முதல் நிலை                  _அரும்பு 
  2. மொக்குவிடும் நிலை                                        _மொட்டு     
  3.  முகிழ்க்கும் நிலை                                             _ முகை    
  4. பூவாகும்  நிலை                                                    _ மலர்    
  5.  மலர்ந்த இதழ் விரிந்த நிலை                        _      அலர்   
  6. வாடும் நிலை                                                      _          வீ   
  7. வதங்கிக் கிடக்கும் நிலை                           _       செம்மல்

4. தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் இரண்டு எழுதுக? 

  • கணிதமேதை இராமானுஜம். 
  • குடியரசுத் தலைவர் மேதகு அப்துல்கலாம், 
  • மயில்சாமி அண்ணாதுரை, 
  • இஸ்ரோவின் தலைவர் சிவன், 
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் வளர்மதி

5. ஐந்து வகை இலக்கணம் எவை?

  • எழுத்து 
  • சொல்
  •  பொருள்
  •  யாப்பு 
  • அணி இலக்கணம் 

பகுதி - இ

III. பெருவினா

1. நீங்கள் அறிந்த தமிழ் காப்பியங்களின் பெயர்களை எழுதுக?

ஐம்பெருங் காப்பியம்

  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. குண்டலகேசி
  4. வளையாபதி
  5. சீவக சிந்தாமணி
ஐஞ்சிறு காப்பியங்கள்

  1. உதயணகுமார காவியம்
  2. நாககுமார காவியம்
  3. யசோதர காவியம்
  4. சூளாமணி
  5. நீலகேசி

IV.செயல்பாடு

6th tamil assignment



விடை :

6th tamil assignment


Share:

2 Comments: