> 10th Science Refresher Course 2 Answer key - Tamil Medium ~ Kalvikavi - Educational Website - Question Paper

10th Science Refresher Course 2 Answer key - Tamil Medium

10th Science Refresher Course 2 Answer key - Tamil Medium 

  • 10th science Topic 2 Answer - பாய்மங்கள்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடத்தலைப்பு 2 : பாய்மங்கள் 

மதிப்பீடு:

1. கோடிட்ட இடத்தை நிரப்பவும்

1. விசையின் அலகு நியூட்டன்  ஆகும்

2. எண்மதிப்பும் திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு  வெக்டார் அளவு ஆகும்.

3. நீர்மத்தின் மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதன் மீது செயல்படும் உந்து விசையை அதிகரிக்க வேண்டும்.

4. அழுத்தத்தின் S.I அலகு பாஸ்கல் con/ m2 ஆகும்.

5. வளிமண்டலத்தில் காற்றினால் ஏற்படும் அழுத்தம் வளிமண்டல அழுத்தம் எனப்படும்.

6. திரவங்களின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க  அழுத்தமும் அதிகரிக்கும்.

7. வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி பாதரசமானி ஆகும்.

8. காற்றழுத்த மானியைக் கண்டறிந்தவர். டாரிசெல்லி ஆவார்.

9. பழரசம் அருந்தப்பயன்படும் உறிஞ்சு குழல் வளிமண்டல அழுத்தத்தால்  வேலை செய்கிறது

10. மழைத்துளிகள் இயற்கையாகவே கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம் நீரின் பரப்பு இழு விசையாகும்

II. சரியா? தவறா? கூறுக

1. நீரியல் அழுத்தி பாஸ்கல் விதி தத்துவத்தின் அடிப்படையில் செயலபடுகிறது.

விடை : சரி 

2. நீரின் அடர்த்தி சமையல் எண்ணெயின் அடர்த்தியை விட குறைவு

விடை :  தவறு 

3. நன்னீரை விட உப்பு நீர் அதிகமான மிதப்பு விசையை ஏற்படுத்தும்.

விடை : சரி 

4. திரவமானது கொள்கலனின் அடிப்பாகத்தில் மட்டுமல்ல அதன் சுவர்களின் மீதும் அழுத்தத்தை செலுத்துகிறது.

விடை :  சரி 

5. ஒருபொருளின் எடைமிதப்புவிசையைவிட அதிகமாக இருந்தால் அப்பொருள் மூழ்கும்.

விடை :  சரி 

Share:

0 Comments:

Post a Comment

Popular Posts