> 10th Social Science Refresher Course 4 Answer key - Tamil Medium ~ Kalvikavi
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

10th Social Science Refresher Course 4 Answer key - Tamil Medium

10TH SOCIAL SCIENCE - REFRESHER COURSE MODULE - 4 ANSWER KEY

பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் - புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் - 4 , பிரெஞ்சு புரட்சி - புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள் 

  • பத்தாம் வகுப்பு - சமூக அறிவியல் 
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
  • பாடம் - 4

பிரெஞ்சு புரட்சி - புரட்சிக்கான காரணங்கள் மற்றும் விளைவுகள்

கற்றல் விளைவுகள்

  • பல்வேறு புரட்சிகளின் காரணங்கள் மற்றும் விளைவுகளை விளக்குதல்.

கற்றல் நோக்கங்கள் 

  • பிரெஞ்சு புரட்சி உருவாக காரணமான அரசியல் காரணங்களை அறிதல்.
  • பிரெஞ்சுபுரட்சி உருவாக காரணமான பொருளாதார காரணங்களை பற்றி தெரிந்து கொள்ளுதல்.
  •  பிரெஞ்சு புரட்சி ஏற்படுவதற்கு காரணமாக சமூக காரணங்களை உணரச் செய்தல்.
  • பிரெஞ்சு புரட்சி உருவாக காரணமான அறிவுசார் காரணங்களை புரிந்து கொள்ளுதல்.
  • பிரெஞ்சு புரட்சியின் விளைவுகளை அறிதல்.

ஆயத்தப்படுத்துதல்

  • முடியாட்சி, ஜனநாயகம், சர்வாதிகாரம் போன்ற பல்வேறு வகையான அரசாங்கங்களின் படத்தொகுப்பினை காணொளி காட்சியாகக் காண்பித்து, மாணவர்களை இம்மாதிரியான அரசாங்கத்தின் பல்வேறு அம்சங்களையும், வேறுபாடுகளையும் கூறச் செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

ஆசிரியர் செயல்பாடு

1. பிரான்சின் பல்வேறு லூயி மன்னர்களின் திறமையற்ற நிர்வாகத்தை மன வரைபடம் மூலம் விளக்குதல்.

2. பிரெஞ்சு புரட்சியின்போது அரசு பெருமளவில் கடன் வாங்கியவையும், பிரான்சின் பொருளாதார நிலையினை மோசமாக்கியதையும், இவை பிரெஞ்ச் புரட்சிக்கு வித்திட்டதை ஒப்பிட்டு விளக்குதல்.

3. சமூகமே நாட்டின் அனைத்து மாற்றங்களுக்கும், அடிப்படை காரணம். சமூக பாதிப்பு எங்கெல்லாம் அதிகமாக நிகழ்கின்றதோ, அங்கெல்லாம் சமூக மாற்றம் மக்களால் உருவாக்கப்படும் என்பதை பல்வேறு சமூக நிகழ்வுகள் மூலம் எடுத்துக் கூறல்.

எ.கா: பிரெஞ்சு புரட்சியின் போது மூன்றாம் எஸ்டேட் மக்களின் எழுச்சி.

4. ஒவ்வொரு நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூக அமைப்பு மாற்றங்களுக்கும் அந்நாடுகளில் உள்ள அறிஞர்களின் பங்களிப்பு மூல காரணமாக இருந்துள்ளன என்பதை பிரெஞ்ச் புரட்சியின் தத்துவ ஞானிகளை மேற்கோள் காட்டி விளக்குதல்,

5, பிரெஞ்சு புரட்சியின் விளைவுகளை பிரான்சிலும் மற்றும் பிற உலக நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களை உலக வரைபடத்தின் உதவியுடன் விளக்குதல்.

மாணவர் செயல்பாடு

1. ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாது தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் தன்னை சார்ந்தோரின் நலனின் மீது அக்கறை கொண்டிருந்தால் புரட்சி வெடிக்கும் என்பதை பிரெஞ்சு புரட்சியின் வழியில் சக மாணவர்களிடம் கலந்துரையாடி நிரூபித்து காட்டவும்.

2. ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கும், அந்நாட்டின் போர் நடவடிக்கைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இக்கூற்றின் அடிப்படையில் கலந்தாய்வு செய்க.

3. டெய்லே, காபெல்லே போன்ற வரி முறை பிரெஞ்ச் புரட்சிக்கு ஒரு காரணம் என்பது போல இந்திய சுதந்திர போராட்டத்திற்கு காரணமான ஏதேனும் வரிகள் பற்றி ஒப்பிட்டு விவாதிக்கவும்.

4. வால்டேர், மாண்டெஸ்கியூ, ரூசோ போன்றோரின் புரட்சி கருத்துக்கள் பிரெஞ்சு புரட்சிக்கு மட்டுமின்றி உலகளாவிய அனைத்து புரட்சிகளுக்கும் அடிப்படை என்பதை இந்திய சுதந்திர புரட்சியோடு ஒப்பிட்டு விளக்குக.

5. பிரெஞ்சு புரட்சியின் விளைவாக அரசியல், சமூக ரீதியாக ஏற்பட்ட தாக்கங்களை பட்டியலிடுக.

மதிப்பீடு 

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. பிரெஞ்சு தலைவர்களின் சரியான கால வரிசையைக் கண்டுபிடி.

அ) பதினான்காம் லூயி - நெப்போலியன்-  ரோபஸ்பியர்

ஆ) ரோபஸ்பியர் -   நெப்போலியன் - பதினான்காம் லூயி

இ) பதினான்காம் லூயி -   ரோபஸ்பியர் - நெப்போலியன்

ஈ) நெப்போலியன் - பதினான்காம் லூயி- ரோபஸ்பியர்

விடை :  இ ) பதினான்காம் லூயி -   ரோபஸ்பியர் -  நெப்போலியன்

2. பிரெஞ்சு புரட்சியின் முக்கிய விளைவாக கருதுவது

அ) அரசர் வரம்பற்ற அதிகாரம் பெற்றார்.

ஆ) மதகுருமார்கள் அரசாங்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தினர்.

இ) நடுத்தரவர்க்கம் அரசியல் செல்வாக்கை பெற்றது.

ஈ) வரிச்சுமை கீழ்வர்க்க மக்களால் சுமக்கப்பட்டது.

விடை: இ ) நடுத்தரவர்க்கம் அரசியல் செல்வாக்கை பெற்றது.

3. பிரெஞ்சு புரட்சிக்கு முக்கிய காரணமாக கருதுவது

அ) வரி கட்டமைப்பில் ஏற்ற தாழ்வுகள்.

ஆ) வணிகத்தின் பொருளாதார வெற்றி

இ) ஐரோப்பாவின் கண்ட அமைப்பு

ஈ) பாஸ்டன் தேநீர் விருந்து

விடை : அ ) வரி கட்டமைப்பில் ஏற்ற தாழ்வுகள்.

4 ) பிரெஞ்சு புரட்சிக்கு முன்னர் பிரான்சு மக்கள் எதன் அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தனர் ?

அ) கல்வி நிலை

ஆ) புவியியல் பகுதி

இ) சமூக வர்க்கம்

 ஈ) மத நம்பிக்கை

விடை :  இ ) சமூக வர்க்கம்

5. அமெரிக்க மற்றும் பிரெஞ்சு புரட்சிகள் உலக வரலாற்றில் திருப்பு முனையாக இருந்தன. ஏனெனில் இந்த புரட்சிகளின் முடிவுகள் -------

அ) அடிமைத் தனத்தை ஒழித்தது.

ஆ) ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மக்களை ஊக்கப்படுத்தியது.

இ) மேற்கு அரை கோளத்தில் ஐரோப்பிய செல்வாக்கின் முடிவை குறித்தது.

ஈ) வலுவான சர்வதேச அமைதி காக்கும் அமைப்புகளின் தேவையை குறித்தது

விடை :  ஆ ) ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்பார்க்கும் மக்களை ஊக்கப்படுத்தியது.

6 ) படத்தைப் பார்த்து விடையளி.

இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ள சமூகப் பிரிவினை விளைவாக எந்தப் புரட்சி ஏற்பட்டது ?

  •  பிரெஞ்சுப் புரட்சி 

 இப்படத்தில் மக்கள் தொகை குறைவாகவும் , அதிக நிலவுடைமையாளர்களாக இருந்தவர்கள் யார் என்பதைக் குறிப்பிடவும்.

  • எஸ்டேட்ஸ் ஜெனரல் இரண்டாவது பிரிவைச் சேர்ந்த பிரபுக்கள்.

Share:

0 Comments:

Post a Comment